சித்த வித்யா பாடங்கள்: 07 சித்த, யோக வித்தைகளும் பஞ்சகோச சுத்தியின் அவசியமும்

பாடம் 04, 05 இல் மனிதனது சூஷ்ம அமைப்பு பற்றி பார்த்தோம், இன்றைய பதிவில் சூஷ்ம அமைபுகளான மனம், பிராணன், புத்தி, ஆன்மா ஆகியவை எப்படி சூஷ்ம உடலினை ஆக்குகிறது என்பதனைப் பார்ப்போம்.

சித்தரிலக்கியங்கள் வாசித்தவர்கள் பஞ்சகோசங்கள் உண்டு என்பதனை அறிந்திருப்பர், அவை அன்னமய கோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என ஐந்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது,

கோசம் என்பது சூஷ்ம அமைப்புகளின் சேர்க்கை எனவே விளங்கிக்கொள்ளவேண்டும். அதாவது பஞ்சபூதங்களான நிலம், காற்று, நெருப்பு, நீர்,ஆகாயம் என்பன வெவ்வேறு விகிதத்தில் சேர்ந்து இந்த கோசங்களை ஆக்குகின்றது. இதன்படி ஒவ்வொருவருக்கும் இந்த பஞ்சகோசங்களின் தன்மையும் அளவும் வேறுபடும். உதாரணமாக அன்னமயகோசமாகிய ஸ்தூல உடலினை எடுத்துக்கொண்டால் நல்ல சத்துணவு உண்டு, உடற்பயிற்சி செய்பவருக்கும் சத்துணவு உண்ணாமல் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவரது ஆரோக்கியம் ஆற்றலில் வேறுபாடு இருப்பதுபோல் பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களுக்கும் தகுந்த உணவும் பயிற்சியும் அவசியம். இவற்றையே பதஞ்சலி முனிவர் அழகாக பஞ்சகோசங்களையும் படிப்படியாக இணைத்து வலிமையுறச் செய்யும் பயிற்சியினை அஷ்டாங்க யோகமாக வகுத்துதந்தார்.

 • இயம, நியமங்கள் = அன்னமய, மனோமய கோச சுத்தியும் வலிமைப்படுத்தும் பயிற்சிகள்.
 • ஆசனம்:அன்னமய, பிராணமய கோச சுத்தி வலிமைப்படுத்தலும், மனோமய கோசத்தினை அவற்றுடன் இணைக்கும் செயல்முறை.
 • பிரணாயாமம்: பிராணமய கோச சுத்தியும், வலிமைப்படுத்தும் பயிற்சி
 • பிரத்தியாகாரம்: மனோமய கோச வலிமையுறவைக்கும் பயிற்சி
 • தாரணை: மனோமய, பிராணமய கோச சக்திகளை ஒரு இடத்தில் குவிக்கும் செயல்முறை. மனோமய கோசத்தினையும் பிராணமய கோசத்தினையும் இணைத்து பயன்படுத்தும் உத்தி.
 • தியானம்: விஞ்ஞானமய, ஆனந்தமயகோசத்தினை சுத்தி செய்து வலிமைப்படுத்தும் பயிற்சி
 • சமாதி: பஞ்சகோசங்களை வசப்படுத்தி அவற்றிலிருந்து உண்மையான "நான்" ஆகிய ஆன்மாவினை அடையும் நிலை.
சித்த வித்தை அடிப்படையில் பார்த்தால் அட்டாங்க யோகத்தில் முதல் ஐந்து படிமுறைகளும் (இயம, நியம, ஆசனம், பிராணாயாம, பிரத்தியாகார) அன்னமய, பிராணமய, மனோமய கோசங்களை சுத்தி செய்து வலிமையுறச் செய்யும் பயிற்சிகள்.

ஆறாவதான தாரணை எனப்படும் "ஏகாக்கிரம்" ஆனது மேற்கூறிய ஐந்து படிமுறைகளாலும் பெறப்படும் சக்தியினை பயன்படுத்தும் உத்தி ஆகும். இப்படி வலிமையும் சுத்தியும் பெற்ற அன்னமய, பிராணமய,மனோமய கோசங்களுடன் அடுத்த இரண்டு வலிமையான கோசங்களான புத்திமய(விஞ்ஞானமய)ஆனந்தமய கோசங்களை வலுப்படுத்தும் பயிற்சிமுறை "தியானம்" ஆகும்.

இப்படி பஞ்சகோசங்கள் சுத்தி பெற்று, வலிமையுற்றபின்பு "நான்" எனப்படும் ஆன்மாவை அறிந்த நிலை சமாதி ஆகும்.

ஆக இந்த பதிவில் கூறவரும் கருத்து என்னவென்றால் சித்தவித்தை பயிலவிரும்புபவரோ, (மன,உடல், ஆன்ம)ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் கட்டாயம் இந்த பஞ்சகோச விளக்கத்தினை புரிந்துகொண்டு அவற்றை சுத்தி செய்வதற்கான படிமுறைகளையும், வலிமைப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் செய்து வருவார்களானால் நிச்சயம் மகிழ்வான உலகவாழ்க்கையினையும், ஆன்ம வாழ்க்கை உயர்வு வேண்டின் அவற்றையும் பெறுவார்கள்.

இதுவரை எமது பதிவுகளில் மனோமய, பிராணமய கோசங்களை சுத்தி செய்யும் இலகுவான பயிற்சிகளை குருவருளால் வெளியிட்டுள்ளோம்.


அடுத்துவரும் பாடங்களில் மற்றைய கோச சுத்திகள் பற்றியும் வெளியிடுவோம்.

ஸத்குரு பாதம் போற்றி!

Comments

 1. மகிழ்வான வாழ்வுக்கு பஞ்ச கோச‌ங்களும் சுத்திகரிக்கப்பட வேண்டும் என அழகாக விளக்கி இருக்கிறீர்கள். இதில் அஷ்டாங்க யோக‌ங்கள் பற்றிய விளக்கங்களும் அளித்திருந்தால் முழுமையாக இருந்திருக்கும்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு