எனது பாட்டனாரிடம் இருந்த சித்த வைத்திய நூல்களின் தொகுப்பு

எனது பாட்டனார் வேதாரண்யத்தில் வாழ்ந்த ஸ்ரீ சோமாஸ்கந்த குருக்களிடம் முறைப்படி தனது பதினாறாவது வயதிலிருந்து வைத்தியம் கற்றவர். மேலும் தாய் வழி மௌனகுரு சித்தரின் வைத்திய முறைகளை  கற்றவர். இந்த நூற்கள் வேதாரண்யத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் சேகரித்திருக்கலாம். நாட்டுச் சூழ்நிலை காரணமாக மாதகல் கிராமத்தில் இருந்து அனைவரும் வெளியேறிய  போதும், தனது  ஊரினை விட்டு வெளிவர மாட்டேன் என்று இறுதிக்காலம் வரை அங்கேயே வாழ்ந்து மறைந்தார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் ஊர் இருக்கும்போது இந்த நூல்களை சுவடிகளை காப்பாற்றுவதற்கு நெற் பெட்டகத்தில் அடியில் வைத்து பாதுகாத்து பின்னர் சுமுக நிலையில்  எனது அத்தையாரிடன் கொடுத்து எனது கைகளுக்கு இறுதியாக வந்து சேர்ந்தது. 

தொகுப்பின் படி  நூற்றி பதினைந்து நூற்கள் அதில் முதல் நாற்பத்து ஐந்து நூற்கள் காணாமல் போய்விட்டது.  ஆக மொத்தம் இந்த தொகுப்பில் எழுபத்து ஏழு நூற்கள் கையிருப்பில் உள்ளன. 

இவற்றில் சிலது தாமரை நூலக பதிப்பில் வந்திருக்கின்றன. அப்படி வெளிவராதவற்றை எனது பாட்டனாரின் வைத்திய சேவை நினைவாக பதிப்பிக்கலாம் என்று இருக்கிறேன். குருவருளும் திருவருளும் கூட வேண்டும்! 

 1. அகத்தியர் ஊத்துமுறை - ௨௫ (பதினெட்டாவது பாடலில் இருந்து) 
 2. அகத்திய மாமுனிவர் கருணை வாகடம் 
 3. அகத்திய மாமுனிவர் சித்தாதியெண்ணெய்
 4. அகத்திய மாமுனிவர் தைலச்சுருக்கம் 
 5. அகத்திய மாமுனிவர் செந்தூரம் முந்நூறுக்கும் சூத்திரம் 
 6. அகத்திய மாமுனிவர் முப்பு கெந்தக தைலம் 
 7. அகத்திய மாமுனிவர் காவிய சுருக்கம் 
 8. அகத்திய மாமுனிவர் முப்பு தீக்ஷை சூத்திரம் 
 9. அகத்திய மாமுனிவர் வகாரச் சூத்திரம் 
 10. அகத்திய மாமுனிவர் ஞான உபதேசம் 
 11. அகத்திய மாமுனிவர் பாலவாகடம் 
 12. அகத்திய மாமுனிவர் ஞானம் 
 13. அகத்திய மாமுனிவர் கேசரி குருநூல்
 14. அகத்திய மாமுனிவர் வைத்திய சூத்திரம் 
 15. அகத்திய மாமுனிவர் சுத்தஞானம் 
 16. அகத்திய மாமுனிவர் ஞானம் .
 17. அகத்திய மாமுனிவர் அடுக்கு நிலை போதம் 
 18. அகத்திய மாமுனிவர் வாதச் சுருக்கம் 
 19. அகத்திய மாமுனிவர் வழலை சுருக்கம் 
 20. அகத்திய மாமுனிவர் ஞானச் சுருக்கம் 
 21. அகத்திய மாமுனிவர் காரண சூத்திரம் 
 22. அகத்திய மாமுனிவர் ரசக்குளிகை 
 23. போக நாயனார் அருளிய பூசா விதி 
 24. போக நாயனார் சுடலை சூத்திரம் 
 25. போக நாயனார் முக்கோண சக்கர மகிமை 
 26. போகமுனிவர் பரங்கி பாஷாண வைப்பு 
 27. போகமுனிவர் காத்தாடி வித்தை 
 28.  போகமுனிவர் நேத்திர ரோக தைலம் 
 29. போகமுனிவர் பொம்மை காகித ஓட்டம் 
 30. போகமுனிவர் சூதமுனி நாடி 
 31. சூதமாமுனிவர் ராஜாங்க நாடி 
 32. சுந்தரானந்தர் பூசா விதி 
 33. சுப்பிரமணியர் ஞானம் 
 34. மச்ச முனி சூத்திரம் 
 35. மச்ச முனி சன்னிக் கியாழம் 
 36. திருமூலர் கிரந்திஎண்ணை
 37. திருமூலர் நாதாந்தக் குறிப்பு 
 38. கொங்கனவர் முக்காண்ட சூத்திரம் 
 39. கொங்கணவர் பூசா விதி 
 40. கொங்கணவர் முக்காண்ட திருமந்திரம் 
 41. கொங்கணவர் கருக்குளிகை 
 42. நந்தீசர் குளிகை 
 43. பதஞ்சலியார் வாத சூத்திரம் 
 44. கொங்கணவர் முப்பு 
 45. கைலாச சட்டமுனி நாயனார் அருளிச் செய்த சூத்திரம் 
 46. சட்டமுனி கற்பவிதி 
 47. உரோமரிஷி சூத்திரம் 
 48. உரோமரிஷி கருமானச் சூத்திரம் 
 49. உரோமரிஷி முப்பு சூத்திரம் 
 50. உரோமரிஷி வகார சூத்திரம் 
 51. கவுபால சித்தர் அருளிய ஆணிக்கோர்வை
 52. திருவள்ளுவர் நாதாந்த திறவுகோல் 
 53. கருவூரார் பூஜா விதி 
 54. இராமதேவர் பூஜா விதி 
 55. நந்தீசர் வைத்தியம் 
 56. நந்தீசர் முப்பு பிரணவ சூத்திரம் 
 57. நந்தீசர் குளிகை 
 58. நந்தீசர் பூஜா விதி 
 59. நந்தீசர் பூர்வ முப்பு சூத்திரம் 
 60. நந்தீசர் ஞானம் 
 61. நந்தீசர் திராவகம் 
 62. தட்சிணாமூர்த்தி பட்சணி
 63. தேரையர் வைத்தியம் 
 64. ஜனகர் பிரம்மா தண்டி எண்ணெய் .
 65. குதம்பைச் சித்தர் சந்திரோதயக் குளிகை 
 66. கண்ணானந்தார் கருடங் கிழங்கு எண்ணெய் 
 67. பாம்பாட்டிச் சித்தர் பூபதி மாத்திரை 
 68. பதஞ்சலியார் வஜ்ர கண்டி மாத்திரை 
 69. சூதமாமுனிவர் மேக நாதக் குளிகை 
 70. வேதமுனிவர் சூடாமணி மாத்திரை 
 71. காசிப நாதர் கறியநாதக் குழம்பு 
 72. யூகிமாமுனிவர் சிலோதரி மாத்திரை 
 73. கல்லுளி சித்தர் ஜெயராசா கற்பூர மாத்திரை 
 74. புலிப்பாணி சித்தர் கற்பக முத்தொளி பற்பம் 
 75. வேதாந்த சித்தர் நாக பற்பம் 
 76. கஞ்ச மலை சித்தர் இரச பதங்கம் 
Comments

 1. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 2. இந்த புத்தக நகல் கிடைக்குமா ஐயா

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு