ஜோதிஷ வித்யா வகுப்பு - 01 (29th Feb 2016)

நேற்று 29th Feb 2016 திங்கட்கிழமை கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் மாலை  05.30 - 07.15 வரை நடைபெற்றது. வகுப்பின் ஒழுங்கு  வருமாறு. 

முதல் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சாதனா பாகம், இது பங்கு பெறும் மாணவர்களின் மன, பிராண  நிலைகளை  ஒழுங்கு படுத்தி, குருமண்டலத்துடன் மனதினை இணைத்து சக்தி பெறுவதற்காக. 

1. சாதனா பாகம்; 
 • ச்துராவர்த்தி மகா கணபதி தர்ப்பணம் 
 • சித்த வித்யா குருமண்டல நாமாவளி 
 • பிரணவ மந்திர ஜெபம்
 • சக்தி பிரணவ மந்திர ஜெபம் 
 • காயத்ரி மஹா மந்திர ஜெபம் 
 • ம்ருத்யுஜெய மஹா மந்திர ஜெபம் 
 • துருவ நட்சத்திர தியானம் 
 • நவக்கிரக சாதனா 
2. ஜோதிஷ வித்யா பாடம் - ௦1 - நேற்று கீழ்வரும் விடயங்கள்  கற்பிக்கப்பட்டன 

 • ஜோதிஷம் என்ற சொல்லின் விளக்கம், ஜோதிஷம் வேதாங்கம் 
 • ரிஷிகள் ஜோதிஷம் ஏன், யார் கற்க வேண்டும் என்று சொன்னதன் அவசியம், பராசர ரிஷி மைத்திரேய ரிஷி உரையாடல்  
 • மனிதனில் பரமாத்மா அமிசமும் ஜீவாத்ம அமிசமும் எப்படி கலந்துள்ளது, அதில் கிரகங்களின் பங்களிப்பு என்ன?
 • தசாவதாரத்தின் சூக்ஷ்ம விளக்கம், கிரகங்களின் தொடர்பு 
 • ஜோதிஷஅடிப்படை பிரிவுகள்  சித்தாந்தம், சம்ஹிதை, ஹோரா 

முதலாவது  பாடத்தின் தொடர்ச்சி  அடுத்த  வகுப்பு  14th March 2016, திங்கட்கிழமை கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் மாலை  05.30 - 07.15 வரை நடைபெறும். 

முதலாவது பாடம்  முடிவுற்ற பின்னர் பாடம் PDF கோப்பாக தரவிறக்கி கொள்ள  இந்த தளத்தில் வெளியாகும். 

அன்புடன் Comments

 1. மிக மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா...

  ReplyDelete
 2. மிக்க நன்றி ஐயா... இத்தளத்தில் பகிர்ந்து கொள்வதற்கு...

  ReplyDelete
 3. பாடத்தை எனக்கும் கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளது ஐயா

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு