குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Wednesday, April 18, 2018

அக்ஷயதிருதியை பரிசு!


நண்பர்கள் அனைவருக்கும் அக்ஷயதிருதியை பரிசு!

உலகில் மிக உயர்ந்த பெறுமதியான விஷயம் பணமோ தங்கமோ அல்ல, ஒருவன் தனது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் மனோ வலிமையும், புத்தித் தெளிவும் உடையவனாக இருப்பது. ஆகவே இந்த அக்ஷய திருதியையில் அத்தகைய பரிசு ஒன்றினை அனைவருக்கும் நாம் தர விரும்புகிறோம். 

உங்கள் வாழ்வில் எந்தப்பிரச்சனை இருந்தாலும் அந்தப்பிரச்சனைகளை தீர்க்க பிரபஞ்ச மகா சக்தி எப்போதும் உதவ தயாராக இருக்கிறது. இந்த உதவியைப் பெற மனிதன் தனது மனதில் குறித்த ஏற்பு நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். அப்படி ஏற்படுத்திக்கொண்டால் அவனுக்கு தெய்வ உதவிகள் வந்து சேரும்.

இதை எப்படி சாதிப்பது என்பது எமது குரு நாதர் ஸ்ரீ கண்ணைய யோகியார் இலகுவான முறையில் விளங்கப்படுத்தி இருக்கிறார்.

பழங்காலத்தில் சௌபாக்கியம் என்பது மனித வாழ்க்கையில் ஒரு அதிமுக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இது பிறந்த நாள் முதல் இறப்பு வரை ஏற்படும் துன்பங்களை தீர்க்கும் வழியை அறிந்திருக்கும் ஞானமே சௌபாக்கியம் எனப்பட்டது.

இந்த சௌபாக்கிய ஆற்றலை பெறுவதற்குரிய இலகு முறை மந்திர சக்திகள்.

இந்த ஒலி நாடாவில் 108 வருடங்கள் பூவுலகில் வாழ்ந்த அகத்திய மகரிஷியின் சீடர் ஸ்ரீ கண்ணைய யோகியார் தமது மனோசக்தியையும் சேர்த்து மனித வாழ்க்கைக்கு நன்மை தரும் மந்திரங்களை தொகுத்து தந்திருக்கிறார்.

ஆகவே வாழ்க்கையில் வியாபார நட்டம், ஆரோக்கியக்குறைவு, குடும்ப பிரச்சனை, பணப்பற்றாக்குறை இப்படி எந்தக்குறைகள் இருந்தாலும் இந்த ஒலி நாடாவை குறைந்தது 45 நாட்கள் தொடர்ச்சியாக கேட்கலாம்.

மனதை காப்பது மந்திரம். ஆகவே மந்திரங்களை கேட்பதால் மனதில் எழும் எண்ணங்கள் குறித்த காரியத்தை ஆற்றுவதற்குரிய வகையில் சீராக்கப்படும். இப்படித்தான் மந்திரம் ஒருவனுக்கு பலன் தருகிறது. ஆகவே மூட நம்பிக்கையாக கற்பனை செய்துகொள்ளாமல் மந்திரம் பலன் தரும் முறைய புரிந்து இந்த ஒலி நாடாவை கேட்டு பலன் பெற வேண்டுகிறோம்.

பயன்பெற்று உங்கள் துன்பம் தீர்ந்தால் அதுவே எமக்கு மிக பெரிய பாக்கியமாக கருதுவோம்!

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

இந்த ஒலி நாடாவில் உள்ள மந்திரங்கள்:
 1. ஆயுள் ஸ்திர மந்திரம், 
 2. நோய் தீர்க்கும் சஞ்சீவினி மந்திரம், 
 3. புத்தியை சீர்படுத்தும் மந்திரம், 
 4. கணவன் மனைவி மனம் ஒன்று பட்டு குடும்ப ஒற்றுமை சீராக்கும் மந்திரம், 
 5. பண ஆகர்ஷண லக்ஷ்மி மந்திரம், 
 6. இரகசிய பகைமை அகற்றும் மந்திரம், 
 7. ஆபத்துக்களை தடுக்கும் மந்திரம், 
 8. மனச்சுத்தி மந்திரம், 
 9. பெண்களுக்கான சௌபாக்கிய மந்திரம்,
 10. வாழ்வில் நன்மையை ஈர்க்கும் ஸ்வஸ்தி மந்திரங்கள், 
 11. மன சமனிலை ஏற்படுத்தி நிம்மதி ஏற்படுத்தும் சாந்தி மந்திரங்கள், 
 12. மனதினை வலுப்படுத்தும் சிவ சங்கல்ப மந்திரங்கள்,
 13. தேவர்களும் இயற்கை சக்திகளும் ரக்ஷிக்கும் ரக்ஷணை மந்திரங்கள்,
 14. தேவ திருப்தி மந்திரங்கள்,
 15. தீர்த்த ஆசீர்வாதம், 
 16. அக்ஷதை ஆசீர்வாதம், 
 17. குங்கும ஆசீர்வாதம்
 18. மங்கள மந்திரங்கள்
பதிவிறக்கி கொள்ள: 

போகரும் புவனேஸ்வரி தேவியும்

*********************************************** ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக்கொண்டிருந்தார். நீண்...