கற்றலின் இலக்கை மற்றவர்களுடன் போட்டி போடும், மற்றவர்களை வெல்லும் ஒன்றாக பிள்ளைகளின் மனத்தில் விதைக்கக் கூடாது. இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வந்தவர்கள் உயர்ந்த பதவிகளை அடைந்த பின்னர் மற்றவர்களை மேம்படுத்த தமது ஆற்றலைப் பயன்படுத்த மாட்டார்கள்.
எப்படிச் சுரண்டுவது, மற்றவர்களை வதைப்பது என்ற போக்கிலேயே அவர்களது தந்திரங்கள் முழுவதும் இருக்கும். வாழ்க்கையில் கல்வி, பணம், பதவி இவற்றில் உயர்ந்த நிலை அடைந்தாலும் திருப்தி இல்லாமல் எதற்காவது பின்னால் செயற்கையாக ஓடிக் கொண்டிருப்பார்கள். ஒருவித பாதுகாப்பின்மை இருக்கும்! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தனான் இலகுவாக மற்றவர்களுக்கு இவை கிடைத்துவிடக் கூடாது என்று தடங்கள் ஏற்படுத்தும் முட்டுக் கட்டைகளாக அமர்ந்திருப்பார்கள்.
கல்வி என்பது அக அனுபவத்திற்கும், பரந்து விரிந்த மனதால் உலகின் பல் பரிணாமங்களைக் காண்பதற்குரிய பார்வையை விருத்தி செய்யும் போசணையாகவும் இருக்க வேண்டும்.
இன்று பலர் உயர்ந்த பட்டங்களைப் பெற்றுவிட்டு திருப்தி இல்லாமல், சிந்தனை செய்ய நேரம் இல்லாமல் பதவிகளுக்கும், பட்டங்களுக்கும், பணத்திற்கும் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது கல்வி, அறிவு எதற்கானது என்ற தெளிவு இல்லாமல் தொழிலிற்காக, அந்தஸ்திற்காக கற்கிறோம் என்று கற்றவர்களின் நிலை தான்!
அறிவு மற்றவர்களுக்குப் பயன்படாவிட்டால் கற்ற கல்வியால் பயன் எதுவும் இல்லை! அதுப் போல் நாம் கஷ்டப்பட்டு படித்தால் எமக்கு பிறகு வருபவர்கள் கஷ்டப்படாமல் படிக்க என்ன வழி என்று சிந்திக்கும் மனப்போக்கு வளர்க்க வேண்டும். இப்படி இருக்கும் போது தான் சமூகமாக முன்னேற முடியும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.