பூஜையின் அடிப்படைகளும் பலன்களை பெறுதலும்

ஆத்ம ஞான யோக சபா பூஜை முறைகள் ஸ்ரீ கண்ணைய யோகியாரால் யோக தத்துவத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட பூசை முறையாகும். ஆகவே இந்த பூஜை முறையினை சரியாக பின்பற்றுவதன் மூலம் மனோ சக்தியையும் தெய்வ சக்தியையும் கலந்து நன்மைகள் பெறலாம் என்பது அனுபவ உண்மை. ஆகவே பூஜையில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் மனத்தால் பூஜையில் ஈடுபடுவது கட்டாயமான ஒன்று. பொதுவாக கோயிலில் அர்ச்சகர் பூஜை செய்வார் நாம் கண்ணை மூடி அருளை பெற்று விடலாம் என்று எண்ணுதல் தவறு. உங்கள் மனம் பூஜையில் ஈடுபடாமல் எந்த பலனையும் பெறமுடியாது.
ஆகவே சபாவின் பூஜையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் விதிமுறைகளை  பின்பற்றுதல் அவசியம், இது நீங்கள் பூஜையின் பலனை பெறுவதற்காகவே அன்றி வேறு காரணங்கள் எதுவும் இல்லை. 
  • பூஜை ஒழுங்கு செய்பவர் தரப்பட்ட பட்டியலில் உள்ள திரவியங்கள்,எதற்காக, பூஜையின் ஆவாகனாதி உபசார ஒழுங்கு என்ன என்பதனை அறிந்திருக்க வேண்டும்.
  • அவரவர் ந்யாசம் செய்வதற்குரிய தீரத்த பாத்திரம் உத்தரிணி கொண்டுவருதல் வேண்டும். 
  • பூஜையில் பங்கு கொள்ளும் அனைவரும் ஆவாஹனம்  முதலிய பாடல்களை சேர்த்து படிக்க வேண்டும். பத்ததி தமிழில் இருப்பதால் இவற்றை படிப்பதற்கு உங்கள் சிரத்தை மட்டுமே தேவையான ஒன்று.
  • சந்தனம், குங்குமம், அக்ஷதை முதலிய உபசாரங்களை அன்றைய நாளுக்குரிய பூஜா கர்த்தா செய்ய மற்றவர்கள் அனைவரும் மனமொன்றி பாடல்களை படித்தல் வேண்டும்.
  • காயத்ரி தியான ஸ்லோகம், காயத்ரி மந்திரம், ம்ருயுஞ்ஜெய மந்திரம் மனப்பாடமாக்கி கொள்ள வேண்டும். 
  • ஹோமத்தின் பிரதான மந்திரங்களான குரு மந்திரம், காயத்ரி, ம்ருயுந்ஜெய, துர்க்கா, சரஸ்வதி, லக்ஷ்மி, நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் ஒவ்வொருவர் ஆகுதி செய்யும் போது அனைவரும் ஜெபிக்க வேண்டும். 
  • பூஜையின் அடிப்படை சங்கல்பம், சங்கல்பம் என்பது எமது ஆன்மீக, பௌதீக வாழ்வு சிறக்க பூஜையில் உருவாகும் தெய்வ சக்தியையும் மனோ சக்தியையும் செலுத்தும் வழியாகும். ஆகவே பொது சங்கல்பத்தின் பின்னர் உங்களது வாழ்க்கைக்கு தேவையான முதன்மையான நோக்கம் ஒன்றை இந்த பூஜையின் பலனாய் நிறைவேறவேண்டும் என்று சங்கபித்து கொள்ள வேண்டும். ஒரு நோக்கம் மட்டுமே சங்கல்பிக்க வேண்டும்.
  • பூஜை முடிந்த பின்னர் எக்காரணம் கொண்டும் உபாசனை, ஆன்மீக விடயங்கள் தவிர்ந்து வேறு விடயங்களை உரையாடுதல் இல்லை என்ற விதியினை கடைப்பிடிக்க வேண்டுகிறோம். மனமும் சித்தமும் வலுவானவை இத்தகைய விருத்திகளை தடை செய்து அதற்கு மாற்றாக ஆன்மீக படைப்புகளில் ஒரு பாடத்தை வாசித்து அதுபற்றி உரையாட வேண்டும். இது பூஜையில் உருவாகும் தெய்வ காந்த சகதி சரியான முறையில் எமக்கு பயன்பட உதவும். அன்றி வேறுவிடயங்கள் உரையாடுவது களைகளுக்கு உரமிடுதல் போன்றது.
  • ஏதும் சந்தேகங்கள் இருப்பின் அதுபற்றி தெளிவான அறிவுறுத்தல்களை பூஜைக்கு முன்னர் சபாவிடம் கேட்டறிந்து கொள்ளவேண்டும்.
  • பூஜையில் உள்ள கீழ்வரும் அங்கங்களும் அவற்றின் நோக்கமும் கீழே விளக்கம் தரப்பட்டுள்ளது.
பூஜையின் அங்கம்
அதன் நோக்கம்
தாய் தந்தை வணக்கம்
உயிரை மேம்படுத்த உடல் தந்தவர்கள், அவர்கள் ஆசியும், ஆன்ம முன்னேற்றமும் இல்லாமல் எமக்கு முன்னேற்றம் இல்லை. ஆகவே முதல் வணக்கம் அவர்களுக்கு
குரு வணக்கம்
உடலிற்கு தாய் தந்தை போல் உயிரிற்கு குரு. குருவின்றி உயிர் வளராது.
சங்கல்பம்
பூஜையில் உருவாகும் தெய்வ காந்த சக்தியால் எமக்கு கிடைக்க வேண்டிய பலன்
ந்யாசம்
உடல் தெய்வ சக்தியினை ஏற்றுக்கொள்வதற்குரிய பக்குவத்தை பெறுவதற்குரிய செயல்  
உபசாரங்கள்
மனதில் அன்பு, பாசம், பரிவு போன்ற நற்குணங்கள் இல்லாமல் தெய்வ சக்தியை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆகவே பூஜை செய்பவருக்கு தெய்வ சக்தியை ஏற்றுக்கொள்ள கூடிய தகுந்த மனப்பக்கவத்தை ஏற்படுத்தும்
அஷ்டோத்திரம்
நாம் உபாசிக்கும் தெய்வத்தின் குணங்களை  எம்மில் விழிப்படைய செய்து அதனுடன் ஒன்றும் பாவனையினை தருவது. . நமஹ என்றால் இது என்னுடையது இல்லை என்று பொருள் 
தியான ஸ்லோகம்
உபாசிக்கும் தெய்வத்தின் ரூபத்தினை கூறுவது,
மந்திரம்
தெய்வ சக்தியை விழிப்படைய செய்யும் சப்த ரூபம்
ஹோமம்
நாம் செய்த பூஜையினை பிரபஞ்சத்துடன் பகிர்ந்தளிக்கும் செயல்.


Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு