குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 29, 2012

சித்த வித்யா பாடங்கள் 10 : மனித காந்த சக்திகளை வளர்ச்சியுறச் செய்யும் முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

மனிதன் காந்த சக்தி படைத்தவன் என்பது சித்த வித்யா கோட்பாடுகளில் ஒன்று. அதாவது கந்தம் என்ற சொல்லின் பொருள் இயற்பியல் அர்த்தத்தினை விட சித்த வித்யா அடிப்படையில் பார்த்தால் ஒருவித கதிர்ப்பும் ஈர்ப்பும் உடையவன் என்பதனை விளக்கவே இந்த சொற்பிரயோகம் பிரயோகிக்கப்படுகிறது. 

எமது வாழ்க்கையில் சில சம்பவங்களைப் பார்ப்போம்;
  1. முன்பின் தெரியாத ஒரு சிலரைப் பார்க்கும் பொது சிலர் மீது விருப்பும் வெறுப்பும் வர என்ன காரணம்? 
  2. ஒரு சிலரைப்பார்த்தாலே மனம் கவலைகளை மறந்து மகிழ்வடைய என்ன காரணம்?
  3. ஒரு சிலர் முக அமைப்பில் அழகு அற்றவர்களாக இருந்த போதும அவர்களை பிடிப்பது ஏன்?
  4. சில சாமியார்களிடம் பெற்ற விபூதி தீராத நோய்களை தீர்ப்பது எப்படி?
  5. சிலரது கண்பார்வை பட்டால் காரியம் சரி வராது என்று வழக்கில் கூறுவதன் காரணம் என்ன?
இப்படி பல உதாரணங்களை கூறிக்கொண்டு போகலாம். 

இவற்றின் காரணம் எல்லாம் ஒவ்வொரு மனிதனுடைய காந்த சக்தி கதிர்ப்பில் ஏற்படும் ஒற்றுமை வேற்றுமைகளே. 

எப்படி இந்த காந்த சக்தி உருவாகிறது?
எமது மேல் மனதில் உருவாகும் எண்ண அலைகளும் ஆழ்மன பதிவுகளும், பிராண சக்தியின் அளவுமே ஒருவரது தனிப்பட்ட காந்த சக்தியின் அளவினை தீர்மானிக்கும் காரணிகளாகும். 

மனம் ஒரு எண்ணத்தினை நினைக்கும் பொது எமது உடலை சுற்றி ஒரு காந்தப்புலம் உருவாகின்றது. அது எமது பிராண சக்தியின் அளவிற்கு  ஏற்றவாறு பரவுகின்றது. 

எப்படி உங்களுடைய காந்த சக்தியின் தன்மையினை அளவினை பரிசோதிப்பது?

இரண்டு ஒரே அளவாக பழுத்த எலுமிச்சம் கனிகளை வாங்கி வாருங்கள், ஒரு கனியினை மனதில் பல நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக எண்ணிய படி கைகளுக்குள் (நசுங்கி விடாமல்) 10 நிமிடங்கள்  வைத்திருந்து விட்டு அதிக வெப்பம் இல்லாத இடத்தில் தனித்தனியாக  வைத்து விடுங்கள். பின்னர் ஐந்து நாட்களுக்கு பின் அவை இரண்டையும் எடுத்துப்பார்க்கும் போது எது முதலில் பழுதடைந்துள்ளது என்பதனை வைத்து  உங்கள் காந்த சக்தியின் தன்மையினை சோதித்து கொள்ளலாம். 

அல்லது கீழ்வரும் குறிகளைக்கொண்டும் உங்கள் காந்தத்தின் தன்மையினை அறிந்து கொள்ளலாம். 
  • மற்றவர்களுடன் பழகும் போது அவர்கள் உங்களை விரும்பும் அளவு மதிக்கும் தன்மை
  • கைராசி அளவு
எப்படி எமது காந்த சக்தியினை தூய்மைப்படுத்துவது?

ஆழமான மூச்சும் நல்ல எண்ணங்களும் தான். 

நாம் முன்னர் குறிப்பிட்ட மனச்சுத்தி  பயிற்சியினை  செய்வதன் மூலம் எமது காந்தத்தினை சுத்தி செய்து கொள்ளலாம். 

அடுத்த மிகதுரிதமான வழி காயத்ரி மந்திர ஜெபம் அல்லது இஷ்ட தெய்வத்தின மந்திர ஜெபம் 

எப்படி காந்த சக்தியினை பலப்படுத்துவது ?

மன ஏகாக்கிரம் (தாரணை ) யும் பிராண சக்தி வளர்ச்சியும் 

மனித காந்தத்தினை சுத்தி செய்து பலமடையவும் செய்யும் (two in one method)  மந்திர ஜெபம் ஒன்றே. 

மனித காந்த சக்தியின் பிரயோகங்கள்  எவை?
  • வசியம் முதலான மந்திர பிரயோகங்கள் 
  • ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் 
  • நோக்கு வர்மம் 
  • தீட்சை 
  • நோய் தீர்த்தல் 
  • கவர்ச்சி பெறல் 
போன்ற அனைத்தும் மனித காந்த செயற்பாடுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.

இந்த விளக்கங்கள் அடிப்படையினை விளங்குவதற்கு போதுமானது என எண்ணி இத்துடன் முடிக்கிறேன். மேலதிக விளக்கங்கள் தேவையானவர்கள் ஈ மேயிலிற்கோ, பின்னூட்டமாகவோ கேட்கலாம். 


6 comments:

  1. வித்தியாசமான, விளக்கமான பதிவு ! நன்றி சார் !

    ReplyDelete
  2. அய்யா வணக்கம். தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். கொஞ்சம் செயல்முறை (practical excercise) பயிற்சிகள், விளக்கங்களோடு கட்டுரைகள் தந்தால் என்னை போன்றோருக்கு உதவிகரமாக இருக்கும். காந்த சக்தியை அதிகபடுதும் முறைகள், பிரயோகிக்கும் முறைகள் இவை குறித்த செயல்முறை பயிற்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  3. சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள்.. இந்த காந்தப் புலம் மற்றும் பிராண சக்தி என்பது ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே இருப்பதுதான். இதை பலப்படுத்துவதும், சுத்திகரிக்கப்படுவதும் நம் அன்றாட வாழ்வியலில் நாம் செயல்படும் தன்மைகளையும் பொறுத்தே இருக்கிறது.

    என்னதான் சாதகங்கள் செய்தாலும் ஒரு மனிதனின் நன்நடத்தையும், அன்புள்ளமும், தம் சுய‌கடமைகள் செய்வதில் இருக்கும் முன் முனைப்பும், பிறருக்கு உதவிசெய்யும் முனைப்பும் அவன் சக்திகளை அதிகரிக்கும்.

    இந்த சக்திகளை பலனுக்காக பெறுவதைவிட, நம் ஆத்ம சுத்திக்காக வைத்திருப்பதே சாலச் சிறந்தது என நான் கருதுகிறேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  4. NALLA PATHIU BUT ITHAI PATRI MULUMAIYAGA THERINTHUKOLLA VIRUMBHUKIREN.. PLEASE GIVE ME FULL DETAILS ABOUT THIS..

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...