சித்த வித்யா பாடங்கள்: 08 சூஷ்ம உடலும் அதன் செயல்முறை அடிப்படையும்

மனிதனின் அமைப்பு ஸ்தூலம் சூஷ்மம் என இருவகைப்படும் எனமுன்னரே கண்டோம். இன்றைய பதிவில் சூஷ்ம உடல் எனறால் என்னவென்று பார்ப்போம்.

சூஷ்ம உடல் மனம், புத்தி, சித்தம், அஹங்காரங்களினால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதன் வடிவம் எனது உடலின் வடிவத்தினை ஒத்து இருக்கும், ஏனெனில் நாம் எமது உடலைவைத்தே எம்மை மனதில் நாமே அறிந்துகொள்கிறோம்.

அதேவேளை சாதனை/பயிற்சியுள்ள மனம் சூஷ்ம உடலை மாற்றக்கூடிய திறமை உள்ளது. அதாவது நாம் கூறவருவது "மனிதன் தனது மனம் புத்தி, சித்த, அஹங்காரங்களில் தன்னை உருவகப்படுத்திக்கொள்வதற்கேற்ப அவனது சூஷ்ம உடல் வடிவத்தினை பெறும், சாதாரணமாக இயற்கையின் பரிணாமத்தில் நாம் பெற்ற வடிவத்தினை ஒத்ததாக காணப்படுகிறது."

இந்த சூஷ்ம உடலின் வடிவத்திற்கேற்றவாறே ஸ்தூல உடல் உருவாக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சூஷ்ம உடலாகிய எமது எண்ணம், அவற்றின் சேர்க்கையால் உருவாகும்  மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் எனபனவே.

சூஷ்ம உடலினை வசப்படுத்தும் சாதனையில் முதலில் மனதினை, எண்ணத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து சித்ததினை வசப்படுத்த வேண்டும், சித்தம் என்பது ஆழ்மனதின் ஒரு கூறு அல்லது இணைப்பு, இது பிரபஞ்ச மனதுடன் தொடர்பு கொள்ளக்கூடியது. இதனை வசப்படுத்தும் சாதனையினை பின்னர் விளக்குவோம்.

மனம், சித்தம் வசப்பட்டாலும் அதனை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்ல புத்தி வலுப்பட்டிருக்கவேண்டும். இதற்கான வழி தியானம்.

இறுதியாக மனிதனை சூஷ்மத்திலும், ஸ்தூலத்திலும் இயக்கும் அகங்காரத்தினை சுத்தி செய்து வசப்படுத்த வேண்டும். இதற்கு ஒரேயொரு வழி பக்தி எனும் மேலான சக்தியினை பணிதல். இதனை சற்று விளக்கமாக பார்ப்போம்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு விருப்பு வேண்டும், விருப்பு என்பது உண்மையில் எமது நான் எனும் அகங்காரம் அதுவாக விரும்புதல் ஆகும். நான் நல்லவன் என்ற அகங்காரத்தில் நாம் செயற்படவேண்டுமாயின் முதலில் எமது மனம் நல்ல எண்ணங்களை எண்ணப்பழக வேண்டும், பின் அவை சித்ததில் பதியவேண்டும், அவற்றை புத்தி இது நல்லது, இது கெட்டது என பகுத்து இறுதியாக எமது அகங்காரம் நான் நல்லவன் என உறுதி அடையும் போது நாம நல்லவராகிறோம்.

இந்த செயன்முறைதான் கடவுளை அடைதலிலிருந்து, நாளாந்த வாழ்க்கை வரைக்கும் அனைத்திற்கும் அடிப்படை, இந்த அடிப்படையில் நீங்கள் கடவுளையும் உணரலாம் (இதற்குதான் தெய்வ உபாசனை வகுக்கப்பட்டிருக்கிறது)வியாபாரம் தொடங்கலாம், உயர்ந்த உத்தியோகத்தினை அடையலாம்.

இறுதியாக சூஷ்ம உடல் எப்படி இயங்குகிறது என்பது பற்றி விளக்கு இன்றை பாடத்தினை முடிவிற்கு கொண்டுவருவோம்.

சூஷ்ம உடலின் கூறுகள் எவை என அறிந்தோம், இவற்றை இணைத்து இயக்கும் ஒரு சக்தி பிராணன், பிராண சக்திதான் சூஷ்ம, ஸ்தூல உடல்களின் இணைப்பு, ஆக பிராணனின் அளவு, அதிர்விற்கேற்ப ஒருவரின் சூஷ்ம உடலின் பலம் இருக்கும். இதனைக் கொண்டு மானசீகமான சாதனைகள் பல செய்யலாம்.

உதாரணமாக பிரார்த்தனை செயற்படுவது இந்த சூஷ்ம உடலின் மூலம்தான், இது எப்படி எனப்பார்ப்போம், "எனக்கு தேவையான அளவு பணம் தேவை" என பிரார்த்திக்கிறோம் எனக்கொள்வோம்.

முதலில் ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த அளவு இந்த பிரார்த்தனையினை செய்துவர பணம் வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது, பின்னர் அது படிப்படியாக சித்தத்தில் படிந்து பிரபஞ்சமனதிற்கு செலுத்தப்படுகிறது, அது எப்படி கிடைக்கும் என்ற வழிமுறையினை புத்தி ஆராய்கின்றது, அதேவேளை பிரபஞ்ச மனதில் பதியப்பட்ட எண்ணம் பிரபஞ்சஞானத்தினால் அதற்குரிய சந்தர்ப்பங்களை அவனிற்கு ஏற்படுத்துகிறது, அதன் பின் அவன் அவனது அகங்காரம் "நான்" இந்த வியாபாரத்தினை ஆரம்பித்தால் எனக்கு பணம் வரும்" என உறுதி அடைந்து செயலில் இறங்கி வெற்றிபெறவைக்கிறது.

இதே செயல்முறையினை இறைவனை நம்பும் பக்தர்கள், "பகவானே" என தமக்கு வெளியில் அகங்காரத்தினை உருவாக்கி காரிய வெற்றி பெறுகின்றனர்.

இவற்ற்றில் விளக்கப்பட்ட அடிப்படையில் சூஷ்ம உடலின் அங்கங்களான மனம், சித்தம், புத்தி, அஹங்காரங்களினை செயற்படுவதனால் பெறும் சித்திகள்தான் தொலைவில் உணர்தல், தூரக்கேட்டல், தூரதரிசனம் எனபவையெல்லாம். இவற்றின் அடிப்படையினை வரும் பதிவுகளில் பார்ப்போம். 

Comments

 1. நமது சூட்சும உடலின் உண்மையான பிரயோகம் என்ன எப்படி என்று அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள். மனிதன் என உண்மையில் அறியப்படும் அவனது அஹங்காரம் எவ்வாறு உருவாகிறது எனவும் சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. மிகவும் தெளிவாக அற்புதமாக விளக்கிச் செல்கிறீர்கள் ஐயா.

  மிக்க நன்றி மேலும் தொடருங்கள்.
  அன்புடன்,
  வெங்கட்.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு