சித்த வித்யா பாடங்கள் 05: அந்தக்கரணங்களின் செயற்பாடு

மனிதனது சூஷ்ம அமைப்புகளில் அடிப்படையானது மனம், புத்தி , சித்தம், அஹங்காரம் எனும் அந்தக்கரணங்கள். அவற்றின் செயன்முறை  பற்றி இன்றைய பாடத்தில் பார்ப்போம்.  
 • மனம் எனது சடப்பொருள் அல்ல, அது ஒரு ஒரு சூஷ்ம சக்தி (Energy).
 • புலன்கள் மூலம் வெளியிலிருந்து மூளை பெறும் தகவல்கள் மூளையில் மின்காந்த அலைகளாக ஆக்கப்பட்டு எண்ணங்களை தோற்றுவிக்கிறது.  
 • எண்ணங்கள் தொடர்ச்சியாக தோன்றிக் கொண்டிருக்கும் சேர்க்கைதான்  (collective thoughts) மனமாக உருப்பெறுகிறது .
 • இவை நடைபெறும் இடமே மனம் அல்லது மேல் மனம். 
 • இவை தொடர்ச்சியாக உருவாகும் போது ஒரு அடையாளத்தினை (impression) பிரபஞ்ச வெளியில் உருவாக்கிறது, அதாவது எமக்கு தோன்றும் ஒவ்வொரு எண்ணமும் இந்த பிரபஞ்ச்சத்தில் அசைவை ஏற்படுத்தி ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது. 
 • இந்த பதிவுகள் சேரும் பகுதியைத்தான் சித்தம் அல்லது ஆழ்மனம் என அழைக்கிறோம், இவை எப்போதும் யாராலும்  அழிக்கமுடியாதவை. அனைத்தும் பதிவுற்ற நிலையில் இருக்கும், சரியாக தமது சூஷ்ம புலன்களை விழிப்படைய செய்தவர்கள் இவற்றை அறியலாம். 
 • இப்படி சித்தத்தில் வலுப்பெற்ற எண்ணங்கள் மனிதனின் தூல நிலையில் செயல்கொள்ள தயாராகும். 
 • அவை செயல் நிலைக்கு வர தகுந்த பிராணனும், சூழலும் அவசியம். இந்த செயல் நிலைக்கு வருவதற்கான காரணிகளை ஒழுங்கு படுத்தும் செயலைத்தான் நவக்கிரகங்களும் செய்கின்றன. அதாவது எமது சித்தத்தில் பதிவுற்ற பதிவுகள் செயற்படுத்தும் பொறுப்பு கிரகங்களுக்குரிவையை. 
 • புத்தி என்பது சித்தமாகிய ஆழ மனத்தினதும் அஹம்காரதினதும் சேர்வை. அதாவது சித்தத்தில் சேர்ந்த பதிவுகளின் படி நிகழ்காலத்தில் நடக்கும் செய்முறைகளை சரி பிழை என ஆராயும் பாகம்.  
 • அஹம்காரம் ஒரு செயலை செய்வதற்கான மையப்புள்ளி. அதாவது எப்போதும் நாம் ஒரு செயலை செய்வதற்கு மையம் ஒன்று தேவைப்படுகிறது. அந்தப்புள்ளி ஆன்மாவாக இருக்கும் நிலையே தன்னையறிந்த நிலை. அது விலக விலக நாம் உலக மாயையில் எம்மைப் பொருத்துகிறோம். உண்மையில் எமக்கு இரண்டு மையங்கள் காணப்படுகின்றன. ஒன்று உண்மையான நான் ஆகிய ஆன்மா, மற்றையது அஹம்காரமாகிய "நான்". இந்த வேற்றுமை உருவாவதற்கான காரணம் வெளி உலக தொடர்பில் மனம் ஈடுபடும் போது அந்த பதிவுகளை தனது உண்மை நிலை என எண்ணி மறந்து விடுவதே ஆகும். 
 • அஹம்காரமாகிய நான் இன்றி எந்தக் காரியமும் நடைபெறாது, எந்த ஆன்ம போதனையும் உண்மையான ஆன்மாவாகிய நானிற்கும், அதன் பிரதியான "நானிற்கு" இடையிலான இடைவெளியினை படிப்படியாக குறைத்து இறுதியில் ஆன்மாவாகிய "நானை" அடையும் வழிமுறையினையே போதிக்கிறது. 
 •  இந்த அந்தக்கரணங்கள் நான்கும் ஒன்றுடன் ஒன்று கலந்த, ஒன்றை ஒன்று இடைத்தொடர்புடையவை, அதாவது பொதுவான சாதாரண வாழ்க்கை முறை ஒன்றுடன் ஒன்று கலந்த நிலை, 
 • சித்த சாதனை அல்லது எந்தவொரு யோக சாதனையும் இந்த ஒழுங்கற்ற   அந்தக்கரணங்களில் கலப்பை  எமது மனதின் மூலம் உணர்ந்து ஒழுங்கு படுத்தி, சக்தியுடையதாக்கி படிப்படியாக கட்டுப்படுத்தி, மாயை ஆகிய நானிலிருந்து உண்மையான ஆன்மாவாகிய நானை உணரும் வழிமுறையினையே சொல்லும். 
 • எந்த தூல  சூஷ்ம பொருட்களும் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய ஐந்தின் கலப்பினால் ஆனவையே.  அவற்றில் விளக்கமும் எல்லாவற்றிலும் ஐந்தும் ஒன்றுடன் ஒன்று கலந்த கலவையாகவே காணப்படும். 
 • அந்தக் கரணங்கள் நான்கும் பஞ்ச பூதங்களால் ஆனவையே. 
 • ஆகவே சித்த வித்தையின் படி ஒருவர் தனது மனம், புத்தி சித்த அஹங்காரங்க்களை சுத்தி செய்வதே முதற் படி. 
 • இந்த அடிப்படையினை ஒருவர் விளங்கிக் கொண்டால் மற்றைய விடயங்களை சிந்தித்தறிவதனால் இலகுவாக விளங்கிகொள்ளலாம். 
 • அடுத்த பாடத்தில் எல்லாவற்றிற்கும் மூலமான மனதினை சுத்தி செய்யும் ஓர் எளிய முறையினை பார்ப்போம். 

Comments

 1. அந்த கரணங்களின் விளக்கம் அற்புதம். மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் இருக்கிறது.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. excellent and simple explanations. Very useful for beginners like me

  SHIVA SHAILESH
  aanmeeggaiyarkai.blogspot.com

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு