அகஸ்திய மகரிஷியின் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா - மனோன்மணி பூசை அகவல்

கடந்த 2014 December மாதத்தில் மனோன்மணி பூசை அகவல் என்று ஒரு பதிவு இட்டிருந்தோம்.  பதிவு இங்கே,  இந்த மனோன்மணி பூசை அகவல் தொடர்பான பின்னணித் தகவலும் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா பற்றி அடுத்து வெளிவர உள்ள நூல் பற்றிய விபரங்கள் இங்கு குருவின் ஆணைக்கு அமைய பகிர்கின்றோம்.

1894ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட மனோன்மணி பூசை அகவல் நூல், எனது பாட்டனாரின் சேகரிப்பில் இருந்து 


1894ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட மனோன்மணி பூசை அகவல் நூல்


இந்த அகவல் என்னைப் பொறுத்த வரையில் மிகவும் அதிமுக்கியமான மந்திர பாராயணம்.  எனது தந்தையின் உபதேசப்படி சிறுவயதில்  அகத்திய மகரிஷியை குருவாக எண்ணி வணங்கும் போது, எனது தந்தையார் கந்தர்சஷ்டி கவசம் படிப்பார், தாய் விநாயாகர் கவசம் படிப்பார், இவர்கள் படிக்காத வழக்கில் இல்லாத அகத்தியர் பாடிய தோத்திரம் ஒன்றை நானும் பாடவேண்டும் என்று  எண்ணிய காலத்தில் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்த அற்புத தோத்திரம் இது.  இந்த தோத்திரத்தை  எனது காயத்ரி தீட்சை கிட்டும்வரை பல வருடங்கள் அனுதினமும் படித்து வந்தேன். இதன் பொருள் அக்காலத்தில் அறியும் பக்குவம் இருக்கவில்லை. பின்னர் காயத்ரி உபாசனையில் செல்லும்போது இதனை படிப்பது நின்று விட்டது. 

பல்லாண்டுகளின் பின்னர் ஸ்ரீ வித்யா உபாசனை தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் குருநாதர் ஆணைக்கு அமைய அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் எழுதத் தொடங்கிய காலத்தில் மீண்டும் இந்த அகவல் நினைவுக்கு வர அதனை எழுதி கடந்த டிசம்பர் எட்டாம் திகதி 2014 இல் பதிவித்தோம். அப்போதும் இதன் பொருள் பற்றி சிந்திக்கவில்லை. ஞாபகத்தில் இருந்ததை எங்காவது பதிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவித்தோம். 

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் எழுதி முடித்து எமது குருநாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதரிடம் அவர் உடலை உகுக்கும் முன்னர் ஆசி வினாவிய போது சித்த மார்க்க ஸ்ரீ வித்யா பற்றி தியான சாதனை மூலம் பொருள் அறிந்து ஆர்வம் உள்ள சாதகர்களுக்கு பயன்படும் படி நூல்கள் ஆக்கும் படி ஆசி கூறினார்கள். அவரது ஆசியை ஏற்றுக்கொண்டு எங்கு, எப்படி சித்த மார்க்க ஸ்ரீ வித்யா பற்றி எழுத தொடங்குவது என்று பிரார்த்திக்க ஏற்கனவே "நீ அனுதினமும் படித்த அகவலில் இருந்து தொடங்கு" என்று மானசீக ஆணை வர பல நாட்கள் சிந்தனையின் பின்னர் கடந்த தீபாவளி அமாவாசையின் பின்னர் நாம் சிறுவயதில் பாராயணம் பண்ணிய இந்த அகவல் ஞாபகத்திற்கு வந்தது. 

இந்த அகவலை படிக்க படிக்க விரிந்த தியான சாதனை அனுபவம் இதன் விளக்கவுரையாக வெளிவர உள்ளது. மேலும் இந்த அகவலை தற்போது படிக்கும் போது இரண்டு இடங்களில் அமுத வர்ஷினி (அம்ருத வர்ஷினி) என்ற பெயர் வரும்போது எனக்கு மிகுந்த ஆச்சரியமும் பூரிப்பும் உண்டாகியது. ஏனெனில் எனது மகள் பிறந்து அவளை கைகளில் தூக்கியபோது எமது மனதில் உதித்த நாமம் அம்ருதவர்ஷினி, இந்த பெயரை எனது குருநாதரின் ஆசியிற்கு அனுப்பிய போது மிகுந்த மகிழ்வுடன் அதனையே சூட்டும்படி ஆசி தந்தார்கள். இந்த அகவலில் அம்ருதவர்ஷினி என்ற பெயர் இருப்பது இந்த அகவல் எனது தனிப்பட்ட அன்புக்கும் விருப்பத்திற்கும் உரியதாக இருப்பதற்கு ஒரு காரணம். 

மேலும் நான் சிறுவயதில் இந்த அகவலில் பொருள் தெரியாமல் வேண்டி பிரார்த்தித்த ஸ்ரீ வித்யா சார்ந்த உபதேசங்கள் எல்லாம் உருவடிவாய் எனது குருநாதர் அம்ருதானந்த நாதரால் பிற்காலத்தில் உபதேசிக்கப்பட்டது, இந்த பிரபஞ்சத்தில் அகஸ்தியர் முதலான ஆதி குருநாதர்களது ஞானம் குருபரம்பரையாய் வேண்டுபவர்களுக்கு தரப்படுகிறது என்பதற்கு ஒரு அனுபவ சாட்சி! 

வெகுவிரைவில் இன்னும் பல விபரங்களுடன் அகத்திய மகரிஷியின் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா நூலுப்பெற குருமண்டலத்தை பிரார்த்திப்போம். 

பேரன்புடன்

ஸ்ரீ ஸக்தி சுமனன் 


Comments

 1. அற்புதம் :-) ஆர்வமுடன் காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 2. காத்துள்ளேன் ஐயா....

  ReplyDelete
 3. waiting for agasthiar blessings

  ReplyDelete
 4. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 5. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு