குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, June 11, 2012

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் தாந்திரீக பிரயோகமுறை - 02


பகுதி இரண்டு:
விநாயகர் கவசமும் விளக்கமும்
இந்தப் பகுதியில் விநாயகர் கவசத்தின் வரிகளை ஒவ்வொரு உறுப்புடனும் தொடர்புபடுத்தும் வண்ணம் இலக்கப்படுத்தியுள்ளோம். அத்துடன் சில வழக்கில் இல்லாத தூய தமிழ் சொற்களை அர்த்தம் விளங்கி செய்வதற்கேற்ப அடைப்புக்குறியிற்குள் தந்துள்ளோம். கீழ்வரும் படம் விநாயகரது தெய்வசக்தியினை எமது உடலினுள் பாய்ச்சும் பாவனையினை முதல் நான்கு வரிகளுக்கு மட்டும் காட்டப்பட்டுள்ளது. இதைப் போல் மற்றைய உறுப்புகள் அனைத்திற்கும் செய்யவேண்டும் என்பதனை புரிந்துகொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறோம். 31 தொடக்கம் 38 வரை உடலை சூழ கவசமிடும் திசை ஒழுங்குமுறையினைக் காட்டுகிறது. விரிவான சாதனா படிமுறைகள் நாளைய பதிவிலிடப்படும். அதற்கிடையில் கீழ்வரும் விநாயகர் கவசத்தினை ஒன்றுக்கு பலமுறை வாசித்து மனதில் பதிவித்துகொண்டு அடுத்த பதிவினை கட்டாயம் பாருங்கள். 
 1. வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
 2. வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க;
 3. விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க;
 4. புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க;
 5. தடவிழிகள் பாலசந்திரனார் காக்க;
 6. கவின்வளரும் அதரம் கசமுகர்காக்க:
 7. தால் (சருமம், தோல்) அங்கணக்டரீடர் காக்க;
 8. நவில் சிபுகம் (கன்னம்) கிரிசைசுதர் காக்க;
 9. தனி வாக்கை விநாயகர்தாம் காக்க;
 10. அவிர் நகை (உதட்டுச் சிரிப்பு) துன்முகர்காக்க;
 11. அள்எழிற் செஞ்செவி பாசபாணி காக்க;
 12. தவிர்தலுரு திளங்கொடி போல்வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க;
 13. காமரு பூமுகந்தன்னைக் குணேசர் நனிக்காக்க;
 14. களம் (தொண்டை) கணேசர் காக்க;
 15. வாமமுறும் இருதோளும் வயங்குகந்த பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க;
 16. ஏமமுறு மணிமலை (எலும்பு பொருத்து) விக்கின விநாசன் காக்க;
 17. இதயந்தன்னைத்தோமகலுங் கணநாதர் காக்க;
 18. அகட்டினைத் (அடிவயிறு) துலங்(கு) ஏரம்பர் காக்க;
 19. பக்கம்இரண்டையும் தராதரர் காக்க;
 20. பிருட்டத்தைப் (இடுப்பின் பூட்டு முதல் ஆசனம் வரையிலான பகுதி) பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க;
 21. விளங்கிலிங்கம் (குறி)  வியாள பூடணர்தாம் காக்க;
 22. தக்கருய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க;
 23. கச்சனத்தை (குறிக்கும் குதத்திற்க்கும் நடுவிலான மூலாதாரப்பகுதி) அல்லல் உக்க கணபன் காக்க;
 24. ஊருவை (தொடை)மங்களமூர்த்தி உவந்து காக்க;
 25. தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க;
 26. இரு பதம் ஏகதந்தர் காக்க;
 27. வாழ்கரம் கப்பிரப்பிரசாதனர் காக்க;
 28. முன்கையை வணங்குவார்நோய் ஆழ் தரச்செய் ஆசாபூரகக் காக்க;
 29. விரல் பதுமத்தர் காக்க;
 30. கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க;
 31. கிழக்கினிற் புத்தீசர் காக்க;
 32. அக்கினியிற் சித்தீசர் காக்க;
 33. உமாபுத்தரிரர் தென் திசை காக்க;
 34. மிக்க நிருதியிற் கணேசுரர்காக்க;
 35. விக்கினவர்த் தனர் மேற்கென்னுந் திக்கதனிர் காக்க;
 36. வாயுவிற் கசகன்னர் காக்க;
 37. திகழ் உதீசி தக்க நிதிபன்காக்க;
 38. வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க;
 39. ஏகதந்நர் பகல்முழுதுங் காக்க;
 40. இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;
 41. இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி
 42. உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும் விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க;
 43. மதி, ஞானம், தவம், தானம், மானம் ஒளி, புகழ், குலம், வண்சரீரம் முற்றும்; பதிவான தனம், தானியம், கிருகம், மனைவி, மைந்தர்,
 44. பயில்நட் பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க;
 45. காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க;
 46. வென்றி சீவிதம் கபிலர் காக்க;
 47. கரியாதியெலாம் விகடர் காக்க;
 48. என்றிவ்வாறிது தனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் இடையூறொன்றும் ஒன்றுமுறா; முனிவர்காள்; அறிமின்கள்; யாரொருவர் ஓதினாலும் மன்றஆங்கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும்.
நாளைய பதிவில் சாதனைப்படிமுறைகளைப் பார்ப்போம்.
சத்குரு பாதம் போற்றி


1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட...