குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Thursday, April 26, 2018

ஸ்ரீ அரவிந்தரின் சாவித்ரி காவியச் சுருக்கம் - ஸ்ரீ காயத்ரி சாதனை


மகாபாரதத்தில் வரும் ஒரு உபகதை ஸத்தியவான் ஸாவித்ரி கதை.

அரசனான அசுவபதி அன்னை காயத்ரியை நோக்கி பதினெட்டு ஆண்டுகள் தபஸ் செய்கிறான், மகவு வரம் வேண்டி. ஸ்ரீ காயத்ரி அவன் முன் தோன்றி தானே மகளாக அவனிற்கு அவதரிப்பதாக வாக்களிக்கிறாள். அசுவபதி தவத்தை பூர்த்தி செய்து தனது அரசிற்கு திரும்புகிறான். மகள் பிறக்கிறாள். அவள் பெயர் ஸாவித்ரி. அவள் வளர்ந்து பருவ வயது அடைந்தபின்னர் அசுவபதி அவளை தனக்கு ஏற்ற வரனை தேர்ந்தெடுக்கும்படி அசுவபதி கூறுகிறார்.  அவள் அரசினை விட்டு விரட்டப்பட்ட குருட்டு அரசனின் மகனை மணக்க விரும்புவதாக அசுவபதியிடம் கூறுகிறாள். அவள் அப்படி தெரிவு செய்தபின்னர் நாரத மகரிஷி தோன்றி அவன் பன்னிரெண்டு மாதங்களில் இறந்துவிடப்போகும் அற்ப ஆயுள் உள்ளவன் என்று கூறுகிறார். அவள் அதை கருத்தில் கொள்ளாமல் ஸத்தியவானை மணந்து கொள்கிறாள். கணவனைக்காக்க விரதங்களும், தபஸும் இருக்கிறாள்.  காலம் முடிய யமன் உயிரைக்கொண்டு போக வருகிறான். ஸத்தியவானின் உயிரை எடுத்துக்கொண்டு யமன் யமலோகம் செல்ல, ஸாவித்ரி யமனை பின் தொடர்கிறாள். யமன் இதனை  விரும்பாவிட்டாலும் ஒன்றும் சொல்லாமல் தனது வேலையை செய்கிறார், ஏனெனில் வைதரணி ஆறு சொர்க்கத்தையும் பூவுலகையும் பிரிக்கும் எல்லைக்கோடு, அதைத்தாண்டி மனிதர்கள் வரமுடியாது என்பதால்.  எனினும் ஆற்றை கடந்தபின்னரும் ஸாவித்ரி வருவதைக்கண்டு யமன் ஆச்சரியத்துடன் அவளின் மனவுறுதியும், தபஸும் கண்டு அவளுடன் உரையாடி இறுதியில் ஸத்தியவானிற்கு ஆயுளை வழங்குகிறார்.

இதுவே ஸத்தியவான் ஸாவித்ரி கதை, இதை காரடையான் நோன்பிற்கு கணவன் ஆயுளை நீட்ட மனைவி இப்படி உதாரணமாக இருக்க வேண்டும் என்று இன்று பின்பற்றப்படுகிறது.

ஆனால் ஸ்ரீ அரவிந்தரிற்கு இந்தக்கதை ஒருவித மரணத்தை வெல்ல கூறப்பட்ட உத்தியாக புரிந்தது. இதனால் விளைந்ததே  24000 அடிகள் கொண்ட ஸாவித்ரி காவியம்.

இந்தக்கதையில் கதையை விட பாத்திரங்களும் அவை சொல்ல வரும் சூக்ஷ்மங்களும் அவசியமானது.

யோகமார்கத்தில் இறவா நிலை பெறும் இரகசியத்தி இந்தக்கதை கூறுகிறது.

இந்தக்கதையில் யோக மார்க்க பரிபாஷை விளக்கம் வருமாறு;

யோகி ஒருவன் அம்ருதத்துவம் – இறவா நிலை பெற தபஸ் செய்கிறான். தபஸின் முதல் நிலை பிராணனை உயர் நிலைப்படுத்துவது. நரியாக ஓடும் பிராணணை கடிவாளம் கட்டிய குதிரையாக – பரியாக ஆக்கி அதை ஆளத்தெரிந்து பிரபஞ்ச மூல சக்தியை ஈர்த்தால் அவன் அசுவபதி.

பிரபஞ்ச மூல பிராண சக்தி காயத்ரி. இதனால் அசுவபதி காயத்ரியை நோக்கி தவமிருந்தான் என்று கதை சொல்லப்பட்டது.

பதினெட்டு வருடன் என்பது ஒருவன் தனது பிராணனை கட்டுப்படுத்தி ஊர்த்துவ முகமாக செலுத்த நீண்டகாலம் சிரத்தையான கடும்பயிற்சி தேவை என்பதன் குறியீடு.

இப்படி நீண்டகாலம் சிரத்தையாக முயற்சித்தால் பிரபஞ்ச பிராண மகா சக்தி எம்மில் இறங்கத்தொடங்கும். இதுவே காயத்ரி தோன்றி உனக்கு மகளாக பிறக்கிறேன் என்றது.

இப்படி இறங்கு பிராணமாகா சக்தி சாதகனின் உடலிலே இறங்கும் நிலையே அசுவபதியின் மகளாக காயத்ரி பிறந்தாள் என்பது.

இப்போது அசுபதி (பிராணனை கட்டுப்படுத்தி, பிரபஞ்ச மகா சக்தியை தன்னில் ஈர்த்த யோகி) தன்னில் இருந்து ஊருவாக்கிய புதிய யோக சக்தி ஸாவித்ரி. சித்தர்கள் தம்மில் பிறக்கும் புதிய யோக சக்தியை வாலை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி பிறந்த யோக சக்தி சாதகன் மேல் கருணை கொண்டு சாதகனை முன்னேற்றுகிறது.

இப்படி பிராணனை கட்டுப்படுத்தி, பிரபஞ்ச மகா சக்தியை தன்னில் ஈர்த்த யோகி தன்னில் பிறப்பித்த புதிய யோக சக்தியை (ஸாவித்ரியை) கொண்டு குருட்டு அரசனின் (அறியாமையில் ஆழ்ந்த ஆன்மா) மகனான ஸத்தியவானை (எவன் தன்னில் ஸத்தியத்தை நிலை நிறுத்தியவனோ) மணக்கச் செய்யும் செயலையே ஸாவித்ரி ஸத்தியவானை மணந்தான் என்று கூறப்பட்டது.

இங்கு நாரதன் என்பது சித்த விருத்தி,  நாரதர் என்று பாத்திரம் எப்போதும் கலகக்காரனாக குறிப்பிடுவது எந்தச் செயலை செய்தாலும் எமது சித்தம் எமக்குள் இருந்து பயத்தை உருவாக்கும் என்பதை குறியீடாக காட்டவே.

நாரதரின் (சித்தத்தின்) கலகத்தை கருத்தில் கொள்ளாமல் ஸாவித்ரி தனது தபஸின் வலிமை கொண்டு யமனிடமிருந்து ஸத்தியவானை மீட்டாள்.

இந்த நிலை ஒரு யோகி தனது பிராணனை வலுப்படுத்தி, தனது ஸாதனையால் பிரபஞ்ச மகாசக்தியின் அருளை பெற்று, அந்த அருளை தன்னில் ஈர்த்து தனது மகளாக தன்னுள் வளர்த்தால், அவனில் வளர்ந்த அந்த ஸாவித்ரி சக்தி, அவனிற்குள்ளே சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனதினையும், அந்தக்கரணங்களையும் மணந்து, மரணத்தை செல்லும்!

இந்த இரகசியத்தையே விரிவாக ஸ்ரீ அரவிந்தர் 24000 அடிகளில் காவியமாக விரித்துக்கூறியுள்ளார்.  
இங்கு ஒரு சாதகன் அறியவேண்டியது;
·        பிரபஞ்ச மகாசக்தியை பெற ஒருவன் நீண்டகால தபஸும் தனது பிராணனை ஒழுங்காக்கிய அசுவபதி நிலையும்.
·        இப்படி முயற்சித்தாலும் பிரபஞ்ச மகாசக்தி கருணை இருந்தால் மட்டுமே சித்தி பெறலாம்.
·        அந்த பிரபஞ்ச மகா சக்தியையே எமது ரிஷிகளும் சித்தர்களும் காயத்ரி  என்று குறித்து வைத்தார்கள்.
·        சித்தி என்பது பிரபஞ்ச மகாசக்தியை தன்னுள் ஈர்த்து வளக்கும் நிலை.
·        இப்படி பிராண் நிலை ஒழுங்குபெற்றால் பிரபஞ்ச மகாசக்தியான காயத்ரி ஒரு சாதகனிற்குள் வளர்ந்த நிலை ஸாவித்ரி.
·        ஒரு சாதகன் தான் பெற்ற சக்தியை தனது மகள் போல் தன்னுள் அன்புடன் வளர்த்து வரவேண்டும்.
·        இப்படி வளர்ந்த ஸாவித்ரி, அந்த யோகியின் மனம் ஸத்தியத்தை கடைப்பிடிப்பதாக இருந்தால், அந்த மனத்தை மணந்து, தனது ஆற்றலால் யமனை வென்று அம்ருதத்துவத்தை தரும்.

இந்த கதையை தொகுத்த மகரிஷிகள் ஒரு யோகிக்குள் நடக்கும் யோக தெய்வ உருமாற்றத்தை பல்வேறு கதாபாத்திரமாக்கி அந்தக்கதாபாத்திரங்களை உறவுகளாக்கி அந்த உறவுகளில் நடைபெறும் செயல்களை யோக உத்தியாக்கி தந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

ஸ்ரீ காயத்ரி சித்தரின் வழிகாட்டலில் - 10

பகுதி - 01 பகுதி - 02  பகுதி - 03  பகுதி - 04  பகுதி - 05  பகுதி - 06  பகுதி - 07 பகுதி - 08 பகுதி - 09  நான் சாமிக்கு அடுத்த அ...