சித்த வித்யா பாடங்கள்: 09 பிரபஞ்ச மனத்தினை ஆழ்மனம் மூலம் ப‌ய‌ன்ப‌டுத்தி ப‌ல‌ன் பெறும் முறை

சென்ற‌பாட‌த்தில் சூஷ்ம‌ உட‌ல் ப‌ற்றி பார்த்தோம். சூஷ்ம‌ உட‌லின் ஒவ்வொரு ப‌குதியும் பிர‌ப‌ஞ்ச‌ அமைப்பாக‌வும் வியாபித்திருக்கின்ற‌து என்ப‌த‌னை எம‌து முன்னோர்க‌ள் அறிந்திருந்த‌ன‌ர்.

அதாவது மனிதனது ஒவ்வொரு அமைப்பும் அவனது புறச்சூழலுடனும், இந்த பிரபஞ்சத்துடனும் தொடர்புபட்டது என்பதே சித்தவித்தையின் அடிப்படையான விதியாகும்.

நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இந்த பிரபஞ்சவெளியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அவை அழிவதில்லை, தகுந்த பக்குவத்தினை ஏற்படுத்தும் எவரும் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

இதேபோல் எமது காரியங்கள் சரிவரவேண்டுமென்றாலும் இந்த பிரபஞ்ச மனதைப்பயன்படுத்தி வெற்றியடையலாம். இதற்கான வழி என்ன?

எம்மிடம் இருக்கும் ஆழ்மனம்தான் அதற்குரிய உபகரணம், எப்படி பயிற்சிப்பது என்ற வழிமுறை கீழேதரப்பட்டுள்ளது.

பயிற்சிமுதலில் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்தினை எதிர்காலம், நிகழ்காலம், கடந்த காலம் ஆகிய மூன்றுகாலங்களிலும் ஆக்கிக்கொள்ளுங்கள். உதாணமாக உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் தேவையெனில், எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கும், கிடைத்துக் கொண்டிருக்கிறது, கிடைத்து விட்டது என வாக்கியங்களை அமைத்துக்கொள்ளலாம்.

பின்னர் நீங்கள் தூங்கப்போகும் வேளையில் படுக்கையில் இருந்தபடி இந்த மூன்று வாக்கியங்களையும் மந்திரம் உச்சரிப்பதுபோல் உச்சரித்துக்கொண்டு அந்த வார்த்தைகளினால் வரும் சந்தர்ப்பங்களை மனதில் காட்சியாக காண முற்படுங்கள். அதாவது ஒரு நபர் உங்களுக்கு குறித்த அளவு பணம் தருவதாகவும், அதைகொண்டு வந்து தந்துவிட்டதாகவும், பின்னர் அதனைக்கொண்டு உங்கள் தேவை நிறைவேறிவிட்டதாகவும் மனதில் காட்சியாக காணவும். இவ்வாறு பத்து நிமிட‌ங்க‌ள் செய்த‌பின்பு நித்திர‌க்குச் செல்ல‌வும்.

நிபந்த‌னைக‌ள்:இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ம் விதிக‌ளுக்கு உட்ப‌ட்ட‌து, ஆக‌வே அத‌ன் விதிக‌ளை மீறி யாரும் செய‌ல் புரிய‌ முடியாது, ஆத‌லால் இப்ப‌டி ஆகாய‌ ம‌ன‌தினை எம‌து சித்த‌த்தின் மூல‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தி வெற்றிபெற‌ நீங்க‌ள் இருக்குக் நிலையிலிருந்து அடுத்த‌ நிலைக்குச் செல்வ‌த‌ற்கே ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். உதார‌ண‌மாக ஒரு க‌ம்ப‌னியில் மேலாலள‌ராக‌ இருந்துகொண்டு உட‌ன‌டியாக‌ நிறைவேற்று இயக்குனராக வ‌ர‌வேண்டும் என‌ இந்த‌ சாத‌னையினை செய்தால் நிறைவேறாது, உங்க‌ளுக்கு அடுத்து மேலே உள்ள‌ ப‌த‌வியிற்கு நீங்க‌ள் ப‌யிற்சித்தால் நிறைவேறாது, ஆதலாம் நாம் வைக்கும் கோரிக்கைக‌ளுக்கு அடிப்ப‌டை த‌குதிக‌ள் இருக்கின்ற‌தா என்று ஆராய்ந்த பின்பே உங்கள் கோரிக்கைகளை முன்வையுங்கள். 
 
அடுத்து தீய கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சித்தால் அதன் பலன் பலமடங்கு வலிமையுடன் மீண்டும் உங்களையே தாக்கும் என்பதனை நினைவில் வைக்கவும்.

ஓம் ஸத்குருபாதம் போற்றி!

Comments

 1. இந்த பிரார்த்தனை விசயத்தில் மேலும் சில காரணிகள் செயலில் இருக்கும். வெறும் நமது பிரார்த்தனையும் கற்பனையும் மட்டுமே பிரார்த்தனை பலிக்க உதவுவதில்லை.

  நம் அன்றாட கடமைகளை தவறாமல் செய்தல், பொறுப்புகளை சோம்பலில்லாமல் விரைவில் செயல்படுத்தும் தன்மையை ஒவ்வொருவரும் தம் சுய முயற்சியில் செய்து வரல் வேண்டும். இதுதான் அடிப்படை. இதிலிருந்துதான் அவர்களின் பிரார்த்தனைகள் கட்டமைக்கப்பட வேண்டும். கர்மங்களை செய்வதில் சோம்பலும் அலட்சியமும் இருப்பவர்களின் பிரார்த்தனைகள் பலிப்பதில்லை. பலித்தாலும் அதனால் அவர்களுக்கோ, பிறருக்கோ எந்த பலனும் இல்லை.

  நமது ஆத்ம/பிராண சக்தியும் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உயர்த்தாமல் பிரார்த்தனைகள் நிறைவேறுதல் மிகக்கடினமே. இந்த பிராண சக்தியை அதிகரிக்கவே மேற்கண்ட கடமைகள் செயல்படுத்துதல் மிகவும் உதவும். பக்தியும், யோகமும், தியானமும் இதற்கு துணையாக இருக்கும்.

  மேலும் நாம் தூங்க செல்வதற்கு சற்று முன்பும், தூங்கி எழுந்த சிறிது நேரத்துக்கும் சூட்சுமமாக, நமது ஆழ்மனம் பிரபஞ்ச மனதுக்கு அருகில் இருக்கும். எனவே இந்த நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு பலன் அதிகம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு