இன்று தன்வந்திரி திரயோதசி!
வடமொழி ஆயுர்வேத நூற்கள் தன்வந்திரியை பிரம்ம சம்பிரதாய வைத்தியக் கடவுளாகக் குறிப்பிடும்!
தென்னாட்டு சித்த சம்பிரதாய நூற்கள் சிவன் பார்வதிக்கு உபதேசித்து, மகாவிஷ்ணுவிற்கு உபதேசமாகி தன்வந்திரி என்ற முனிவருக்கூடாக ஆயுள்வேத ஞானம் பரவியதாகக் கூறுகிறது.
செய்ய மாதுக் கிறையவன் செப்பிய
துய்ய வாயுள் மறையிற் றுலங்கிய
மெய்யை மாதவன் மேதினி வாழ்வுற
ஐயன் தன்வந்திரிக்கருள் கூறினான்
ஓது நாடித் தொகையு மதிலுறு
வாத பித்தச் சிலேற்பன வன்மையும்
பேத மான வியாதியின் பெயர்களும்
ஆதியான அருந்தவன் ஓதினான்
-தன்வந்திரி வைத்தியம் -
பார்வதிக்கு சிவபெருமான் உபதேசித்த ஆயுள் வேதத்தில் உள்ள உண்மைகளை உடல் மேம்பட மகாவிஷ்ணு உயிர்கள் வாழ்வு மேம்பட ஐயன் தன்வந்திரிக்குக் கற்பித்தான்.
ஐயன் தன்வந்திரி நாடிகளின் எண்ணிக்கையும், அந்த நாடிகளில் வாத பித்த சிலேற்பனமும் அவற்றின் வலிமை, ஏற்படும் வியாதிகளது பெயர்கள் இவற்றைத் தொகுத்து ஓதினான்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.