குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, April 02, 2018

தினசரி சாதனை - சில அனுபவ குறிப்புகள்!

மனிதன் பொதுவாக மறதி உடையவன். தனது புலன்களுக்கு அகப்படக்கூடிய விஷயங்களையே  ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் சலனிக்கும் மனதை உடையவன். தினசரி பல விஷயங்களை மனதில் பதிவித்துக்கொண்டு இருக்கும் சாதகன் தான் இறைசக்தியின் அமிசம் என்பதையும் அந்த இறை சக்தியுடன் தொடர்பு கொள்கிறோம் என்ற விழிப்புணர்வு எப்போது இருக்க வேண்டும். 

இதற்கு தினசரி சாதனை அத்தியாவசியம். தினசரி சாதனையை ஒழுங்காக செய்யும் சாதகனது ஆழ்மனது அடிக்கட் இறைசக்தியுடன் தொடர்பு கொள்வதால் படிப்படியாக, மெதுவாக அவனில் தெய்வ சக்தி விழித்து வரும். இப்படி மனதிலும், சித்தத்திலும் தெய்வ சக்தி விழிப்படைவதால் சாதகனுக்கு அவனது முயற்சியில்லாமலே பலவித பௌதீக, ஆன்மீக முன்னேற்றம் ஏற்படத்தொடங்கும். 

ஒருவரிடம் ஏதாவது பலனைப்பெறவேண்டுமாயின் முதலில் அந்த நபரிற்கும் எமக்கும் சிறந்த நட்பு இருக்க வேண்டும். அடுத்து அவரை அடிக்கடி சந்தித்து புரிந்துணர்வு ஏற்படவேண்டும். இதனால் ஏற்படும் உறவிலேயே அவரிடம் உதவியினை பெறமுடியும். 

இதே உண்மை சாதனைக்கும் பொருந்தும். பலர் தாம் தினசரி சாதனை செய்கிறோம் என்ற எண்ணத்துடன் வழிகாட்டும் ஆச்சாரியருடன் எந்த தொடர்பு கொள்ளாமல் தாம் அதிக சாதனை செய்யலாம் என்று எண்ணி முயற்சிப்பதும் சிலவேளைகளில் தவறாக முடியலாம். ஆகவே சாதனையில் ஈடுபட விரும்பும் சாதகன் கீழ்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 
  1. தினசரி ஒழுங்காக உங்கள் ஆச்சாரியர் உபதேசித்த படி சாதனை செய்து வரவேண்டும். 
  2. உங்கள் சாதனையில் மாறுதல் செய்வதாக இருந்தால் உங்கள் உபதேச குருவுடன் உரையாடி அவர் ஆலோசனைப்படி மட்டும் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் தன்முனைப்பில் அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையில் முயற்சிக்க வேண்டாம். திருமூலர் கூறிய "ஈசனோடாயினும் ஆசை அறுமின்" என்ற வார்த்தைகளை ஞாபகம் வைத்து சாதனையில் மெதுவாக, அமைதியாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள். 
  3. ஆச்சாரியாரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் எக்காரணம் கொண்டும் எந்த வித மனக்குழப்பங்களையோ, தாம் கவனிக்கப்படவில்லை என்ற மனக்குறையையோ, தர்க்கிக்கவோ செல்லாதீர்கள். உங்களுக்கு உபதேசிக்கப்பட்டதை தொடர் ச்சியாக பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சரியான பக்குவமடைந்தால் எவராலும் உங்களுக்கு ஆன்ம உயர்வை தடுக்க  முடியாது என்ற பிரபஞ்ச உண்மையை மனதில் வையுங்கள். 
  4. ஆச்சாரியார் எக்காரணம் கொண்டும் தமது சொந்த விருப்பத்தில் இவர் எனக்கு அதிக உதவி செய்கிறார் அதனால் அவரிற்கு உயர்ந்த சாதனா இரகசியங்களை  உபதேசிப்போம் என்று உபதேசம் செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்ற உண்மையை அறியுங்கள். 
  5. ஒருவர் முன்னேறுவது அவரவர் சொந்த முயற்சியும், சாதனையில் உள்ள சிரத்தையுமே. 
  6. மற்ற சாதகர்கள் என்ன சாதானை செய்கிறார்? அவரிற்கு ஏன் வேறு விதமாக சாதனை செய்யச்சொல்லியுள்ளார்? போன்ற விஷயங்களில் மனதை செலுத்தாதீர்கள். இது முழுமையாக உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை தடை செய்யும். 
  7. உங்களுக்கு சந்தேகம் எதுவும் இருந்தால் எதுவித பயமும் இல்லாமல் நேரடியாக உபதேச ஆச்சாரியரிடம் உரையாடுங்கள். வீணான மனக்குழப்பங்களால் வேறு எவரிடமும் உரையாடுவது மீண்டும் உங்கள் சாதனையில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தும். 
  8. காயத்ரி சித்த சாதனைகளில் உள்ள பண்புகள் உங்களில் வளர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் படி உங்களை நீங்கள் உருவகப்படுத்துங்கள். ஏதாவது தவறு நடந்துவிட்டால் உடனடியாக அது அறியாமையில் நடந்து விட்டது என்பதை உணர்ந்து அது இனி ஏற்படாது என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். குரு மண்டல அருளும், காயத்ரியின் தெய்வ குணங்களும் விழிப்படையும் என்னில் இத்தகையவை இனி நிகழாது என்பதை உறுதியாக உங்கள் ஆழ்மனதிற்கு சொல்லுங்கள்.  

போகரும் புவனேஸ்வரி தேவியும்

*********************************************** ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக்கொண்டிருந்தார். நீண்...