ஆயுளும் ஆரோக்கியமும் வெவ்வேறானவை! இதை தெளிவாக ஆயுர்வேத மூலநூலான சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது.
ஒருவன் ஆரோக்கியமானவனாக உற்சாகமாக வேலை செய்துகொண்டிருக்கலாம். திடீரென இறந்து போய் விடலாம். உடனே நன்றாகத்தானே இருந்தான் இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள்.
இதைக் கூர்ந்து கவனித்த ரிஷிகள் ஆயுளை வளர்ப்பது எப்படி என்பதை ஆராய்ந்த அறிவே ஆயுர்வேதம்.
ஆயுள் என்பது சரீர, இந்திரிய ஸத்வ ஆத்ம ஸம்யோகா என்கிறது சரஹ சம்ஹிதை.
சரீரம் என்ற ஸ்தூல உடல்
அதிலிருந்து இந்திரியங்களின் செயல்
ஸத்வ மனம்
ஆத்மா என்ற உயிர்
என்ற இந்த நான்கினதும் சரியான இணைப்பினை ஒருவன் தினசரி வாழ்க்கையில் உருவாக்க இயலாதவன் ஆயுளைப் பெற முடியாது.
ஆத்மாவை அறிந்து அதன் ஆற்றலை சத்துவ குணமுடைய மனதினால் உடலையும், புலன்களையும் ஆளத்தெரிந்தவன் மாத்திரமே நீண்ட ஆயுளைப் பெறலாம்.
மனதை ரஜோ, தமோ குணத்தில் அலைக்கழிப்பவர்களும், உடலை, புலன்களை கட்டுப்பாடு அற்றுப் பாவிப்பவர்களும், பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் உயிர், உடல், மனத்துடன் ஒன்றிணைந்து வலுவாகப் பிணைப்புடன் இருப்பதில்லை.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.