நீங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்கப்படுகிறது!அன்பர்களே,

எமது வலைத்தளத்தை வாசிக்கும் நீங்கள் இங்கு கூறப்பட்டுள்ள யோக ஞான விளக்கங்களை புரிந்து, அதுபடி நின்று, குருவருள் பெற்று, உலகவாழ்விலும், ஆன்ம வாழ்விலும் முன்னேற, தெய்வ குணத்தை பெற்று தெய்வ சக்தி பெற்றிட உங்கள் அனைவருக்கும் ஆக வேண்டி தினமும் பிரார்த்திக்கும் படி குருநாதர் கூறிய வாக்குக்கு அமைய இதுவரை ஸ்ரீ ஜோதி சாதனைக்கு பதிந்தவர்களதும், காயத்ரி சாதனைக்கு பதிந்தவர்களது பெயரும் ஏற்கனவே எமது தினசரி வாரந்திர தியான சாதனையில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. 

மேற்கூறிய சாதனையில்  இணையாமல் உங்கள் பெயரை பிரார்த்தனையில் இணைத்து  தெய்வ சக்தியின், குருமண்டலத்தின் அருளை பெற விரும்புபவர்கள் கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றவும், 

  1. கீழ்வரும் பிரார்த்தனை வாக்கியத்தை நிரப்பி sithhavidya@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்
  2. நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிடவும் உ+ம்: (தஞ்சாவூரில்) பிறந்த, ஜென்ம நட்சத்திரம் (உ+ம்: பூர) நட்சத்திரத்தில் உதித்த, உங்கள் தாயின் பெயர் (உ+ம்: ஸ்ரீமதி லக்ஷ்மியின்) மகன்/ மகள் உங்கள் பெயர் உ+ம்: ஹரிஹரன்

    உதாரண வாக்கியம் வருமாறு:  தஞ்சாவூரில் பிறந்த, பூர நட்சத்திரத்தில் உதித்த ஸ்ரீமதி லக்ஷ்மியின் மகன் சிவஹரிஹரன்
உங்கள் கோரிக்கைகள், குறைகள் எவற்றையும் குறிப்பிடக் கூடாது, உங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டிய விருப்பங்கள் எதுவும் இருப்பின் அவற்றை நாம் கீழே சொல்லிய படி தினசரி உங்கள் வீட்டில் இருந்து பிரார்த்தித்து வரவேண்டும். 

பிரார்த்தனைக்கான உங்கள் விண்ணப்பம் கிட்டியவுடன் அவற்றை எமது தினசரி வாராந்த பிரார்த்தனையில் சேர்த்துக்கொள்வோம். உங்களுக்கான பிரார்த்தனை கீழ்வருமாறு இருக்கும். 

எமது பூஜையில், தியானத்தில் பங்கேற்ற 
தஞ்சாவூரில் பிறந்த, சதய நட்சத்திரத்தில் உதித்த ஸ்ரீமதி லக்ஷ்மியின் மகன் ஹரிஹரன்
 குடும்பத்தில், இல்லத்தில் அகத்திய மகரிஷியின் அருளாசியும், சித்த வித்யா குருமண்டல குருமார்களின் அருளாசியும் அருளாற்றலும், துருவ நட்சத்திரத்தின் அருள் ஆற்றலும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும், ஆதிபராபட்டாரிகையின் அருளாற்றலும் பரவி அவர்கள் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவரது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா! அவர்கள் அனைவரும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும், பொருள் நலம், பொறுமை, ஈகை பொருந்தி ஆயுள், ஆரோக்கியம், வீரம், அசைந்திடா பக்தி, அன்பு, தேயுறா செல்வம், கீர்த்தி பெற்றிட வேண்டும்! 

இப்படி  நாம் பிரார்த்திப்பதை ஏற்றுக்கொள்ள தினசரி உங்கள் பூஜை அறையில் உங்களுக்கு வசதியான நேரத்தில் அமர்ந்து விளக்கேற்றி, சித்த வித்யா குருமண்டல நாமாவளியை ஒன்பது முறை சொல்லி, உங்கள் மனவிருப்பங்களை நாம் கீழே கூறியுள்ள முறையில் சங்கல்பித்து எமது பிரார்த்தனையில் உருவாகும் அருள்காந்த சக்தியை ஏற்றுக்கொண்டு  அவை குருமண்டலத்தின் அருளாசியால் நிறைவேறுவதாக சிறிதுநேரம் பாவித்து வரவேண்டும். 

பிரார்த்தனையில் ஒருபோதும் குறைகளை சொல்லி கவலைப்படக்கூடாது. அந்த நிலை மாறுவதற்குரிய நிலையினை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். உதாரணம்:  உங்களது நிலை ஐந்து இலட்சம் கடன் என்றால் " கடவுளே எனது ஐந்து லட்சம் கடன் தீரவேண்டும்" என்று ஒருபோதும் பிரார்த்திக்க கூடாது. சரியான முறை " சித்த வித்யா குருமண்டல அருளாசியால் அருளாற்றலால் குறித்த தினத்திற்குள் ஐந்து இலட்சம் பணம் கிடைத்து எனது வியாபாரம் செழிக்கும்" என்று உறுதியான வாக்கியமாக இருக்கவேண்டும். இப்படி உறுதியாக எண்ணும்போது மட்டுமே தெய்வ சக்தி எமது மனதில் புகுந்து அதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை உண்டு பண்ணி காரிய சித்தியை ஏற்படுத்தும். 

அன்பர்களே, இதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் தெய்வ உதவியினை பெறுவீர்கள் என்பதனை உறுதிகூறுகிறோம்! 

எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்கு மானசீகமாக உதவுவதில் நாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்! ஆர்வமும் தேவையும் உள்ளவர்கள் இணைந்து பலன் காண்க! 

தெய்வ குணத்தை வளர்த்து தெய்வ சக்தியை பெற்றிடுவோம்! 

என்றும் பேரன்புடன்  

ஸ்ரீ ஸக்தி சுமனன் 

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு