காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் தாந்திரீக பிரயோகமுறை - 01


அறிமுகம்
பகுதி - ஒன்று


காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் பெரும்பாலான பக்தர்கள் தினமும் பாராயணம் செய்து வருகிறார்கள். விநாயகர் அனைவருக்கும் பிடித்தமான கடவுளும் கூட, பிள்ளையார் என அரசடிமுதல் ஆற்றங்கரை என எங்கும் முதலிடம் பிடிக்கும் கடவுள், எந்த காரியம் செய்யும் போது பிள்ளையார் இல்லாமல் தொடங்குவது இல்லை என்பது மரபு. விநாயகர் பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. விநாயகரது பராக்கிரமம், அனுக்கிரகம் என்பவற்றை விநாயகர் புராணத்தின் மூலம் படித்தறியலாம். இந்தப் பதிவின் நோக்கம் விநாயகர் என்று உருவகப்படுத்தப்பட்ட பிரபஞ்ச மஹாசக்தி பற்றி யோக தாந்திரீக முறைப்படி விளங்கி கொள்வதாகும்.

பொதுவாக யோக தாந்திரீகம் எனும் போது சமஸ்கிருத மந்திரங்க்களையும், தாந்திரீக நூற்களையுமே எண்ணி பெருமிதம் கொள்வோரும் உண்டு, நாத்திகம் பேசும் நண்பர்கள் வெறுப்பதும் உண்டு. இதற்கு காரணம் எமது சித்தர்களது நூற்களை ஆழமாக படிக்காததும், எமது வேர்களை மறந்ததுமே காரணமாகும். சித்தர் நூற்களில் அனைத்துவிதமான மந்திர, யந்திர, தந்திர பிரயோக முறைகளும் உள்ளன.

இங்கு மந்திர, யந்திர , தந்திர பிரயோகம் என்றவுடன் வசியம் செய்வது, மனம் மயக்குவது, அடுத்தவரைக் கெடுப்பது, பில்லி, சூன்யம் என்றே பெரும்பாலும் எண்ணுகிறார்கள், அவை மன சக்தி, மந்திரசக்தி, பிராண சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் ஒருவித காரியமே அன்றி உண்மையில் மந்திர, யந்திர, தந்திர சக்திகளின் பயன்பாடு இல்லை. இவை மூன்றும் மனிதன் தனது உணர்வு (consciousness), மனம். பிராணன், உடல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி தனது ஆற்றலை அதிகரித்துக் கொள்ள எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

ஒரு மனிதனின் ஆற்றல் அவனது உணர்வு(consciousness),, மனம்(Mind), பிராணசக்தி(Prana), உடல்(Body) ஆகிய நான்கும் ஒரு புள்ளியில் குவிந்து பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பு கொள்ளும் போது அவனது ஆற்றல் பேராற்றலாகிறது.  இந்த வழிமுறையினைக்கூறுவதுதான் தாந்திரீகம்.

உணர்வின் துணை கொண்டு பிரபஞ்ச சக்தியினை மனதினால் கவர்ந்து, பிராணனில் கலந்து, உடலில் விழிப்படைய செய்வதே தாந்திரீகமுறையாகும். இந்த முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே பூஜை முறைகளும். பின்னர் இந்த உண்மைகள் அறியாமல் வெறும், பிரசாதம் படைத்து, மணியடித்து அரோகரா போடுவதே பூஜை என்பதாகிவிட்டது. உண்மையில் மனதினை மென்மையாக்க பக்தியுடன் தெய்வத்தை உபசரிப்பதுடன், பிரபஞ்ச சக்தியினை கவரும் அங்க்கங்கள் உள்ளதே பயனுள்ள பூஜை. இந்த அடிப்படையில் எமது ஸ்தூல உடலிலும், சூஷ்ம உடலிலும் உள்ள அழுக்குகள், தீய சக்திகளை அகற்றி நல்ல தெய்வ சக்திகளை கவரும் செயல்முறைகளை எமது முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். அதன் படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் அந்த தெய்வ சக்தி மனதினூடாக உடலிலும், எம்மை சூழவும் விழிப்படைந்து தீய சக்திகள் எண்ண அலைகள் அண்டவிடாமல் இருப்பதற்கான தியான முறைதான் "கவசம்" படித்தல் ஆகும். கந்தசஷ்டி கவசம், விநாயக கவசம் என்பன தமிழில் வெகுவாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும். அந்த வகையில் தமிழில் விநாயகரது கவசத்தின் மூலம் விநாயக சக்தியினை விழிப்படைய செய்யும் தியான முறையினை கூறுகிறோம்.

பொதுவாக நாம் எந்த நாளும் படிப்பதுதானே அதில் புதிதாக என்ன கூறப்போகிறீர்கள் எனற கேள்வி எழுகிறதா நண்பரே! அதற்கான பதில் இதோ, அனேகமாக நாம் தோத்திரங்கள், மந்திரங்கள் சொல்லும் போது மனம் ஒன்றிச் சொல்வதில்லை, அப்படி மனம் ஒன்றி சொன்னாலும் அந்த தெய்வசக்தியினை உடலில் விழிப்பிப்பதில்லை, உடலில் விழிப்படைந்தாலும் எம்மை சூழ விழிப்படைய வைப்பதில்லை. இதனால் நாம் செய்யும் வழிபாடு, சாதனைகள், பாராயணங்களுக்கு முழுமையான பலன் கிடைப்பதில்லை. இந்த பதிவில் அநேகருக்கு பரிட்சையமான விநாயகர் கவசத்தினை இந்த முறையில் எப்படி பயன்படுத்துவது என சுருக்கமாக விளக்குவோம்.

சாதனை முறை நாளை பதியப்படும்.

Comments

 1. சிறப்பான விசயம்.. காத்திருக்கிறோம்.. விரைவில் பதியுங்கள்..

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 2. வணக்கம்,
  தாங்களின் அடுத்த பதிவினை (சாதனை முறையை) எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 3. காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் பெரும்பாலான பக்தர்கள் தினமும் பாராயணம் செய்து வருகிறார்கள். விநாயகர் அனைவருக்கும் பிடித்தமான கடவுளும் கூட, பிள்ளையார் என அரசடிமுதல் ஆற்றங்கரை என எங்கும் முதலிடம் பிடிக்கும் கடவுள், எந்த காரியம் செய்யும் போது பிள்ளையார் இல்லாமல் தொடங்குவது இல்லை என்பது மரபு. விநாயகர் பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. விநாயகரது பராக்கிரமம், அனுக்கிரகம் என்பவற்றை விநாயகர் புராணத்தின் மூலம் படித்தறியலாம். இந்தப் பதிவின் நோக்கம் விநாயகர் என்று உருவகப்படுத்தப்பட்ட பிரபஞ்ச மஹாசக்தி பற்றி யோக தாந்திரீக முறைப்படி விளங்கி கொள்வதாகும். \\\\\\

  இது பலகடவுள்கள் இருக்கின்றன என்பதை வலியுறுத்தும் செய்தியாகும். சித்தர்கள் அனைவருக்கும் ஏற்புடைய கருத்துக்களையும் மருத்துவ முறைகளையும் உருவாக்கியவர்களாக நான் புரிந்திருக்கிறேன்.

  ஆனால் குறிப்பிட்ட கடவுளின் பெயரால் சொல்லப்படும் எதுவும் அந்தக் கடவுள் வடிவத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குப் பொருந்தாதல்லவா?

  அதனால் குறிப்பிட்ட கடவுளின் பெயரால் அல்லாமல் அனைவருக்கும் பொருந்தும்படியான செய்திகளைக் கற்பதும் விமர்சிப்பதும்தான் சரி என நினைக்கிறேன்.

  ஒரே உலகம் ஒரே இறைவன் என்கிற அடிப்படை ஆன்மிகத்துக்கு மாறான எதுவும் மக்களைச் சரியாக வழிநடத்துவதில்லை என்பது எனது கருத்து.

  ஆதலால் கடவுளர்களின் பெயர் குறிப்பிடாமல் பொதுவான இறைக்கோட்பாட்டைப் பற்றி மட்டும் உரையாடுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

  அப்படி இருக்க எத்தனையோ கடவுள் பெயர்களில் ஒன்றைப் பற்றி விரிவாக ஆராய்வதில் பயனில்லை என்பது எனது கருத்து. அது மற்ற நியாயமான பல கேள்விகளுக்கு எதிராக நிற்கும்.

  ReplyDelete
 4. சங்கர் குருசாமி, கௌரிபாலன் அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி,


  அருட்சிவஞான சித்தர் அவர்களே இந்தப்பதிவு முழுமையாக எழுதி மூன்று பகுதிகளாக வலையேற்றியாயிற்று, இன்று (11/06/12), நாளை(12/06/12) இரவு 08.00 அளவில் குகிள் தன்னிச்சையாக பதிப்பிக்கும்.


  அன்பின் சுபாஷ் அவர்கட்கு,

  தங்கள கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், இதில் தாந்திரீகம் என்பதிலேயே இது மதம் சாராத ஒரு உத்தி என்பதனை விளங்கிக்கொள்ளலாம்,

  அடுத்துவரும் பகுதிக‌ளில் இது தொடர்பாக கூறப்படும். இப்பதிவின் பகுதி 03 பகுதியில் நிச்சயம் மற்றைய தெய்வங்கள் அல்லது தம்மை விட ஒரு மஹா சக்தி உண்டென்று நம்பும் அன்பர்களுக்கான சாதனை முறையும் சுருக்கமாக விளக்கப்படும்.

  விநாயகர் என்பது பொதுவாக எமது சமூகம் சார்ந்த அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தெய்வ சக்தி என்பதலேயே இங்கு எடுத்தாண்டோம்.

  மற்றும் சித்தர்கள் ஒவ்வொரு மனிதர் நிலைக்கேற்பவே சாதனைகளையும், வழிபாடுகளையும் ஏற்படுத்தி தந்துள்ளார்கள், தெய்வ சக்தியை மனிதன் பெற்றுக்கொள்வதற்காகவே தெய்வங்களை ஏற்படுத்தினார்கள். மனதின் செயலை அறியாத மனிதன் ஒரே தெய்வம் என்பதனை அறிவதில் உள்ள சிரமத்தால்தான் இப்படி பல தெய்வ வழிபாடுகளை ஏற்படுத்தி அதிலிருந்து முன்னேற வழிகூறியுள்ளார்கள் என்பது எமது கருத்து! அடுத்து வரும் பதிவுகளில் இவை பற்றிய எமது புரிதல்களை பதிவோம்.

  கருத்துக்கூறியமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு