அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியாகிவிட்டது

அன்பர்களே,இரண்டாண்டு கால உழைப்பின் பின்னர் அகத்தியர் ஞானம் முப்பது நூலிற்கு எழுதிய சித்தவித்யா விளக்கவுரையான  அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சென்னையில் ப்ரணவ் ஸ்வஸ்த ஸ்தான வெளியீடாக வெளியாகிறது.இதனை நல்ல முறையில் அழகுற நூலாக வெளிப்படுத்துவதில் Dr. B. P. ப்ரணவ் (http://www.pranavsevas.com) அவர்களில்  அயராத உழைப்பும், Vector Vibe நிறுவன இயக்குனர் திரு. ச. கார்த்திகேயன் அவர்களதும் அவருடைய குழு உறுப்பினர்களும் முக்கிய பங்கு உள்ளது!

மேலும் நூல் உருவாக்கத்தில் சேர்மன்ராஜ், விமாலாதித்தன் ஆகியோரது உதவி பெரும் பங்காற்றியுள்ளது. 

இந்த நூலின் அட்டைப்படம், உள்ளே ஒவ்வொரு பாடலுக்கும் வரையப்பட்டுள்ள  படங்களும் நூலை வாசித்து முடித்தவுடன்  சித்த ரகசியங்களை மனதில் பதிவிக்கும் வகையில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. 

நூலை எழுதி முடித்து வெளியாகும் ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் எனது குருஜி ஸ்ரீ அம்ருதானந்த நாதர் தனது ஸ்தூல உடலை உகுத்து விட்டார். அனேகமாக  அவர் உடலுடன் இருந்து இறுதியாக  ஆசீர்வதித்தது எமது நூலாக இருக்கும் சிறப்பு இந்த  நூலுக்கு உண்டு. அவரது சக்தி ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா  அம்மையார் ஆசி கூறியுள்ளார். இந்த நூல் வெளியாகும் 13ம் திகதி மார்ச் மாதம் அவரின் பிறந்த நாள் என்பது சிறப்பு ஆசீர்வாதம். 

அதேபோல்  எமது  ஆத்ம ஞான யோக சபையின் தலைவர், எமது  குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிற்கு பிறகு  குருஸ்தானத்தில்  இருந்து வழிநடாத்திய  இராஜயோகி  இராஜமோகன் ஐயா அவர்களும் உடலை உகுத்து விட்டார். அவரது மனைவியார்  ஸ்ரீமதி தனலட்சுமி அம்மா அவர்கள் ஐயாவின் ஸ்தானத்தில்  இருந்து இந்த  நூலை வெளியிட்டு வைக்கிறார்கள் . 

குருஜி, இராஜமோகன் ஐயா  இருவரும் இந்த  நூல் பல சாதகர்களுக்கு  உதவும்  என்று அருளாசி  கூறியுள்ளார்கள் . அவர்கள் இருவரது  அருளாசியும்  இந்த நூலில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது நூலாக  வெளிவரவேண்டும் என்பது  குருநாதரின் சங்கல்பம் என்பது இதுவரை  நடைபெற்ற நிகழ்ச்சிகளில்  இருந்து தெளிவாகியுள்ளது. இதனை ஒவ்வொரு  வாரமும் வகுப்பாக  கற்று அதன் பின்னர்  முறையாக தியானத்தில் மனதில் வரும் விளக்கங்களை  எழுதி வைக்கும் போதெல்லாம் இது இவ்வளவு  சிறப்பான  நூலாக வெளிவரும் என்று நினைக்கவும் இல்லை. 

பின்னர் இந்த  நூல் அங்கீகாரம் பெறுவதற்கு  ஏதுவாக தமது உடலை விடுமுன்னர் எமது குருநாதர் சான்றுப்பத்திரம் தந்தமை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி  சிந்திக்கும்போது குருமண்டலத்தின் சங்கல்பம் இருக்கின்றது என்பது உறுதியாகிறது.

எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளது 29ஆவது பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில்  ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் ஆத்ம யோக ஞான சபை அகத்தியனின் மூல சபை என்று  வாழ்த்தியுள்ளார். அந்த அகத்தியரின் மூல சபையில், கண்ணைய யோகீஸ்வரரிற்கு அடுத்த தலைவரான இராஜயோகி இராஜமோகன் ஐயா அவர்களின் நினைவு தினத்தில் இந்த  நூல் மக்களுக்கு வெளியிடப்படுவது குருநாதரின் ஆணை என்பதில் எதுவித ஐயமும் இல்லை. 

மேலும் சித்தர்களின் விடயங்களை வெளியிடும்போது  மரபு தாண்டாமல் நிபந்தனைகளை  பின்பற்றியே வெளியிட்டுள்ளோம். அதன் படி  அகத்தியர் குருமந்திர  புரச்சரணம், சாப நிவர்த்தி மந்திர ஜெபம் என்பவற்றை குருபரம்பரை  முறைப்படி  பூர்த்தி செய்தே வெளியிடுகிறோம்.

சித்தர்  மார்க்கத்தில் ஆத்ம யோக ஞான விடயங்களில் உண்மை ஆர்வம் கொண்ட சாதகர்கள், இந்தநூலைக் கற்பவர்கள் அனைவரும் நிச்சயம் பயன் பெறுவார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

அன்புடன்

*************************************************

நூலைக் கற்க ஆர்வம் உள்ளவர்கள் வெளியீட்டாளர்களை  தொடர்பு  கொள்ளவும்

contact the publishers: 
Pranav Swasta Stanam 
10/18, G1, Temple View Apartment, West Tank St, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041 India 
Phone 044 4210 2582 ✳ 0091 9600 666 661

Comments

  1. அற்புதம் :)

    ReplyDelete
  2. வெளியீட்டாளர்களின் தொடர்பிலக்கம் தரப்பட்டுள்ளது, அவர்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்

    ReplyDelete
  3. எளிமையான, அருமையான விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தையும் குருநாதரின் ஆசிகளையும் பெற்றது நல்ல அனுபவமாக இருந்தது.

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு