குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 23, 2012

பிராண சக்தி விழிப்பு இரகசியம்



பிராணாயாமம் என்பது யோகம் பழகுபவர்களிற்கு முக்கியமான ஒரு பயிற்சியாகும். இன்றைய நோக்கில் யோக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் வரும். பிராணாயாமம் பழகினால் உடல் ஆரோக்கியம் வரும் என்று யோகா நிலையங்கள் போதித்து வருகின்றன. இது உண்மையானாலும் இதை விட ஒரு அரிய விடயம் இதில் பொதிந்துள்ளது என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

முதலாவது பிராணன் என்பது மூச்சு அல்ல, மூச்சு பிராணனை உடலிலிருந்து கட்டுப்படுத்த உபயோகிக்கும் ஒருசாதனம் என்பதனை யோகம் பழக விரும்புபவர்கள் மனதில் இருத்த வேண்டும். மனிதன் பஞ்ச கோசங்களால் ஆனவன் என்பது யோக தத்துவம், சித்தர் தத்துவங்கள் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பஞ்ச கோசங்களில் அன்னமய கோசம் என்பது எமது ஸ்தூல உடல், மனோமய கோசம் என்பது மனம் இவற்றை இரண்டையும் இணைக்கும், செயற்படுத்தும் சக்திதான் பிராணன், இந்த பிராணன் மேற்குறிப்பிட்ட அன்னமய, மனோமய கோசங்களில் பயணிப்பதற்கு உள்ள அமைப்புகள் தான் உடலில் உள்ள ஆதார சக்கரங்களும், 72000 நாடிகளும், ஆதாரங்கள் என்பன மொலாதாரம, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்சை, ஆறும் சகஸ்ரதளம் என்பது இந்த ஆறு ஆதாரங்களினது சேர்க்கையும் ஆகும். இவை ஒவ்வொரு சம்பிரதாயங்களுக்கு ஏற்ப மாறுபடும் (கோரக்கரின் வகைப்படுத்தல் பிரகாரம் எட்டு ), இவை உண்மையில் ஸ்துல உடலில் இருப்பவையல்ல, மனோமய கோசத்தில் பிராணனின் ஓட்ட ஒழுங்கிற்காக  சித்தர்களால் உருவாக்கப்பட்டவை, மன இயக்கத்தின் படி மூச்சு மாறும், மூச்சின் மாற்றத்தின் படி பிராணனின் ஓட்டம் மாறுபடும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடலில் உள்ள சக்கரங்கள், இவை தற்போது போதிக்கப்படுவதுபோல் குறித்த இடத்தில் மாத்திரம் இருப்பவை அல்ல, இன்னும் பல சக்கரங்கள் உள்ளன, சித்தர்களால் வழங்கப்பட்டுள்ள சக்கர வரைபடம் ஒருவருடைய பிராணனை ஒழுங்கு படுத்தி பரிணாமத்தில் மேலே கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். அதாவது முக்தி பாதையில் செல்வதற்கான வரைபடமாகும். 

அதாவது மஹா பிராணன் எனப்படு பிரபஞ்சச பிராணன் மூச்சு உள்ளிழுக்கும் பொது சகஸ்ராரம் உடாக வந்து ஒவ்வொரு ஆதார சக்கரங்களூடாக கிழிறக்கி மூலாதாரத்திற்கு சென்று பின் அங்கிருந்து இடகலை, பிங்கலை நாடிகலூடாகவும் உப நாடிகலூடாகவும் உடலிற்கு செலுத்தப்படுகிறது. இந்த பிராண சக்தியும் அன்னமய கோசம் ஏற்கும் உணவிலுள்ள சத்துகளும் சேர்ந்து உடலினதும், மனத்தினதும் இயக்கத்தினை சரிவர செய்கின்றது. உண்மையில் நோய்வந்து மருந்து உண்ணும் போது மருந்தும் உணவும் நோய்வந்த பகுதியினை மீளமைக்கவும் சரி செய்யவும் தேவையான மூலப்பொருளை வளங்குகின்றணவே தவிர குணப்படுத்துவதில்லை, அதனால் தான் ஆங்கிலத்தில் "Doctor treat; God cures" என்பார்கள், இந்த கடவுள் என்பது பிராண சக்தியே ஆகும். இந்த பிராண சக்தி உடலில் எவ்வளவு இருக்கின்றதோ அந்தளவிற்கு உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

இந்த மஹா பிராணசக்தி ஒவ்வொருவருடைய பிராணமய கோசத்திலும் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் மனிதன் கடவுளின் அமிசம், தான் கடவுள் என்பதனை மாயையினால் மறந்துவிட்ட கடவுள், அல்லது இப்படிசொல்லலாம் மஹா பிராண சக்தி எந்த விதத்திலும் கலப்பற்று சுயமாக இயங்கும் நிலை கடவுள் அல்லது பரா சக்தி, கட்டுப்பட்டு சுருண்ட நிலை மனிதன் அல்லது குண்டலினி. அதாவது இரண்டும் ஒன்றுதான் ஆனால் பிராணனின் விழிப்பு நிலை வித்தியாசம், இதுவே கடவிளிற்கும் மனிதனிற்கும் உள்ள வேறுபாடு. 

இதனை அறிந்த சித்தர்கள் பிராணமய கோசத்தில் உறங்கும் மகா பிராண சக்தியினை விழிப்படைய வைத்து ஒவ்வொரு மனிதனும் கடவுளாகும் நிலையினை அடைவதே யோக சாதனையின் குறிக்கோள். 

பிராணயாமத்தின் பயன்பாடு 
பிராணாயாமத்தின் போது உடலின் நாடிகள் மெதுவாக உஷ்ணமடைகின்றது, இது மெதுவாக மூலாதாரத்தில் உறைந்துள்ள மஹா பிரணனான குண்டலினியை உஷ்ணப்படுத்தி விழிப்படைய வைக்கிறது, இந்த வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது மஹா பிராணன் சுழுமுனை  நாடியினுடாக ஆக்ஞ்ச சக்கரத்தினை அடைந்து பின்னர் மூலாதாரத்திற்கு மீண்டு வருகிறது. இதுவே சுருக்கமான விளக்கம். ஆனால் சுழுமுனை விழிப்படையாத நிலையில் பிராணன் வேறு நாடிகளுடாகவும் செல்லும், இதனால் பல்வேறு வேண்டத்தகாத விளைவுகளும் ஏற்படலாம். 

எல்லாவித பிராணயாமங்களும் மகா பிராணனை விழிப்படைய செய்வதில்லை, சிலது பிராணன் பயணிக்கும் நாடிகளை சுத்தி செய்பவை, 

எப்படியாயினும் பிரணாயாம பயிற்சி தகுந்த குருவினை அண்டி செய்யவேண்டிய பயிற்சி என்பதனை பழக விரும்புபவர்கள் மனதில் இருத்துதல் அவசியம்.

ஓம் சத்குரு பாதம் போற்றி! 

4 comments:

  1. பிராணாயாமம் பற்றி அழகாக விவரித்து இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  2. யோகத்தைப்பற்றி ஒரு நல்ல வலைப்பக்கத்தை இவ்வளவு நாளுக்குப்பிறகு கண்டுபிடித்துள்ளேன். ஒவ்வொரு பதிவுக்குப்பின்னே கடும் உழைப்பும் சிரத்தையும் உண்மையும் தெரிகிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அய்யா, ஆழமான யோக கருத்துகளை மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தங்களுடைய கட்டுரைகள் அனைத்தும் அமைத்துள்ளன. மேலும் என்னை போன்ற ஆரம்ப நிலை சாதகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்துள்ளது. தயவு செய்து தாங்கள் இந்த அறிவு விளக்கப்பநியினை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறையாற்றலை வேண்டிகொள்கிறேன். Please continue this good work.

    ReplyDelete
  4. By reading this it is easy to understand such complicated things

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...