சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு கற்பது எப்படி என்று கற்பித்திருந்தேன்! அது பெரிதும் பலன் தந்து அந்த அணியில் பலர் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தனர்!
அடுத்த பெப்பிரவரி மாதம் பரீட்சை எழுதும் ஒரு மாணவன் தனது கற்றல் பிரச்சனையுடன் வந்திருந்தார். நல்ல ஊக்கமும், முயற்சியும் உள்ளவர். ஆனால் நடுக்காட்டில் நிற்பது போன்ற ஒரு மனநிலையில் திகைத்து பரீட்சையை எதிர்கொள்ள என்ன செய்வது என்ற திகைப்பு நிறைந்திருந்து.
அமைதியாக உட்கார்ந்து நம்பிக்கை கட்டியெழுப்பியாயிற்று! உயிரியல் பாடத்தில் மொத்தம் 10 பாட அலகில் எவை முக்கியமான அலகுகள், ஒவ்வொரு அலகிலும் எத்தனை concepts இருக்கிறது, கடந்த கால வினாக்களில் ஒவ்வொரு அலகும் எத்தனை MCQ, அமைப்புக் கட்டுரை, கட்டுரை வினாக்கள் வருகிறது என்று ஆராயச் சொல்லி மனதிற்கு உறுதி கொடுத்து, வரும் இரண்டு மாதங்களுக்குள் 1000 MCQ பயிற்சி செய்விப்பது என்று திட்டம் போட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இரசாயனவியலிற்கும் திட்டம் கொடுத்திருக்கிறேன்; நாளை முடிப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஆசிரியர்கள் இந்தப்பாடம் முடிக்கவில்லை, அந்தப்பாடம் முடிக்கவில்லை என்ற புலம்பலுடன் வந்திருந்தார்கள்! அவரிடம் நான் சொன்னது "எமது வாழ்க்கைக்கு நாம்தான் பொறுப்பு, எந்தத் தடங்கல் வந்தாலும் கல்வி கற்பதில் சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தால் வீணாகப்போவது எமது வாழ்க்கை, இதை ஞாபகம் வைத்து சுய கற்றல் என்பதை யோசியுங்கள்! ஒவ்வொரு சொல்லைப் புதிதாக அறியும் போதும் அதன் வரைவிலக்கணம் என்ன என்பதைப் புரிந்து, கேள்வி கேட்டுப் படியுங்கள் என்று சொன்னேன்!
ஆசிரியர்கள், தாம் கற்றலுக்கு உதவி புரிபவர்கள் என்ற உணர்வுடன் மாணவர்களை தாமாக, சுயமாக கற்கும் பண்பினை உருவாக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.