குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, June 12, 2012

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் தாந்திரீக பிரயோகமுறை - 03


பகுதி – மூன்று: சாதனை

 1. முதலில் விநாயகர் கவசம் மனப்பாடமாயிருப்பின் மிக நல்லது, அல்லாதிருப்பின் பகுதி 02 இனை பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளவும்.
 2. விநாயகர் படத்தினை பிரிண்ட் செய்து உங்கள் கண்ணுக்கு நேராக இருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள்.
 3. அதுபோல் இலக்கமிடப்பட்ட மனித உருவத்தினையும் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளுங்கள், இது உங்களை/சாதனை செய்பவரது மாதிரியுருவாகும்.
 4. காலையில் அல்லது மாலையில் குறித்த நேரத்தினை ஒதுக்கி கொள்ளுங்கள், (காலை மாலை 05.30 - 06.30 வரையிலான நேரம் பொருத்தமானது),
 5. ஒரு பாயினை/துணியினை விரித்து கிழக்கு நோக்கி உட்கார்ந்து கொள்ளுங்கள், ஒரு தீர்த்தப்பாத்திரத்தில் தூய தண்ணீர் வைத்துக் கொண்டு மூன்று தடவை உள்ளங்கையில் ஊற்றி உறிஞ்சிக் குடித்துக் கொள்ளுங்கள்.
 6. பின்னர் மெதுவாக மூச்சினை உங்களால் முடியுமான அளவு உள்வாங்கி, முடியுமான அளவு வெளிவிடவும், கவனிக்கவும் மூச்சினை அடக்குவதோ, அளவிற்கு மீறி உள்ளிழுப்பதோ வெளிவிடுவ்தோ கூடாது. இயல்பாக உங்களால் இயன்றளவு ஆனால் விழிப்புணர்வுடன் செய்யவும்.
 7. பின்னர் உங்கள் குருவை அல்லது அகஸ்திய மகரிஷியை மானசீகமாக வணங்கி அவர்களது ஆசியினை பெற்றுக்கொள்ளவும்.
 8. அதன் பின் மனதில் முனிவரது தோற்றத்தினை மனதில் பாவித்து "ஓம் காசிப மாமுனிவரே போற்றி" என 09/27/54/108 தடவை ஜெபித்து அவரது ஆசியினை பெறுவதாக பாவித்துக்கொள்ளவும்.
 9. இதன் பின் "கோபாலனாகிய  (உங்கள் பெய) நான் விநாயக சக்தியினை எனது மனதில், பிராணனில், உடலில் விழிப்படைய செய்யப்போகிறேன், குருவருளாளும், இறையருளாலும் அது சித்தியடையட்டும்" என சங்கல்பம் செய்து கொள்ளவும்.
 10. அதன் பின் உங்கள் முன் உள்ள இலக்கமிடப்பட்ட விநாயகர் படத்தினை ஒன்று முதல் 38 வரையிலான பகுதிகளை பார்த்து உங்களது உடலிலுள்ள அந்த பாகங்களுடன் தொடர்பு படுத்தி பாவித்து வரவும்.
 11. முதலாவது "வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க" விநாயகரது 01 என இலக்கமிடப்பட்ட பகுதியிலிருந்து உங்களது உடலின் தலை முடிப்பகுதியிற்கு தங்க நிறமுள்ள ஒளி வந்து சேர்வதாக மனதில் பாவிக்கவும். இதுபோல் அடுத்த வரியில் உள்ள "வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க; எனும் போது தலையில் ஒளிசேர்வதாக பாவிக்கவும். இப்படி 01 முதல் 30 வரையில் உடல் அங்கங்கள் ஒவ்வொன்றையும் மனதில் பார்த்து வரவும்.
 12. அதன் பின் 31 வது வரி "கிழக்கினிற் புத்தீசர் காக்க;" என்பது வரும் போது உடல் முழுவதும் ஒளி மண்டலமாகி உங்கள சூழ ஒளியாலானகவசம் இன்று கிழக்குதிசையி (நீங்கள் கிழக்கு திசை பார்த்து அமர்ந்திருப்பதால்)உங்களுக்கு முன்னால் தொடங்கி, கடிகார சுழற்சி போல் அதாவது கிட்டத்தட்ட ஒரு 10 அடி தூரத்திற்கு ஒளிவட்டம் உங்கள் உடலிலிருந்து விரிந்து கிழக்கு திசையிலிருந்து தென் கிழக்காக (அக்கினியிற் சித்தீசர் காக்க;) விரிந்து தெற்காக, (உமாபுத்தரிரர் தென் திசை காக்க;), தென் மேற்காக (மிக்க நிருதியிற் கணேசுரர்காக்க) மேற்காக (விக்கினவர்த் தனர் மேற்கென்னுந் திக்கதனிர் காக்க;) வட மேற்காக (வாயுவிற் கசகன்னர் காக்க;)  வடக்காக (திகழ் உதீசி தக்க நிதிபன்காக்க;) வட கிழக்காக (வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க;) வந்து சூழ்ந்து கொள்வதை பாவிக்கவும்.
 13. இப்போது உங்கள் உடலினை சூழ விநாயக சக்தி கவசமாக நிறைந்துள்ளது. உங்கள் மனம், பிராணன், உடல் அனைத்தும் விநாயகருக்குரிய சக்தி நிறைந்துள்ளது. ஆதலால் எந்த தீய சக்திகளும் உங்களை அண்டமுடியாது, இந்த பாவனையுடன் அடுத்த வரிகளை ஜெபியுங்க்கள் "ஏகதந்நர் பகல்முழுதுங் காக்க;இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும் விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க;" என்றவாறு உங்களை சூழவுள்ள தீய சக்திகள் விலகி செல்வதாக பாவிக்கவும்.
 14. இப்பொழுது உங்களை சூழவுள்ள அந்த தெய்வ சக்தியினை உங்களை அண்டியுள்ள உறவினர்கள், செல்வம், பொருள், பதவி, பட்டங்கள் என்பவற்றை நிலைத்திருக்கும் வண்ணம் செய்வதற்கு உங்களில் காணப்படும் இந்த தெய்வ சக்தி அவற்றில் பாய்ந்து நிலைகொள்வதாக பாவித்து (உதாரணமாக உங்கள் மனைவி/கணவன், பிள்ளைகளுக்கு செல்வதாக மனதில் பாவித்து) அடுத்த வசனத்தினை கூறவும்; மதி, ஞானம், தவம், தானம், மானம் ஒளி, புகழ், குலம், வண்சரீரம் முற்றும்; பதிவான தனம், தானியம், கிருகம், மனைவி, மைந்தர்,பயில்நட் பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க;காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்கவென்றி சீவிதம் கபிலர் காக்க;கரியாதியெலாம் விகடர் காக்க;
 15. இறுதியாக உங்கள் மனம், பிராணன், உடல் ஆகியவற்றில் இந்த தெய்வசக்தி நிலையாக காணப்பட்டு அனைத்தும் பிரபஞ்சத்திலுள்ள விநாயக சக்தியுடன் கலந்து அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்வுறுவதாக பாவித்து "என்றிவ்வாறிது தனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் இடையூறொன்றும் ஒன்றுமுறா; முனிவர்காள்; அறிமின்கள்; யாரொருவர் ஓதினாலும் மன்றஆங்கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும்." என்று ஜெபித்து சற்று நேரம் அந்த ஆனந்த நிலையினை அனுபவித்து சாதனியினை முடித்துக் கொள்ளவும்.
 16. பாவனை என்பது மனதில் விழிப்புணர்வுடன் உருவகப்படுத்திப்பார்த்தலாகும் (aware visualization), சாதாரண கற்பனையில் (imagination) மனம் தனது இஷ்டப்படி செல்லும், பாவனையில் மனம் எனது உணர்வின் விருப்பபடி செல்லும்.
 17. ஆரம்பத்தில் கட்டாயம் தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்துவரவேண்டும்.
 18. இதனை தொடர்ச்சியாக செய்துவர உங்கள் ஆழ்மனதில் கட்டளை  சொற்களாக இவை பதிந்து குறித்த காலத்திற்கு பின்பு (சில வருட சாதனையின் பின்) நீங்கள் கூறினாலும் கூறாவிட்டாலும் ஆழ்மனதிலிருந்து விழிப்படைந்து பல அற்புதங்களை செய்யும். இதன் அறிவியல் விளக்கம் என்னவெனில், ஆழ்மனமே (sub conciseness mind) அனைத்திற்கும் அடிப்படை, ஆழ்மனதில் தெய்வ சக்தியை பதிப்பித்தால் அதனை ஆகர்ஷித்து நல்ல காரியங்களை செய்விக்கும், தீய சக்திகளை ஆகர்ஷிக்கும் எண்ணங்களைப் பதிப்பித்தால் தீய காரியங்களை செய்விக்கும். இந்த விநாயகர் கவச சாதனையினால் எமது ஆழ்மனதில் தெய்வ சக்தியை பதிப்பிக்கிறோம். அதன் பயனாக மேல்மனம், உடல் என்பன நல்ல சக்தியை பெற்று இன்பமான வாழ்க்கையினைத் தரும். 
 19. இதனை செய்வதால் கிடைக்ககூடிய பலன்கள் எவை என்பது 46 வது வரியில் கூறப்பட்டுள்ளது, அவற்றை பயிற்சியின் மூலம் உங்கள் சொந்த அனுபவமாக்கிக் கொள்வதே சிறந்தது. 
 20. உங்களது மனதின் ஏகாக்கிர சக்தி, பிராணபலம்,கர்மம் அல்லது ஆழ்மனப்பதிவுகள் என்பவற்றிகேற்ப இந்த சாதனை முடிவில் சங்கல்பிக்கும் எண்ணங்கள் சித்தியாகும். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ அதன் பல மடங்கு பலன் முதலில் உங்களிலேயே தாக்கத்தை ஏற்படுத்தி மற்றவற்றில் ஏற்படுத்தும் என்பதனை மறந்து விடாதீர்கள். அதாவது ஒருவருக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டும் என மனதில் எண்ணி பிரார்த்தித்தால் அது முதலில் உங்கள் மனம், பிராணனில் செயற்பட்டே அவருக்கு பலன் கொடுக்கும், இதே விதிதான் தீய எண்ணத்திற்கும் என்பதனை மறந்துவிடாதீர்கள். ஆதலால் குருபக்தியினை தவறவிடாதீர்கள். 
 21. ஆரம்பத்தில் மனதினைப் இந்த பாவனையில் பழக்கி செய்வதற்கு 15 - 20 நிமிடங்கள் ஆகலாம், பழகிய பின் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய வாறு மனம் பழகிவிடும். 
 22. இதனைப்பயன்படுத்தி இன்புற்றிருக்க குருதேவரையும், அகஸ்திய மகரிஷியயும், எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் பாதம் பணிகிறோம்.

முக்கிய குறிப்பு
நான் விநாயகரை வழிபடுவதில்லை, முருகனைத்தான் வழிபடுவேன், இல்லை உங்கள் பதிவை நான் வாசித்தாலும் நான் முகம்மதியன், கிருஸ்தவன், அல்லது ஒரேயொரு மஹாசக்திதான் உள்ளது என்ற நம்பிக்கை உடையவன் எனக்கு விநாயகர் போல் பல தெய்வ வழிபாட்டில் இஷ்டமில்லை, அப்படியானால் எமக்கு இந்த விநாயகர் கவசத்தினால் பயன் இல்லை என எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம், சித்தர்கள் மனிதகுலம் தொடங்கி இப்பிரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் உரியவர்கள், அதன் அடிப்படையினையும் விளக்கியுள்ளார்கள், இந்த பதிவின் தலைப்பில் என்ன கூறியுள்ளோம் தாந்திரீக பிரயோகம் என்றல்லவா உள்ளது, அப்படியானால் அது ஒரு உத்தி (technique), அந்த உத்தியினை இப்படி மத நம்பிக்கையினை கலக்காமல் செய்ய முடியாதா? என சில அன்பர்களது கேள்விகள் எம்மை நோக்கி எழுவதை உணர்கிறோம். அதற்கான பதில் நிச்சயமாய் முடியும் எனபதாகும். ஆகவே இந்த விநாயகர் கவசத்தில் கூறிய முறையினை வேறு தெய்வ மத நம்பிக்கை உடையவர்களும் பயன்படும் வண்ணம் எடுத்துரைக்கலாம் என எண்ணியுள்ளோம். அதனைப்படித்து பயன்பெற விரும்புபவர்கள் அடுத்த பதிவினை கட்டாயம் வாசிக்கவும். 

சத்குரு பாதம் போற்றி

3 comments:

 1. இந்த பதிவில் முக்கிய குறிப்பு பகுதி மிகவும் கவனிக்க வேண்டியுள்ளது. தங்களின் அடுத்த பதிவில் தாங்கள் கூறும் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 2. ஆர்வம் தெரிவித்த அருட்சிவஞான சித்தர் அவர்கட்கு நன்றி, கட்டாயம் பதிகின்றேன்

  ReplyDelete
 3. அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்ப் பார்க்கின்றேன். நன்றி !

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...