குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 27, 2012

சித்த வித்யா கேள்வி பதில்கள்


அன்பர்களே இந்த பதிவு வாசகர் ஒருவரின் கேள்விகளுக்கான பதில்களை கொண்டிருக்கிறது, இவை அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனக்கருதி இங்கு பதிவிடப்படுகிறது. 

அன்புடைய சுமனன் அவர்களுக்கு ,

வணக்கம. நன் ஒரு Software Engineer. உங்களுடய ப்ளாக் படித்தேன், மிகவும் அருமை. நீங்கள் சொல்லியிருந்த எளிய யோகா பயிற்சி செய்து பார்த்தேன்(சுவாசத்தை கவனிக்கும் பயிற்சி). இப்பயிற்சியினை நான் செய்தபோது நான் பெற்ற அனுபவத்திலிருந்து சில கேள்விகள் கீழே கேட்டு உள்ளேன் தயவு செய்து பதில் கூறவும்.


நீங்கள் கேட்கும் கேள்விகள் இந்த பதிவுகள் தொடர்பானது என்ற அனுமானத்திலேயே பதிலளிக்கப்படுகிறது. 

1 . என் சுவாசம் ஆழமாக இருக்கிறது, ஆனால் பயிற்சி நேரம் முழுவதும் எனது சுவாசம் ஒரே சீராக இல்லை. என் இப்படி ஆகிறது ? நான் தவறாக பயிற்சி செய்கிறேன ?


தங்களுக்கு ஆஸ்மா போன்ற சுவாச நோய்கள் இல்லாத பட்சத்தில் இந்த அறிகுறி உங்கள் எண்ண‌ சலனத்தினை குறிப்பதாகும். அதாவது உங்கள் சுவாசப்பை பூரண ஆரோக்கியத்தில் இருப்பின் சுவாச ஓட்டத்தின் மாறுதல் மனதில் எழும் எண்ண‌ அலைகளினால் மாற்றப்படுகிறது என்பதனை உணருவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், ஆகவே உங்களுக்கு எதுவிதமான சுவாச நோயும் இல்லாத பட்சத்தில் இது உங்களுடைய மனம் சலனம் அடைவதால உருவாகும் நிலையாகும், ஆதலால் தொடர்ந்து பயிற்சி செய்வதன் முலம் ஆழாமான சுவாசம் கைவரும். 


எனினும் நீங்கள் கோபம், மகிழ்ச்சி போன்ற எந்த விதமான மன எழுச்சி ஏற்பட்டாலும் உங்களுடைய சுவாசத்தின் அளவு மாறுபடும். இது பற்றி விரிவாக வேறொரு பாடத்தில் விளக்குவோம். எமது பதிவுகளில் தரப்பட்ட இது தொடர்பான மற்றைய பதிவுகளையும் இங்கே பார்க்கவும். 


2 . பயிற்ச்சியின் போது சிலவேளைகளில்(மிக மிக சிலவேளை) மூச்சு வெளியேறிய பின்பு சில விநாடி சுவாசம் கொள்ளாமல் அப்படியே சுவாசிக்காமல் இருக்கிறேன். இது இயல்புதான அல்லது பிழையா ? (எனது சுய முயற்சியால் நான் சுவாசத்தை நிறுத்தவில்லை)


இது மிகவும் சரியான அனுபவம், உண்மையாக பயிற்சிக்கும் போது கும்பகம் எனும் முச்சடங்கும் நிலை தானாக ஏற்படும், ஆதலால் இது பற்றி நீங்கள் பயப்படத்தேவையில்லை. இது சரியான நிலையே ஆனால் உங்கள் முயற்சியினால் மூச்சை அடக்கவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்படி நடக்குமாக இருந்தால் பயிற்சியின் பின்னர் உங்கள் உடல் மனம் என்பன மிக உற்சாகமாக இருக்கும், நீண்ட நேரம் களைப்பின்றி வேலை செய்யக்கூடிய நிலை ஏற்படும், இவற்றின் மூலம் சரியாக செய்கிறீர்கள் என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். 


3 . எந்த வேளையில் / நிலையில் இந்த பயிற்சியினை செய்யகூடாது ? எவ்வளவு நேரம் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம் ?


காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, 


இப்படி நேரம் கிடைக்காத மட்டில் உணவு அருந்தி நான்கு மணி நேரத்தின் பின் செய்யலாம். இதெல்லாம் விட முக்கியமானது முதலில் உங்கள் மனம் விரும்பும் நேரத்தில் செய்யப்பழக்கி பின்னர் இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக்கொள்வது, இயல்பாக மூச்சினை அவதானிப்பதற்கு பொதுவாக எந்த விதிகளும் இல்லை, 


உங்களால் முடிந்த வரை மனம் உடல் விரும்பும் வரை செய்யுங்கள். 


4 . இபயிர்ச்சியினை மேற்கொள்ளும்போது எனது வலது காலில் சூகை பிடிக்கிறது(சிறுது நேரம் உள்டல் பக்கத்தை அசைக்காமல் இருந்ததால் ரத்த ஓட்டம் நின்றுவிடுமே ) இது எதுவும் உடலுக்கு உபாதை உண்டாக்காது அல்லவே ?


பயிற்சியினை உட்கார்ந்து செய்கிறீர்கள் அல்லவா, பயிற்சி முடிந்து எழுந்தவுடன் சிறிது உடலினை உங்களால் இயன்றவரை அசைத்து செய்யமுடிந்த அசைவுகளை செய்யவும். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் இப்படியான பிரச்சனை வராது, உங்கள் வயது, உடலாரோக்கியத்தினை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் ஆரோக்கியமானவர் என்ற அனுமானத்தில் தான் இந்த பதில்கள் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். தாங்கள் இருதய நோயாளியாகவோ வேறு நோய்கள் உள்ளவராக இருந்தால் உங்களுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும். 

----------------------------------------------------------------------------------------------------------------

காயத்திரி மந்திரத்தை பற்றி கூறியிருந்தீர்கள் ..காயத்திரி மந்திரத்தை எப்போது , எதனை முறை கூறவேண்டும்?
இதுவும் மேலே கூறப்பட்ட படி காலை சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்னராகவும் பின்னராகவும், அதேபோல் கூறிய அஸ்தமனத்தின் முன்னரும் பின்னரும் அரைமணி நேரத்திற்குள்ளே செய்வது மிக மிக விசேடமானது, 

ஆரம்பத்தில் 9 இலிருந்து 27 , 54 , 108 , வரை கூறலாம், அதன் அர்த்தத்தினை மனதில் நினைத்தபடி வாயால் உச்சரித்து கூறலாம், பயிற்சி அடைந்த பின்னர் மனதில் அர்த்தத்தினை நினைத்தவண்ணம் மனிதிலேயே கூறும் நிலையினை அடையலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------
ஆக்ஞா சக்கரத்தை விழுப்பிக்க என்ன செய்யவேண்டும் ?


மூலாதாரம் விழிப்படையாமல் ஆக்ஞ்சா விழிப்படைந்து என்ன பயன், பைத்தியம்தான் பிடிக்கும் நீங்கள் குறிப்பாக எதனையும் வலிந்து விழிப்படைய வைக்க முயல வேண்டாம். பொதுவாக நீங்கள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் குறித்த சக்கரங்கள் சிறிய அளவில் விழிப்படைந்தால் மட்டுமே எதனையும் செய்ய முடியும், உங்களது பரிணாம உயர்வுக்கும் பிராண சக்தியினா அளவிலும் ஒவ்வொரு சக்கரங்களின் படிப்படியாக விழிப்படையும். 


மிக எளிய சுருக்கமான பாதுகாப்பான வழி நாம் குறிப்பிட்ட சுவாச பயிற்சியும் காயத்ரி மந்திர ஜெபமுமே! எப்படியாயினும் குரு தீட்சையுடன் உங்கள் சித்த சம்காரங்கள் (ஆழ் மன பதிவுகள் ) சுத்தம் செய்யாமல் இந்த முயற்சியில் இறங்கினால தங்கள் இயல்பு மன உடல் நிலைகள் பாதிப்படையும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். 


அடுத்து இந்தக்கேள்வியினை உங்களிடமே இப்படிக் கேட்டுப்பாருங்கள் " எனக்கு ஆக்ஞ்ச சக்கரம் விழிப்படைந்தால் என்ன பலன் என்று? " ஒரு முறை நான் எனது குரு நாதரை வற்புறுத்தி இதனை கற்றுத்தரும் படி கேட்க அவர் சொல்லித்தார், அப்போது எனது வயது அனுபவம் என்பன மிகக்குறைய, அவற்றை செய்தபின்னர் முன்னால் வந்து நிற்பவர்கள் அனைவரது எண்ணங்களும் தெரியத்தொடங்கியது, இப்படி என்னை சுற்றி நடக்கும் எல்லா விடயங்களும் வித்தியாசமாக விளங்கத்தொடங்கியது, நான் மிகவும் மன குழப்பம் அடைந்து விட்டேன், அதனால் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை, இப்படியான நிலையில் எனக்கு திரும்பவும் குரு நாதரிடம் சென்று கேட்க பயமாக இருந்தது, மாலை வேளைகளில் சிறிது தூரம் நடப்பார், அந்த வேளைகளில் அவருடன் நானும் சேர்ந்து நடப்பேன், அவ்வாறு நடக்கும் போது ஒருநாள் அவராகவே "தம்பி பக்குவம் இல்லாமல் ஆஞ்சா சக்கரம் விழ்ப்படைந்தால் இப்படித்தான் இருக்கும்" என சிரித்துக் கொண்டு கூறினார். அதன் பின் எனக்கு அப்படியான தோற்றங்கள், எண்ணங்களை அறியும் தன்மை அற்றுப்போனது. 


ஆகவே நண்பரே உங்களது ஆர்வம் நியாயமானது, என்றாலும் ஆராய்ந்து சரியாக குரு முறையாக செய்ய வேண்டிய விடயம் என்பதனை மனதில் ஆழமாக கொள்ளுங்கள் 

---------------------------------------------------------------------------------------------------------------
நண்பரே நான் ஆன்மிக வழித்தடங்களுக்கு புதியவன். எனக்கு எப்படி, யாரை குருவாக தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை . எனது ஆன்மிக பயணத்தை தொடர நீங்கள் எனக்கு உதவ வேண்டும்?


கவலை வேண்டாம் நண்பரே, ஆன்மிகம் லௌகிகம் என்ற பாகுபாடெல்லாம் வேண்டாம். கிடைத்த வாழ்வை நேர்மையாக குருவை பணிந்து இன்பமாக அனுபவியுங்கள், ஆதிகுரு அகஸ்தியரை அல்லது உங்கள் மனம் விரும்பும் குருவை மனதில் பிரார்த்தித்து வாருங்கள், வழிகாட்டுவார்கள். 


எப்படி அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பதனை எமது பதிவுகளில் கூறியுள்ளோம், படித்து பயிற்சி செய்யுங்கள். 


சத்குரு பாதம் போற்றி, 



3 comments:

  1. சிறப்பான விளக்கங்கள். அருமை. அந்த நண்பருடைய சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என எண்ணுகிறேன்.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. //உங்கள் என்ன சலனத்தினை//

    //மனதில் எழும் என்ன அலைகளினால் மாற்றப்படுகிறது என்பதனை//

    இரண்டிலும் 'என்ன' என்பது 'எண்ண' என வரும். சரி செய்துவிடுங்கள் சுமனன்....

    ReplyDelete
  3. நன்றி நண்பரே! திருத்தப்பட்டுள்ளது,

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...