நண்பரும் சூக்ஷ்ம உலக தொடர்பும்

இன்று புத்தகம் முடிவுற்று வந்தாயிற்று, திடீரென நான் வலைத்தளத்தில் ஆரம்ப காலத்தில் (2011 - 2012) ஒவ்வொரு நாளும் எழுதும் போது எனது பதிவுகளுக்கு தனது நாளாந்த கடமைபோல் பின்னூட்டம் இடும் நண்பர் Sankar Gurusamy ஞாபகத்திற்கு வந்தார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்த தொடர்பும் இல்லை, நானும் அது பற்றி எதுவும் சிந்திக்கவும் இல்லை, ஆனால் மனதில் எமது அகத்தியர் யோகஞானத்திறவுகோல் நூலை மிகவும் விரும்பும் நபராக இருப்பார் என்று மனதில் சொல்ல Facebook Profile இனை சென்று பார்க்க சற்று அதிர்ச்சியாகி விட்டது. 

2012ம் ஆண்டு சதுரகிரி மலைப்பயணத்தின் போது இயற்கை எய்தி விட்டார் என்று அவரது நண்பர்களும், சகோதரரும் செய்தி பகிர்ந்திருந்தார்கள். 

அதன் பின்னர் மாலை வரை அவரது நினைவுகள் மனதில் வந்து செல்ல, அவரிற்காக, அவர் நல்ல நிலை பெறவேண்டும் என பிரார்த்திக்க வேண்டும் என மனதில் உந்திக்கொண்டு இருந்தது. 

சித்தர்கள் வாழும் பூமி என்ற சதுரகிரியிலேயே உயிர் பிரிந்திருக்கிறது. 

இந்த நூல் வெளிவரும் இந்த நேரத்தில் எனது எழுத்துக்களை உண்மையான ஆர்வத்துடன் வாசித்த அவர் சூக்ஷ்ம உலகில் இருந்து மகிழ்வுடன் வாழ்த்தி இருக்க வேண்டும், இல்லாமல் அவரது நினைவு திடீரென எனக்கு வரவேண்டிய அவசியம் இல்லை! 

அவரது உயிரான்மா அகத்திய மகரிஷியின் பேரொளி பெரு நிலையில் கலந்து பிறவாப் பெருநிலை பெற்று உயர்வடைய பிரார்த்திப்போமாக!

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு