கூட்டுப்பிரார்த்தனையும் எண்ணிய காரியங்களை நிறைவேற்றுதலும்!

அன்பின் ஸ்ரீ வித்யா சாதகர்களே, 

அனைவரும் ஸ்ரீ வித்யா சாதனை செய்து பலன் பெற்று வருகிறீர்கள் என்று எண்ணுகிறோம். 

உங்கள் அனைவரது குடும்பத்தவர்கள் நலம், வளம் வேண்டியும் எமது தினசரி தியானத்திலும், இருவாரத்திற்கு ஒருமுறை நடைபெறும் பூஜை, ஹோமத்திலும் பிரார்த்தித்து வருகிறோம். 

இந்த பிரார்த்தனை தனியொருவராக இல்லாமல் நீங்களும் இணைந்து கொண்டு சக்தியூட்ட வேண்டும்.  இதனால் அனைவரும் தனியொருவராய் செய்வதை விட அதிக சக்தியும் துரித பலனும் பெறலாம். 

ஆதலால் கீழ்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டுகிறோம். 

 1. உங்கள் வாழ்க்கைக்கு உடனடியாக தேவையான விருப்பங்கள் மூன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதிக்கொள்ளுங்கள். அது தற்போதைய நிலையில் இருந்து அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்வதற்குரிய யதார்த்தமான விருப்பமாக இருக்க வேண்டும். இருபதாயிரம் சம்பளம் முப்பதாயிரமாக உயரவேண்டும் என்பது போல், இரண்டு லட்சமாக உயரவேண்டும் என்று எண்ணினால் அதற்கு பல வருடங்கள் பிடிக்கலாம்! ஆகவே அடுத்த நிலைக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுங்கள். 
 2. உங்கள் ஸ்ரீ ஜோதி சாதனையினை, ஓம் ஹ்ரீம் ஓம் மந்திர ஜெபத்தினை முடியுங்கள். 
 3. பின்னர் கீழே தரப்பட்டுள்ள கூட்டுப்பிரார்த்தனை மந்திரத்தை நீங்களும் , உங்கள் குடும்ப அங்கத்தவர்களும் ஒன்றாக இருந்து மனம் ஒன்றி படியுங்கள். 
உங்கள் விருப்பங்கள் நிறைவேறியபின்னர் அறியத்தரவும். நாமும் மனம் மகிழ்வோம்! 


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கூட்டுப்பிரார்த்தனை மந்திரம்
எமது குடும்பத்தில், இல்லத்தில்  அகத்திய மகரிஷியின் அருளாசியும், அருளாற்றலும், சித்த வித்யா குருமண்டல ரிஷிகளின் அருளாற்றலும் அருளாசியும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும் அன்னை ஆதி சக்தியின் ஆசியால் பரவி நாம் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவரது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா!
எம்முடன் சித்த வித்யா குருமண்டலத்தில் இணைந்து பிரார்த்தனை செய்யும் அனைவரும் அகத்திய மகரிஷியின் அருளாசியும், அருளாற்றலும், சித்த வித்யா குருமண்டல ரிஷிகளின் அருளாற்றலும் அருளாசியும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும் அன்னை ஆதி சக்தியின் ஆசியால் பெற்று அவர்கள் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவர்களது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா!
·         
எனது விருப்பமான
o   ..........
o   ...........
o   ...........
அகத்திய மகரிஷியின் அருளாசியாலும், அருளாற்றலாலும், சித்த வித்யா குருமண்டல ரிஷிகளின் அருளாற்றலாலும் அருளாசியாலும், நவகோள்களின் அருளாற்றலாலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலாலும் அன்னை ஆதி சக்தியின் ஆசியாலும் நிறைவேறுகின்றது.


ஓம் ஹ்ரீம் ஓம்

Comments

 1. GS௦௦38 அருள்முருகன்.
  கூட்டு பி்ராத்தனையில் எம்மையும் இனத்து கொள்கிறோம்
  நன்றி
  என்றும் பணிவுடம்
  அருள்முருகன்

  ReplyDelete
 2. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு