குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 29, 2013

ஸர்ப்ப சக்தி எனும் குண்டலினி யோக விளக்கம் - Tamil Translation of Serpent Power of Arthur Avalon

குண்டலினி யோகம் பற்றிய மேலைத்தேய சாதகர்களின் புரிதல் -
பேராசிரியர் மொனியஸ் வில்லியமின் சமஸ்கிருத அகராதியின் படி:

தற்காலத்தில் மேற்கத்தையே ஆன்மீகர்களில் சிலர் இந்த விடயம் தொடர்பான ஆர்வத்தினைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆசிரியர்கள் இந்து தத்துவங்ககளை சரியாக விளங்கிக்கொள்ளாமலும், புரிதல் இன்றியும், தவறாக விபரித்து வருகின்றனர். இந்த நிலை இங்கு குறிப்பிடப்படும் நபர்களை மட்டும் தொடர்புடையவை இல்லை. இப்படியான நிலையினை விளங்கிக்கொள்வதற்கு கீழ்வரும் சில உதாரணங்களைப் பார்ப்போம். எல்லோருக்கும் நன் கு பரிட்சயமான சமஸ்கிருத அகராதியில்(9) சக்கரங்கள் என்பது கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது "வட்டங்கள் அல்லது உடலில் காணப்படும் ஆன்மீகம் சார்ந்த அழுத்தப்புள்ளிகள் அல்லது கைரேகையுடன் தொடர்பு பட்ட குறியீடுகள்" எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்து சக்கரங்களின் அமைவிடம் பிழையான முறையில் விபரிக்கப்பட்டுள்ளது. மூலாதாரத்தின் அமைவிடம் இடுப்புக்கூட்டின் முன் மைய பாகமுள்ள பொச்சு எலும்பிற்கு அண்மையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாதிஷ்டானம் நாபிப்பகுதியில் உள்ளதாகவும், இதய மையத்தில் அமைந்துள்ள அநாகதம் மூக்கின் அடிப்பகுதியில் உள்ளதாகவும் விபரிக்கப்பட்டுள்ளது. தொண்டைப்பகுதியில் உள்ள விசுத்தி மூளையின் முன்பகுதியில் உள்ளதாகவும், பிரம்மாந்திரம் என அழைக்கப்படும் உச்சிக்குழியில் ஆக்ஞா அமைந்துள்ளதாகவும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய ஆசிரியர்கள் இத்தகைய பெரிய தவறுகள் இன்றி தகவல்களின் சரியான தன்மையில் குறைவாக காணப்படுகின்றனர். ஆதலால் மறையியலில் குறித்த அளவு அறிவு கொண்ட ஆசிரியனாகிய நான் கூறுகிறேன் சுஷும்னா என்பது இட, பிங்கலைகள் சமப்படும் போது உருவாகும் ஒரு "சக்தி" ஆகும். அந்த நிலையில் முள்ளந்தண்டின் ஒவ்வொரு பகுதியினூடாக ஒரு மின்பொறி போன்ற சக்தி பாய்ச்சல் படைபெறும், இது சாக்ரல் பிளெக்ஸஸ் எனப்படும் மூலாதார நரம்புத்தொகுதிக்கு அண்மையில் இருந்து விழிப்படைந்து முள்ளந்தண்டு வழியாக மூளையினை அடைகிறது. இந்த சக்தி மூளையினை அடையும் போது "தான் இந்த சூன்யமான கருமையான வெளியில் பயங்கள், நடுக்கங்கள் எதுவுமற்ற, நித்தியமான உடலற்ற ஒரு ஆன்மா" என்கின்ற புதுவித அறிவினை பெறுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட ஆசிரியர் இந்த குண்டலினியின் பாய்ச்சலே நாடிகள் எனப்படுகிறது எனவும் சுஷும்னா என்பது பிரம்மாந்திரம் வரை உள்ள ஒரு நரம்புக்கலமாக குறிப்பிடுகிறார். அதுபோல் தத்துவங்கள் ஏழு எனக்குறிப்பிடுகிறார். இத்தகைய சரியற்ற தகவல்கள் நிறையவே காணப்படுகிறது. 

இது பற்றி எனது கருத்து சுஷும்னா என்பது ஒரு சக்தியோ, அல்லது எதையும் கடத்தும் ஒரு சக்தியோ அல்ல,அது மூன்று நாடிகளில் வெளிப்புறம் காணப்படும் ஒரு சுற்று, உடலில் உள்ள பிரபஞ்ச சக்தியான குண்டலினி எனப்படு சக்தி விழிப்படையும் போது அது நாடியாக இருப்பதில்லை, அது சுஷும்னாவின் உள்ளே உள்ள சித்ரினி நாடியினூடாக பயணிக்கிறது. இந்த நாடி சகஸ்ராரத்திற்கு கீழே உள்ள பன்னிரெண்டு இதழ் தாமரை சக்கரத்தில் முடிவுறுகிறது. இந்த தமரைக்கு கீழே பிரம்மாந்திரம் இருக்கிறது. இப்படியான தவறுகளை இந்த துறையில் பரீட்சயம் உள்ளவர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த யோகத்தில் எனக்கு உள்ள அறிவினை இங்கு பகிர்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆனால் நான் இங்கு பௌதீக உடற்கூற்றியல் அடிப்படையில் சக்கரங்களிப்பற்றிய பிழையான புரிதலை விளங்கிக்கொள்ள சில நவீன இந்திய ஆசிரியர்களையும் குறிப்பிட விரும்புகிறேன், இப்படிப் விளங்கிக்கொள்ள நினைப்பது தவறானது மட்டுமல்ல, விடயத்தில் இருந்து விலகிச் செல்வதற்கும் வழி கோலும். உடற்கூற்றியல் சக்கரங்களை விளங்கிக்கொள்ள முடியாது, ஏனெனில் சக்கரங்கள் உணர்வு மையங்கள், அவற்றை விழிப்படையச் செய்யும் பிராணன் பௌதீக உடலுடன் தொடர்பு பட்டது. அது அவர்கள் கூறும் விடயத்துடன் தொடர்பு பட்டது. உடலியலினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு சக்கரங்களை புரிந்துகொள்ள நினைப்பவர்கள் சரியாக புரிந்துகொள்ளமுடியாது.

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 30: நாமங்கள் 76 - 80

விசுக்ர-ப்ராணஹரண்-வாராஹி-வீர்ய-நந்திதாயை (76)
விசுக்ரனை கொன்ற வாராஹியின் வீர்யத்தை மெச்சுபவள்
விசுக்ர‌ன் ப‌ண்டாசூர‌ன‌து ம‌ற்றைய‌ ச‌கோத‌ர‌ன் (மேலே நாமாவில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. வாராகி விசுக்ர‌னை வ‌த‌ம் செய்தாள். இத‌னால் ல‌லிதை மிக்க‌ ம‌கிழ்வுற்றாள்.
74,75, 76 ம் நாமாக்க‌ள் பாலா, ம‌ந்திரிணி, வாராகி ஆகிய‌ மூவ‌ரைப்ப‌ற்றியும் பேசுகிற‌து. க‌றை அல்ல‌து அழுக்கினை ச‌ம‌ஸ்க்ருத‌த்தில் ம‌ல‌ என‌ப்ப‌டும். இந்த‌ மூன்று தேவிய‌ரும் புல‌ன் இச்சையால் ல‌லிதையின் ப‌க்த‌னின் ம‌ன‌தில் எழும் அழுக்கினை அக‌ற்றுகின்ற‌ன‌ர். இந்த‌ ம‌ன‌ அழுக்குக‌ளில் மிக‌வும் மோச‌மான‌து ஆண‌வ‌ம், பாலாவினைப்ப‌ற்றிக் கூறும் போது பாலா என்றால் ப‌ல‌ம் என‌ப்ப‌டுகிறது. ஒருவ‌ன் தெய்வ‌ ச‌க்தியை த‌ன்னில் ஏற்றுக்கொள்ள த‌குந்த‌ வ‌கையில் உட‌லைப் பல‌மாக‌ வைத்திருக்க‌ வேண்டும். பொதுவாக‌ தீட்சையின் போதும் தியானத்தின போதும் ச‌க‌ஸ்ரார‌ ச‌க்க‌ர‌த்தினூடாக‌வும், பிட‌ரிச்ச‌க்க‌ர‌த்தினூடாக‌வும் தெய்வ சக்திகள் செலுத்தப்படுகின்றன. மந்திரிணி தேவி பஞ்சதசி, சோடஷி போன்ற மந்திரங்களின் வீரியமாக குறிக்கப்படுகிறாள். புராதன மந்திரசாஸ்திர விதிப்பிரகாரம் ஒவ்வொரு மந்திரமும் குறித்த நியமங்களுடன் குறித்தளவு தடவைகள் ஜெபிக்கப்படவேண்டும். இதனை புரஸ்சரணம் என்பார்கள். மூன்று தேவிய‌ர்க‌ளிலும் வாராகி மிக‌வும் உக்கிர‌மான‌வ‌ள், அவ‌ளால் எந்த‌வித‌ ஒழுக்க‌ஹீன‌ங்க‌ளையும் பொறுத்துக்கொள்ள‌மாட்டாள். வாராகி தேவி உபாச‌னையில் சாத‌க‌ன் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ க‌ட்டுப்பாடுக‌ள் ஒழுக்க‌ங்க‌ளை குறிக்கும், அதாவ‌து வாராகியினை உபாசிப்ப‌த‌ன் மூல‌மே உபாச‌க‌ன் தேவியினை உபாசிக்கும் ப‌ண்பினைப் பெறுகின்றான். இந்த‌ மூன்று தெய்வ‌ச‌க்திக‌ளும் லலிதையாகிய‌ உய‌ர் தெய்வ‌ ச‌க்தியினை அடைய‌ உபாச‌க‌ன் கொண்டிருக்க‌வேண்டிய‌ ப‌ண்புக‌ளின் வ‌டிவ‌ம் அல்ல‌து ப‌ண்புக‌ளை வ‌ழ‌ங்குப‌வ‌ர்க‌ள். அந்த‌ மூன்று ப‌ண்புக‌ளும் உட‌ல் வ‌லிமை, ம‌ன‌தினை க‌ட்டுப்ப‌டுத்தும் ஆற்றல் (இது மந்திர ஜெபத்தால் வாய்க்கும், ஒழுக்க‌மும் புலன்களின் க‌ட்டுப்பாடும் ஆகும், இவ‌ற்றை அடைந்த‌வ‌ர்க‌ள் த‌ன்னில் இறைவ‌னை உண‌ர‌லாம். இந்த‌ நிலையினை அடைந்த‌ சாத‌க‌ன் த‌ன்னில் த‌ன‌து உட‌லினை முக்தி அடைவ‌த‌ற்குரிய‌ சாத‌னமாக‌ உண‌ர்ந்து தேவியுட‌ன் இர‌ண்ட‌ற‌க்க‌ல‌ப்பான்.

காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வராயை (77)
காமேஸ்வரது முக தரிசனத்தால் கணேசனைப் பெற்றவள்
க‌ணேச‌ர் ல‌லிதை காமேச்வரரை பார்க்கும் பார்வையில் தோன்றிய‌வ‌ர். க‌ணேச‌ர் சிவ‌ன‌தும் பார்வ‌தியின‌தும் மூத்த‌ புத‌ல்வ‌ர். ப‌ண்டாசூர‌னுட‌னான‌ போரில் ப‌ண்டாசூர‌ன் த‌ன‌து ப‌டைக‌ள் அழிக்க‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தைக் காண்கிறான். அத‌னைத்த‌டுக்கும் முக‌மாக‌ ஜ‌ய‌ விக்கின‌ம் என்ற‌ ய‌ந்திர‌த்தினை ல‌லிதையின் சேனையின் ந‌டுவில் வைக்கிறான். ய‌ந்திர‌ங்க‌ள் ம‌ந்திர‌ப் பிர‌யோக‌ங்க‌ளுட‌ன் ப‌ய‌ன்ப‌டுத்தும் போது மிக‌ச் ச‌க்தி வாய்ந்த‌வை. இந்த‌ ய‌ந்திர‌ம் ல‌லிதையின் சேனையினுள் வைக்க‌ப்ப‌ட்ட‌வுடன் லலிதையின் படையினர் தன்னம்பிக்கை இழந்து சோர்வுறத்தொடங்குகின்றனர். மந்திரங்களின் அதிபதியான மந்திரிணி இதனை உணர்ந்து லலிதையிடம் முறையிடுகின்றாள். இந்த விக்கின யந்திரம் எவர் ஒருவர் கீழ்வரும் எட்டு புர்யஷ்டகங்களையும் வெற்றி கொண்டவரோ அவரால் மட்டுமே நீக்கப்படக்கூடியதாக இருக்கிறது. அந்த எட்டுப் புர்யஷ்டகங்களும் 1)ஐந்து கர்மேந்திரியங்கள் 2)ஐந்து ஞானேந்திரியங்கள் 3)அந்தக்கரணங்க ( நான்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) 4) ஐந்து பிராணன்கள் 5) பஞ்ச பூதங்கள் 6)ஆசை 7) அறியாமை 8)கர்மா இந்த புர்யஷ்டகத்தின் எட்டுத்தொகுதிகளும் இருபத்தியேழாக விரிகின்றது, இத்துடன் சிவன் சேர்க்கப்படும் போது மொத்தம் இருபத்தியெட்டு ஆகின்றது. இதுவே மகாகணபதி மூல மந்திரங்களின் அட்சர‌மாகின்றது. மகா கணபதி மந்திரத்தின் இந்த 28 அட்சரங்களும் 27 புர்யஷ்டங்களை கட்டுப்படுத்தி சாதகனில் குணங்கள் உடைய சிவத்தன்மையினை உருவாக்கிறது. குணங்கள் உடைய சிவத்தன்மை (சகுணப்பிரம்மம்) உண்டாகி படிப்படியாக குணங்கள் அற்ற் தூய சிவமாகிய நிர்குணப்பிரம்மத்தினை அடைவிக்கிறது. இறுதியாக சாதகன் முக்தி அடைவதன் மூலம் எல்லையற்ற பேரானந்தத்தினை அடைகிறான்.

சிவ சூத்திரம் (3.42) கூறூகிறது; "பூத கஞ்சுகி தத விமுக்தோ புஹ பதிசமக பரஹ", இதன் பொருள் " அவனிற்கு (யோகியிற்கு), பஞ்ச பூதங்கள் வெறும் கவசம் மட்டுமே, முக்தியடைந்த அந்தக்கணத்தில் அதியுயர்ந்த சிவத்தன்மையினை அடைகிறான்".
இந்த நாமம் ஒருவன் முக்தியடையும் பாதையில் முன்னேறும் படிமுறைகளைக்குறிப்பிடுகிறது.

மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதாயை (78)
விக்ன யந்திரத்தை பொடியாக்கிய கணேசரைக்கண்டு மகிழ்ந்தவள்’
இது முதல் நாமத்தின் தொடர்ச்சி, மஹா கணேசர் பண்டாசூரனால் லலிதையின் சேனைக்குள் வைக்கப்பட்ட ஜய விக்ன யந்திரத்தினை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்டவர். அதன்படி கணேசர் அந்த யந்திரத்தினை அகற்றி லலிதையின் படையினை தன்னபிக்கை பெற உதவினார். அந்த யந்திரத்தினை அகற்றியதை அறிந்து லலிதை மிக்க மகிழ்வுற்றாள்.  இந்த இரண்டு நாமங்களினதும் அழகினை நாம் அறிய வேண்டும். எல்லாவித தீயகாரியங்களும் ஜய விக்ன யந்திரத்தினால் குறிக்கப்படுகிறது. எல்லாவித தீய காரியங்களுக்கும் காரணம் மாயை, மாயையினை உண்டாக்கியவள் லலிதை அவள் மட்டுமே அந்த மாயையின் திரையினை அகற்ற முடியும்.  அவள் அந்த மாயை திரையினை அகற்றிய அக்கணம் சிவனை உணரமுடியும். ஆனால் லலிதை தானாக ஒருபோது அந்த மாயைத்திரையினை அகற்ற மாட்டாள். ஒருவனுடைய முயற்சி கண்டு மட்டுமே அவள் மாயையினை அகற்றுவாள். அதனாலேயே அவள் குரு என அழைக்கப்படுகிறாள். இது பற்றிய விபரம் 713 வது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

பண்டாஸுரேந்திர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்-த்ரவர்ஷிதாயை (79)
பண்டாஸுரன் விட்ட பாணங்களுக்கு பிரதி பாணங்களை விட்டவள்

பண்டாசூரனால செலுத்தப்பட்ட அஸ்திரங்களை தன்னுடைய ஆயுதங்களால் திருப்புகிறாள். இங்கு இரண்டு வகையான ஆயுதங்கள் கூறப்படுகின்றன. ஒன்று அஸ்திரம், இது எதிரிகள் மீது வீசப்படுவது, தற்கால வெடிகுண்டுகளை ஒத்தது. இரண்டாவது சஸ்த்ர, இது எப்போதும் கையில் இருப்பது, தற்கால துப்பாக்கிகளை ஒத்தது. லலிதையின் கைகளில் இருக்கு ஆயுதங்கள் எமது முயற்சியின் மூலம் அவித்தையினை அழித்து ஆனந்தத்தினை அடைய உதவுகின்றன. அவளது கைகளில் உள்ள ஆயுதங்கள் இருமை என்ற மயக்கத்தினை அழிக்கின்றது. 77,78, 79 ஆகிய இந்த மூன்று நாமங்களும் தன்னையறியும் பாதையினை ஆரம்பித்த சாதகன் பயணிக்க வேண்டிய படிகளையும், அதற்கு தேவி எப்படி உதவி உயர்ந்த இலட்சியத்தை அடைவிக்கிறாள் என்பதையும் விபரிக்கின்றது.

கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருத்யை (80)
கைவிரல் நுனிகளால் நாராயணனது தசாவதாரங்களை தோற்றிவித்தவள்
தனது நகங்களில் இருந்து நாராயணனின் பத்து அவதாரங்களை தோற்றுவித்தவள். பண்டாசூரன் தனது சர்வாஸுரஅஸ்திரத்திலிருந்து இராவணன் முதலான பத்து அசுரர்களையும் தோற்றுவித்தான். அந்தப்பத்து அசுரர்களும் நாரயாணன் மூலம் பத்து அவதாரங்களில் கொல்லப்பட்டார்கள். ஜீவனும் ஈஸ்வரனும் சேர்ந்த வடிவம் நாராயணன், தசக்ருத என்பது மனிதனது ஐந்து நிலைகளான விழிப்பு, உறக்கம், கனவு, துரியம் (முதல் மூன்று நிலைகளிலும் உணர்வுடன் இருத்தல்) தூரியாதிதம் (துரியத்திற்கு மேற்பட்ட நிலை, இந்த நிலையில் இருமை அற்று உணர்வு பிரம்மத்துடன் கலக்கத் தொடங்கும்)பிரம்மத்தின் ஐந்து தொழிகளான்  ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல்,மறைத்தல் ஆகியன சேர்ந்து தஸக்ருத எனும் பத்தும் உருவாகின்றன. இங்கு நாராயண என்பது மஹா விஷ்ணுவைக்குறிக்கவில்லை என்றே கருத வேண்டும். விஷ்ணு லலிதையின் சகோதரர், ஆகவே வாக்தேவிகள் இங்கு குறிப்பிடப்படும் நாராயணன் வேறு விடயத்தினை குறிப்பதாக அமையவேண்டும். ஆகவே இதன் சரியான பொருள் மனிதனது ஐந்து உணர்வு நிலைகளும், பிரம்மத்தின் ஐந்து தொழில்களுமாக தனது பத்து நகங்களில் இருந்து உருவாக்கினாள் என்பதாகும்.
ஏற்கனவே தேவியின் பிரகாச விமர்ச ரூபங்கள் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த சகஸ்ர நாமத்தில் உள்ள ஒவ்வொரு நாமமும் இந்த இரண்டு ரூபத்தில் ஏதாவது ஒன்றைப்பற்றியே விபரிக்கும்.



{துரியம், தூரியாதீதம் பற்றிய மேலதிக குறிப்புகள்: துரியம் உணர்வின் நான்காவது நிலை, இது மற்றைய விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளையும் ஒன்றாகச் சேர்த்த நிலை, இந்த துரிய நிலை ஆன்மீக உணர்வு நிலை, இது உளவியல் குறிப்பிடும் உணர்வு நிலையிலும் மாறுபட்டது. இது தெய்வத்தினை சாட்சிபாவமாக உணர்ந்த நிலை.
துரியாதீத என்பது மனது துரியத்தினை கடந்த நிலை, இந்த நிலையில் மனதின் பாகுபடுத்தும் தன்மை இழந்து பிரம்மத்துடன் ஒன்றும் நிலை ஆரம்பிக்கும். இந்த நிலையினை அடைந்தவருக்கும் முழுப்பிரபஞ்சமும் ஒன்றான பொருளாகா அதீத ஆனந்தத்தில் நித்தமும் திளைத்திருப்பர். 


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" } -  சுமனன் 
******************************************************************************************************************************************

Saturday, July 27, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 29: நாமங்கள் 71 - 75

ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்நிப்ராகார-மத்யகாயை (71)
ஜ்வாலாமாலினி சக்தியால் அமைக்கப்பட்ட அக்னிக்கோட்டை நடுவிலிருப்பவள்

ஜ்வாலாமாலினி என்பவள் தேவியின் திதி நித்யாக்களில் ஓருவள், அவள் தேவியிற்கு அக்னியாலான பாதுகாப்பு அரண் அமைப்பவள். லலிதை அந்த அக்னி கோட்டைக்கு நடுவில் வசிக்கின்றாள். திதி நித்யா தேவி என்பவர்கள் சந்திர மாதத்தின் ஒவ்வொரு திதிக்கும் உரியவர்கள். பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையில் பதினைந்து நாட்கள் உள்ளன, பதினாறாவது நாள் பௌர்ணமி அல்லது அமாவாசையாக வரும். இந்த ஒவ்வொரு நாளும் திதி எனப்படும். இந்த ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு தேவியர் இருக்கின்றனர். ஜ்வாலாமாலினி பதினான் காவது நாளாகிய சதுர்தசிக்குரிய திதி நித்யா ஆவாள். லலிதாம்பிகை மஹா நித்யா என அழைக்கப்படுகிறாள். மஹா நித்யா பௌர்ணமி மற்றும் அமாவாசையினை குறிப்பவள். இந்த பதினைந்து தேவியரும் ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பதாவது ஆவரணமாகிய முக்கோணத்தில் வணங்கப்படுபவர்கள். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து தேவியர் வீதம் பதினைந்து நித்யாக்களும் நடுவில் பிந்து ஸ்தானத்தில் மஹா நித்யாதேவியும் ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கின்றனர்.
பண்டாஸுரனுடனான போரின் போது லலிதை ஜ்வாலாமாலினியிடம் தனது படைக்களுக்கு பாதுகாப்பு அரணாக நெருப்பாலான கோட்டையினை உருவாக்கும்படி உத்தரவிடுகிறாள். ஜ்வாலா மாலினி என்பது ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஐந்து சக்தி சக்கரங்களையும் குறிக்கும். “அக்ஷிப்த” என்றால் கலந்த என்று பொருள், வாஹினி (நெருப்பு என்றும் பொருள் படும்) ப்ராஹார என்றால் ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் இருக்கும் நான் கு மேல் நோக்கிய சிவ சக்கரங்களைக்குறிக்கும். லலிதை ஸ்ரீ சக்கரத்தில் ஐந்து சக்தி சக்கரங்களுக்கும் நான் கு சிவச்சக்கரங்களுக்கும் நடுவில் பிந்து ஸ்தானத்தின் உறைகிறாள்.

ஞானி என்பவன் அறிவின் மூலம் பிரம்மத்தை அறிந்து உணர்ந்தவன். அதனாலேயே க்ருஷ்ணன் கீதையில் கூறுகிறான் “நான் ஞானியை விரும்புகிறேன்” என்று. அத்தகைய ஞானிகள் கூட தாம் பிரம்மத்துடன் இரண்டற கலக்கும் முன்பு பிறப்பு இறப்பாகிய சக்கரத்தினூடே செல்கின்றனர். ஆனால் அத்தகைய ஒவ்வொரு பிறப்பிலும் அவர்கள் பிரம்மத்தினை அறிவதற்கான முயற்சிகளை தொடர்கின்றனர். ஞானி என்பன் அரிவாகிய தீயினை உடையவன். அந்த தீ அறியாமையினை எரிக்கின்றது. ஜ்வாலா மாலா என்றால் தீயால் ஆன மாலை எனவும் பொருள்படும். ஞானியானவன் பிரம்மத்தினை அறிய அறிவாகிய தீயினை மாலையாக அணிந்திருக்கிறான். இந்த அறிவுத்தீ அறியாமையினை அழிக்கிறது. ஞானி பிரம்மத்தினை உணரும் போது இந்தபிரபஞ்சத்தினை படைப்பவனை அறிகிறான். அந்த பிரம்மமே படைப்பவனாக இருக்கிறது. வாஹினிப்ப்ரகாரா என்றால் நெருப்பால் சூழப்பட்டது என்று பொருள். இங்கு இரண்டு பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்று ஞானி மற்றது நெருப்பு. சாதாரண நெருப்பில் இருந்து வரும் பொறி ஒளியையும் வெப்பத்தினையும் உருவாக்கு பின்னர் சாம்பல் ஆகிறது. அறிவாகிய தீ உருவாகி, வாழ்க்கையில் தொடர்ந்து பிறப்பிற்கு சாட்சியாக அமைகிறது. அந்த நெருப்பே காத்து அழிக்கின்றது. நெருப்புச் சுடரே அதிலிருந்து உருவாகும் பொறிகளுக்கு சாட்சியாக இருக்கிறது. இந்த நெருப்பு பிரம்மத்தினை குறிப்பதாகவும் அதுவே அனைத்திற்கும் செயலாகவும், எதனுடனும் ஒட்டாமலும், எல்லாமாகவும், சாட்சியாகவும் இருக்கிறது. இந்த விடயம் விரிவாக ஸ்பந்த காரிகா (சிவ சூத்திரத்திரத்தின் உரையாக கொள்ளப்படுவது)  எனப்படும் நூலில் விளக்க்பட்டுள்ளது. இது இரண்டு படிமுறைகளில் விளக்குகிறது. முதலாவது ஒரே பொருளே பார்ப்பவனாகவும் பார்க்கப்படுவதாகவும் இருக்கிறது. இந்த இரண்டிலும் பார்க்கப்படுவது (தீப்பொறி உவமானமாக கூறப்படுகிறது) அழிவுறுவது, பார்ப்பவன் (தீச்சுடர்) அழிவுறுவதில்ல்லை. சிவசூத்திரம் மேலும் அத்தகைய ஞானிகளின் படி நிலைகள் பற்றி விபரிக்கின்றது. இத்தகைய ஞானிகள் சிவனிற்கு ஒப்பானவர்கள். அழியக்கூடிய உடலில் இருந்துகொண்டு அழியாத உணர்வினை சிவத்துடன் கலந்தவர்கள். அவர்களுடைய அழியக்கூடிய உடல் மட்டுமே சிவனை விட வேறான ஒன்று. அத்தகைய தூய உணர்வுடைய ஞானிகள் தமது நிலைப்பிற்காக எதிலும் தங்கியிருப்பதில்லை. அதாவது அந்த ஞானி சிவத்துடன் தனது உணர்வினை இணைத்திருக்கும் வரை தனது உடல் நிலைத்திருப்பதற்காக எதனையும் செய்வதில்லை. இந்த உணர்வில் நிலைத்திருப்பதே பெரும் உணவாக இருக்கும்.

இந்த நாமத்தின் ஆழமான அர்த்தம் லலிதை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செய்கைகளையும் செய்கிறாள் என்பதனை விளக்குகிறது. அவளே முத்தொழில்களுக்கும் காரணமாக இருப்பினும் அவற்றில் தனிப்பட ஈடுபடாமல் சாட்சிபாவமாக அனைத்திற்கும் காரணமாக இருக்கிறாள், இதுவே பிரம்மத்தினுடைய தன்மைகள், தேவி பிரம்மத்தின் வடிவாக இருக்கிறாள். மிகமுக்கியமாக வெளிக்காரணங்களைப்பற்றி கவலைப்படுவதோ அவற்றில் தங்கியிருப்பதே கிடையாது. வெளியுலகில் தொடர்புற்றிருந்தாலும் அவனது உணர்வு பிரம்மத்திலேயே இலயித்திருக்கும்.

{ஞானி பற்றிய மேலதிக குறிப்புகள்: ஞானி என்பவர் தனது இறைசாதனைக்காக ஞானப்பாதையினை தேர்ந்தெடுத்தவராவர். ஞானம் என்பது அறிவினைக் குறிக்கும், அதாவது தூய தன்னுணர்வினை குறிக்கும். நானே பிரம்மன் (அஹம் பிரம்மாஸ்மி) என்று உணரும் ஞானத்திற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு. ஒன்று “ நானே அவன்” மற்றது “நான் அவனுடையவன்” என்று உணர்தல். இரண்டும் பிரம்மத்தினை அறிவதற்கு இட்டுச்செல்லும். ஆனால் வெவ்வேறு நிலைகளில்!, “நானே அவன்” என்று அறியும் வழியில் தன்னுடைய ஆன்மாவினை பிரம்மத்துடன் அடையாளம் கண்டு நிர்குணப்பிரம்மத்தினை (குணங்கள் அற்ற) அறிந்து உணர்வதன் மூலம் சாத்தியமாகிறது. இந்தப்பாதை மிகவும் சவால்கள் நிறைந்ததுடன் கடைப்பிடிப்பதற்கு கடினமானது. இந்தப்பாதையில் பயணிப்பதற்கு மிகுந்த உறுதியும் அர்ப்பணிப்பும் தேவை. எமது புத்தியுடன் சேர்ந்த அர்ப்பணிப்பே அத்தியாவசியமான ஒரு தன்மையாகும். இரண்டாவது பாதையான “நான் அவனுடையவன்” ஒப்பீட்டளவில் இலகுவான பாதையாகும். ஆனால் தாழ்ந்த பாதையல்ல. இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய இஷ்ட தெய்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான். இங்கு பிரம்மன் இஷ்ட தெய்வத்தின் மூலம் அடையப்படுகிறது. சகுணப்பிரம்மத்தினை உணர்ந்தறிவதால் பிரம்மம் அறியப்படுகிறது. இந்தப் பாதை சற்று சுற்றுப்பாதையாக இருந்தாலும் இறுதி இலக்கு ஒன்றுதான். இது பக்தி மார்க்கம் எனவும் கூறப்படுகிறது,

இவற்றைப்பற்றி இரண்டாவது பாதை சற்று சுற்றுப்பாதையே என்றாலும் சிறந்தது என்ற மிக உறுதியான கருத்து உள்ளது. இந்தப்பாதையின் ஊடாக செல்லும் போது அவன் எல்லாவிதமான அனுபவங்களினூடாகவும் செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிட்டுகிறது, ஆரம்பத்தில் பூஜை, புனஸ்காரங்களுடன் தொடங்கி ஜெபம், தியானம் ஊடாக இறுதியாக பிரம்மத்தினை அடையும் பாதையினை அறியும் வழிமுறையினை தேர்ந்தெடுக்க தொடங்குகின்றான், இந்த பரிணாம உயர்வு பல பிறவிகளினூடாக உண்டாகின்றது. நேரடி வழிமுறை மிக கடினமானது. அதனூடாக பயணிப்பதற்கு அளவு கடந்த ஞானமும், இச்சா சக்தியும், மனக்கட்டுப்பாடும் அவசியமாகும், உண்மையான ஞானி எனப்படும் போது தனது மனதை ஞானத்துடனும் ஆன்மாவின் ஆனந்தத்துடனும் கலந்து தனது மனதை பலபடிமுறைகளினூடாக உயர்த்தியவராக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. இறையை அறியும் பண்பு அத்தகைய மனதிற்கே வாய்க்கும்}

பண்டஸைன்ய-வதோத்யுக்த-சக்திவிக்ரம-ஹர்ஷிதாயை (72)
பண்டாஸுரனது சேனைகளை அழிப்பதில் பராக்கிரமம் காட்டிய சக்திகளிடன் சந்தோஷித்தவள்
பண்டாசூரனது சேனையினை தேவியின் படை அழித்தவுடன் தேவி பெரும் திருப்தி அடைந்தாள்.

பண்டா என்றால் இருமை என்ற அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆன்மா, சைன்ய என்றாலும் இருமையினையே ( ஆன்மாவும் பிரம்மமும் வேறு  என்ற மயக்கம்) குறிக்கும்.  வத என்றால் அழித்தல் என்று பொருள். ல‌லிதை ஆன்மாவும் பிர‌ம்ம‌மும் வேறு என்ற‌ மய‌க்க‌த்தினை அழித்த‌லில் திருப்திய‌டைகிறாள் என்ப‌த‌னையே இந்த‌ நாமா வெளிப்ப‌டுத்துகிற‌து. இந்த‌ இருமை அழிந்தான் ஆன்மாவினை சூழ‌ இருக்கும் மாயைத்திரை அக‌ல்கிற‌து. இந்த‌ இருமையினை அழிப்ப‌த‌ற்கு ம‌ன‌தின் துணைகொண்டு அக‌வ‌ய‌ ஆர‌ய்ச்சி மூல‌ம் மட்டுமே சாதிக்க‌ முடியும்.


நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகாயை (73)
நித்யா தேவதைகளின் பராக்கிரமத்தை பார்ப்பதில் உற்சாகம் உள்ளவள்

நித்யா என்றால் திதி நித்யா தேவி (பார்க்க‌ நாம‌ம் 71)ல‌லிதை போரில் ப‌தினைந்து திதி நித்யா தேவிக‌ள‌தும் ப‌ராக்கிர‌ம‌ம் க‌ண்டு மிக்க‌ ம‌கிழ்ச்சியுற்றாள்.
ஆன்மாவேறு பிர‌ம்ம‌ம் வேறு என்ற‌ இருமை அக‌ன்று மாயை திரை அக‌லும் போது ஒருவ‌னில் பிர‌ம்ம‌த்தினைப்ப‌ற்றிய‌ அறிவு மெது மெதுவாக‌ வ‌ள‌ர‌த்தொட‌ங்கும். அவ்வாறு அடைய‌ப்ப‌ட்ட‌ அறிவினால் சாத‌க‌ன் மேலும் த‌ன‌து சாத‌னையில் முன்னேற‌த்தொட‌ங்குகிறான், இப்ப‌டி அடைய‌ப்பட்ட‌ முன்னேற்ற‌ம் அவ‌னை விட்டு அக‌ல்வ‌தில்லை. (வெகு அரிதாக‌வே கீழ் ப‌ரிணாம‌த்தினுள் செல்லும் நில‌மை சாத‌க‌னுக்கு அமையும்). இதுவே இந்த‌ நாம‌த்தின் இர‌க‌சிய‌ர்த்த‌ம் ஆகும்.


பண்ட புத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதாயை (74)
பாலாதேவி பண்ட புத்திரரகளை அழிப்பதில் காட்டிய பராக்கிரமத்தைக் கண்டு மகிழ்ந்தவள்
பாலா ல‌லிதையின் ஒன்ப‌து வ‌ய‌தான‌ ம‌க‌ள். ப‌ண்டாசூர‌னுக்கு முப்ப‌து புத்திர‌ர்க‌ள் இருந்தார்க‌ள். ல‌லிதை த‌ன‌து சிறிய‌ மக‌ளை போர்க‌ள‌த்திற்கு செல்ல‌வேண்டாம் என்று த‌டுக்கிறாள். பாலா தனது தாயின் பேச்சினை ம‌றுத்து போர்க்க‌ள‌ம் புகுந்து ப‌ண்டாசூர‌ன‌து முப்ப‌து ம‌க‌ன்க‌ளையும் எதிர்த்து அழிக்கிறாள்.
ஸ்ரீ வித்தை பார‌ம்ப‌ரிய‌த்தில் எப்போதும் முத‌லாவ‌து தீட்சை பாலா ம‌ந்திர‌மாகும். ஒருவ‌ன் பாலா ம‌ந்திர‌த்தில் சித்திய‌டைந்தால் அவ‌ன் அரிய‌ சித்திக‌ளை அடைவ‌துட‌ன் மூலிகை சித்தியும் அடைவான். சில‌ அரிய‌ மூலிகைக‌ள் த‌குந்த‌ முறையில் உப‌யோகிக்க‌ப்ப‌டும் போது அரிய‌ ப‌ல‌ சித்திக‌ளை அளிக்க‌ வ‌ல்ல‌து. இந்த‌ ஞான‌ம் பாலா ம‌ந்திர‌ சித்திய‌டைந்த‌வ‌னுக்கே வாய்க்கும்.
 ல‌லிதை, ம‌ந்திரிணி, வாராகி ஆகிய‌ மூவ‌ருக்கும் அங்க, உபாங்க பிரத்யங்க‌ தேவ‌தைக‌ள் உள்ளார்க‌ள். பாலா லலிதையின் அங்க‌தேவ‌தை என‌ப்ப‌டுவாள். ல‌லிதையின் உபாங்க‌ தேவ‌தை அன்ன‌ப்பூர்ணா, பிர‌த்ய‌ங்க‌ தேவ‌தை அஸ்வாரூடா ஆவார்க‌ள். அங்க‌, உபாங்க‌, பிர‌த்ய‌ங்க‌ ஆகிய‌ மூன்று வ‌டிவ‌ங்க‌ளும் தேவியின் ஸ்தூல‌, சூஷ்ம‌, அதிசூஷ்ம‌ வ‌டிவ‌ங்க‌ளை குறிக்கும்.
ப‌ண்டாசூர‌னின் புத்திர‌ர்க‌ள் முப்ப‌து த‌த்துவ‌ங்க‌ளைக்குறிக்கும். இந்த‌ முப்ப‌து த‌த்துவ‌ங்க‌ளையும் அறிந்து அவ‌ற்றைக்க‌ட‌க்காம‌ல் த‌ன்னை அறித‌ல் சாத்திய‌ப்ப‌டாது. இந்த தத்துவங்களின் தீய பிரபாவங்களுக்கு எதிரான சிறிய‌ முய‌ற்சி (பாலாவின் வ‌டிவ‌ம்) அவ‌ற்றை அழிக்கும்.

மந்த்ரிணியம்பா-விரசித-விஷங்கவத-தோஷிதாயை (75)
மந்திரிணி தேவி முடித்த விஷ்ங்கவதத்தால் ஸந்தோஷமடைந்தவள்
விஸ‌ங்க‌வாதா என்ற‌ அசுர‌ன் ம‌ந்திரிணி தேவியால் அழிக்க‌ப்ப‌ட்ட‌தையொட்டி ல‌லிதை மிக்க‌ ம‌கிழ்ச்சிய‌டைந்தால். விச‌ங்க‌னும் விசுக்ர‌னும் ப‌ண்டாசூர‌ன‌து இர‌ண்டு ச‌கோத‌ர‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் ப‌ண்டாசூர‌ன‌து இர‌ண்டு தோள்ப்ப‌ட்டைக‌ளிலிருந்து அவ‌னால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்.

இந்த‌ நாம‌த்தில் "வி" என்ற‌ பீஜ‌ம் உள்ள‌து. இந்த‌ பீஜ‌த்தின் மூல‌ எழுத்து "வ‌"() ஆகும். வ‌ இர‌ண்டு விட‌ய‌ங்க‌ளைக்குறிக்கும். முத‌லாவ‌து இவை அதீத‌ ஆற்ற‌ல்க‌ளை அடைய‌ உத‌வும், இர‌ண்டாவ‌து தீய‌ பிர‌பாவ‌ங்க‌ளை அழிக்கும். ம‌ந்திர‌ங்க‌ளின் ஆற்ற‌லை கட்டுப்ப‌டுத்துப‌வ‌ள் ம‌ந்திரிணி தேவி ஆவாள். விஸ‌ங்க‌ என்ப‌து ஆசையினை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாம‌ல் புல‌ன்க‌ள் செய்யும் தீய செய்கைக‌ளைக்குறிக்கும். ம‌ந்திரிணி தேவி ல‌லிதையின் ப‌க்த‌ர்க‌ளில் எழும் அத்த‌கைய‌ ஆசைக‌ளை அழிப்ப‌வ‌ள்.



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" } -  சுமனன் 
******************************************************************************************************************************************

Sunday, July 07, 2013

தாந்திரீக மைதுனம் பற்றிய விளக்கம் - காயத்ரி சாதனை சித்தி அடைந்ததற்கான அடையாளங்கள் - 02


ஒரு சாதகன் தனது சாதனையில் அமரும்போது உடலுறவு கொள்ளும் நிலையே ஏற்படுகிறது. இதனையே தாந்திரீகத்தில் “மைதுனம் - உடலுறவு” எனக்குறிப்பிடுவார்கள், உடலுறவினை எப்படி பகிங்ரங்கப்படுதுவதில்லையோ அதுபோல் சாதனையும் இரகசியமாக செய்யப்படவேண்டியது. ஆன்மா பெண் கடவுள் ஆண், கடவுளாகிய ஆணிடமிருந்து தெய்வசக்தியாகிய விந்தினை பெற்றுக்கொள்ளும் செய்முறையே சாதனை, இதனை இன்னும் ஒரு படி மேலே க்ருஷ்ண பக்தர்கள் “பக்தி” மார்க்கமாக கண்டறிந்துள்ளார்கள். ஆன்மாவும் கடவுளும் இரண்டறக்கலக்கும் போது உண்டாகும் அதீத இன்ப உணர்வே சமாதி என யோக மொழியில் குறிப்பிடப்படுகிறது. தாந்திரீகம் மனித அடிப்படையிலான உடலுறவிலிருந்து இந்த நிலையினை அடைவதற்குரிய வழியினை போதிக்கிறது. காயத்ரி உப நிஷத்தும் ஸாவித்ரி உப நிஷத்தும் இப்படியான பல தெய்வீக உறவுகொள்ளலை பற்றி விபரிக்கின்றன, ஸவிதாவும் ஸாவித்ரியும் இணையான ஜோடிகள். ஸாவித்ரி (காயத்ரி) சாதனையினை தொடங்கும் சாதகனது ஆன்மாவும் பஞ்சகோசங்களும் யோனியாக மாறுகின்றது. இந்த யோனியினுள் பிரபஞ்ச பேரின்ப சக்தி விந்தாக பாய்கின்றது. இந்த சக்திப்பாய்ச்சலே “சக்திப்பரிமாற்றம் – ஸக்திபட்” என அழைக்கப்படுகிறது. இந்த சக்திப்பரிமாற்றம் கணவன் மனைவியாக சாதனைபுரிவபர்கள் உடலுறவின் மூலமும் பரிமாறிக்கொள்ளலாம் (இது வாமாச்சார கௌலாச்சார தாந்திரீக மார்க்கத்தில் இருப்பவர்கள் மட்டும்). அல்லாமல் வெறுமனே பிராண மன கோசங்களினூடாகவும் ஒருவரிலிருந்து ஒருவருக்கு பரிமாறிக்கொள்ளலாம். பிரபஞ்ச மூல சக்தியினை வசப்படுத்திய உயர் நிலை சாதகர் இந்த சக்திபரிமாற்றத்தினை எந்த நிலையிலும் செய்யலாம். இதுவே உண்மையான தீட்சை எனப்படும். உலகில் உள்ள ஒவ்வொரு சக்தியும் இத்தகைய ஆண் பெண் என்ற இரு சக்திகளின் இணைவிலேயே தோற்றம் பெறுகின்றன. மின்சாரம் என்பது நேர் அயனும் மறை அயனும் இணைவதால் உருவாகும் ஒரு சக்தி, இத்தகைய சக்தி கலப்புகளையே தாந்திரீகம் மைதுனம் என அழைக்கிறது. இந்த சக்தி கலப்பின் குறியீடே தாந்திரீகத்தில் மைதுனம் எனப்படுகிறது.


சாதனை என்பதன் பொருள் மேலான சக்தியுடன் ஒன்றற கலந்து தோடர்ச்சியான பயிற்சியின் மூலம் புதிய சக்தி ஒன்றினை உருவாக்குவதே, அதனையே சித்திகள் எனப்படுகிறது. இந்த சித்திகளை அடைவதற்கு சில முன்தகுதிகள் உள்ளன. ஒரு தூர பயணிக்கும் மனிதன் தனது பயணத்திற்கு தேவையான உணவு, உடை, பணம் இல்லமல் தனது பயணத்தை பூர்த்தி செய்ய முடியாததுபோல் சாதனையாகிய ஆன்ம பயணத்தின் மூலம் தெய்வ சக்தியினை அடைய முயற்சிப்பவர்கள் சரியான ஒழுக்கங்களையும், மன விருத்திகளையும் கொண்டிருத்தல் அவசியம். ஒழுக்கமற்ற வாழ்க்கையினையும், பாவங்களையும் செய்யும் ஒருவர் ஒருக்காலும் சித்திகளை அடைய முடியாது. ஒரு சாதகர் தனது மனம், சொல், உடலளவில் தன்னை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னரே சித்திகளைப்பற்றி ஒருவர் நினைக்கத்தொடங்க வேண்டும். 

காயத்ரி சாதனைமூலம் ஒருவன் ஸவிதாவாகிய இறைசக்தியிடமிருந்து ஸாவித்ரி (காயத்ரி) எனும் யோனியில் அதனைப்பெற்று தெய்வசக்தியினை பதித்து ஆன்ம வளர்ச்சியான கருவினை உருவாக்கி கர்ப்பமுறுகின்றான். இந்த ஆன்ம கர்ப்பமுறுதலுக்கு ஒருவன் தனது சரியான ஆன்ம மனப்பண்புகளை  உருவாக்கிக்கொள்ளவேண்டும். இந்த நிலை ஒருவித இடை நிலையாகும், அதாவது பெண் ஒருத்தி கர்பமுற்றிருக்கும் போது இருக்கும் கவனமும், பராமரிப்பும் அவசியமனது போன்று ஆன்ம முன்னேற்றத்திற்கு அவசியமாக கவனிக்கப்படவேண்டிய நிலை. இந்த நிலையில் பொதுவாக சாதகர்களுக்கு உடலில் வலிகள், உலக வாழ்க்கையில் பற்று அற்ற நிலை, எதனையும் மனம் ஒன்றி செய்யமுடியாத நிலை, சோம்பல் போன்றவை அதிகமாக காணப்படும். சாதனையினை தொடர்ந்து செய்துவரும்போது தனது முதிர்ச்சியின் மூலம் அடுத்த நிலையினை அடைவான். அதாவது சுகப்பிரசவம் போன்ற நிலை. இந்த இடை நிலையில் இருக்கும் போது சாதகர்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும். உணவு, தினசரி ஒழுக்கங்கள், மன அமைதி, ஓய்வு என்பவை மிகவும் அவசியாமான ஒன்றாகும்.


மனிதன் தந்து எந்த வேலையினை தொடங்கும் போது இடையூறு வராமல் இருப்பதில்லை. அந்த இடையூறுகளை சகித்து தனது ஆற்றல் மூலம் எதிர்கொண்டு அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு எதிர் நோக்குபவன் மட்டுமே வெற்றியடைகிறான். அது போல சாதனை புரிய ஆரம்பிக்கும் சாதகன் ஆரம்பத்தில் மனம் தீய உணவு ஒழுக்கங்கள், சோம்பல், பொறுமையின்மை, வெறுப்பு, கோபத்தில் துன்புறுத்தும் நிலை, நியாயம் அற்ற தன்மை, தீய சகவாசங்கள் என்பவற்றை நோக்கி செல்ல முயற்சிக்கும். மிகுந்த கவனத்துடன் சாதனையினை இந்த விடயங்களில் இருந்து விலத்தி சாதனை செய்பவரே சித்தியினை அடைகிறான். இவ்வாறு ஒழுக்கங்களை பயிற்சிக்காமல் திருட்டு, ஊழல் மற்றவரை துன்புறுத்த வேண்டும் என்ற மன நிலை போன்றவற்றை கொண்டிருப்பவர்கள் எக்காலத்திலும் சித்தியினை அடைய முடியாது. சாதனையில் சித்தியினை விரும்புபவன் தனது மன, உடல் ஒழுக்கங்களை மிகுந்த கவனத்துடன் கடைப்பிடித்து பலன் களைப்பெறவேண்டும். 

இது கர்ப்பமுற்ற பெண் மிகுந்த கவனத்துடன் கர்ப்ப காலத்தில் தனது உடல, மனங்களை கவனித்து பிள்ளையினை ஈணுவது போன்றது. ஒரு சாதகனுக்கு பிள்ளை அவனது சாதனையில் ஏற்படும் சித்தி ஆகும். இந்த சித்திகளில் மிக உயர்ந்த நிலை பிரம்மத்துடன் இரண்டறக்கலந்த நிலையான தூரியாதீதம் எனும் ஜீவன் முக்த நிலையேயாகும். இது தனியுணர்வு பிரபஞ்ச உணர்வுடன் கலந்த நிலையாகும். இதுவே காயத்ரி சாதனையினால் பெறப்படும் அதீத சித்தியாகும். இப்படி சித்தியினை சாதனியின் மூலம் அடைந்தாலும் அடைந்தவுடன் மிகக்கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தை வளரும் வரை நோயிற்கும், அதனை தூக்கும் போது மிகக்கவனத்துடன் கையாள்வது போன்று கவனமாக கையாளவேண்டும். ஒரு தாய் தனது பிறந்த குழந்தையினை மிகுந்த கவனத்துடன் போசிப்பது போன்று பெற்ற சித்தியினை மிககவனமாக தவறான வழியில் பயன்படுத்தாமல் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி நல்வழியில் வளர்க்கப்பட்ட சித்தியே ஞானத்தினை தரும். அப்படியல்லது ஒழுக்கமில்லாமல் வளர்க்கப்பட்ட குழந்தை பெற்றோரை கவனிக்காததுபோல் தவறாக உபயோகிக்கப்பட்ட சித்திகள் சாதகனிற்கு துன்பத்தினை தரும்.

சாதகரது சாதனை முழுமையாக சித்தியடையும் வரை சாதகரில் ஒருவித மந்த நிலையும், சோம்பலும் காணப்படும். சாதனை வளர்ச்சியடையும் போது அது சித்திக்கான அறிகுறிகளை ஏற்படுத்தத்தொடங்க்கும். சாதகன் அறிவு மற்றவர்களது அறிவினை விட மேம்பட்ட ஒன்றாக பிரகாசிக்கத்தொடங்கும், உடல், மனம், பிராணன், அறிவுகளில் ஒளிவீசத்தொடங்கும், பஞ்சகோசங்களும் மென்மையாகத்தொடங்கும். இதனை கீழ்வரும் அறிகுறிகளைக்கொண்டு சாதனை சித்தியாகத்தொடங்குகிறது என அறிந்து கொள்ளலாம்;
  1. உடல் மெதுவாக இருப்பது போன்று இருக்கு, பலமணி நேர தியானத்தின் போதும் உடலில் வலி தோன்றாமல் தொடர்ச்சியாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். மனம் மிகுந்த உற்சாகத்துடன் எந்த விடயத்தினையும் அணுகத்தொடங்கும். கவலை, பதட்டம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் மறையத்தொடங்கும்.
  2. உடலில் புதுவித மணம் வெளிப்படும்
  3.  தோல் மென்மையாகவும் பிரகாசமாகவும் மாறும்.
  4. தாமசிக உணவுகளில் (மாமிசம்), பழக்கவழக்கங்களில் மனம் தானாகவே விருப்பமற்று போகும். 
  5. சுய நலம் அற்றுபோய் மனம் அனைத்து உயிர்களைப்பற்றியும் கரிசனை கொள்ளத்தொடங்கும்.
  6. கண்களில் ஒரு வித ஓளி வீசும்.
  7. சாதகன் தான் சந்திக்கும் நபர்களதோ அல்லது சிந்திக்கும் வேலையினைப்பற்றியோ சரியான முடிவிற்கு கண நேரத்திற்குள் வரும் ஆற்றல் உண்டாகும்.
  8. மற்றவர்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல்.
  9. எதிர்காலத்தில் நடக்கப்போவதை அறியும் ஆற்றல்
  10. தனது தெய்வீக ஆற்றலகளைக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லதோ கெட்டதோ செய்யும் ஆற்றல்.

இத்தகைய சித்திகள்  வர ஆரம்பித்தவுடன் சாதகன் கவனமாக அதனை நல்லறிவுடன் சரியான வழியில் மாத்திரம் உபயோகித்து வரவேண்டும், அத்தகைய சாதகன் தனது குழந்தையினை நல்வழியில் வளர்த்து முதுமைக்காலத்தில் சந்தோஷமாக இருக்கும் தாயினைப்போன்ற சந்தோஷத்தினைப்பெறுவான், அல்லது அற்பவிடயங்களுக்காக இவற்றை பாயன்படுத்தும் சாதகன் ஒரு தாய் தனது குழந்தையினை இழந்தால் ஏற்படும் துன்பத்திற்கு ஆளாவான். 

Saturday, July 06, 2013

காயத்ரி சாதனை சித்தி அடைந்ததற்கான அடையாளங்கள் - 01




இந்த பதிவில் காயத்ரி சாதனையினை மற்றும் வேறு யோக, மந்திர சாதனைகளினை செய்யும் சாதகர்களுக்கு ஏற்படும் குணங்குறிகள் பற்றி பார்ப்போம். காயத்ரி சாதனை அடிப்படையிலேயே இங்கு விளக்கப்பட்டாலும் இவை பொதுவாக எல்லாவித சாதனைகளிற்கும் பொருந்தும்.

காயத்ரி சாதனைபுரியும் சாதகனில் அதீத தெய்வீக உணர்வு விழிப்படையத்தொடங்க்குகிறது. அதனால் அவனது பௌதீக உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் உடனடியாக உருவாகாவிட்டாலும் அகமாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகும். அந்த மாற்றங்கள் பிராணமய கோசத்தினை, விஞ்ஞானமய கோசத்தினை, மனோமய கோசங்களில் ஆன்ம சக்தி செயற்படத்தொடங்குவதால் ஆனந்தமய கோசம் விழிப்படையத்தொடங்கும். உடலின் அடிப்படைக்கூறுகள் முழுமையாக மாறாவிட்டாலும் மற்றைய நான்கு கோசங்களிலும் ஏற்படும் தெய்வீக மாற்றங்கள் உடலில் கட்டாயம் பிரதிபலிக்கத்தொடங்கும்,


ஓரு பாம்பு சட்டை கழற்றும் போது அதன் புதிய உடலில் ஏற்படும் மாற்றங்களைக்கூறலாம். இந்த நிலையினை அடைவதற்கு முன்னர் அதன் உடல் கனதியாகி அசையமுடியாமல் சோம்பிப்போய் விடும். அந்த நிலையில் பாம்பு ஓரிடத்தில் எந்த செயலும் செய்யாமல் அசையாமல் கிடக்கப் பார்க்கும். அந்த தோல் வளர்ந்து முழுமையடைந்தவுடன் அது தனது முன்னைய சக்தியினை விட பலமடங்கு வலிமையுடன் மென்மையான ஒளிபொருந்திய தோலுடன் வலிமயாகிவிடும். இதைப்போன்ற ஒரு நிலையினைத்தான் ஒரு சாதகன் தனது சாதனைப்பதையில் சந்திக்க வேண்டிவரும் . அவனது மாற்றங்கள் பிராணமய, விஞ்ஞானமயம் மனோமய கோசங்களில் படிப்படியாக ஏற்படத்தொடங்கும். அவன் சாதனையில் முன்னேறத்தொடங்கியவுடன் கவலைம், மன அழுத்தம் போன்ற நிலை, எதிலும் ஆர்வம் அற்ற நிலை என்பவை தோன்றத்தொடங்கும். பெரும்பாலான சாதகர்கள் இந்த நிலையிலேயே தமது சாதனைகளை விட்டுவிடுவார்கள். அவ்வாறில்லாமல் குருவருள் கொண்டு இவற்றை பொறுமையாக பொறுத்துக்கொண்டு தமது சாதனையினை தொடர்பவர்களே சித்தியடைகிறார்கள். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடல் பாரமாகவும், இயலாமலும் உணர்வாள், ஆனால் குழந்தை சிறப்பாக பிறப்பதற்கு அந்த நிலை அவசியம், பிள்ளைப்பேற்றுக்கு பின்னர் உடல் மெல்லியதாகவும் பாரமற்றும் காணப்படும். 

சாதனை என்பது ஒருவித உடலுறவு போன்ற ஒரு செய்கையே இது எப்படி என்று அடுத்தபதிவில் பார்ப்போம். 

Symptoms of Success in Sadhana – Special reference to Gayathiri Sadhana

SADHANA AND MAITHUNA, PROCESS, ATTAINNG AND MANAGING SIDDHIS 

By Gayathri Siddhar Dr. R. K. Murugesu Swamigal



Subtle divine consciousness emerges in a Sadaka by Gayathri Sadhana. There are no specific changes in his physical form or body but there is considerable inner change in him/her. Changes effect the PRANAMAYA KOSHAM, VIGNANAMAYA KOSHAM AND MANOMAYA KOSHAM due to increase in spiritual elements are bound to have their impact on ANNANDAMAYAKOSHAM. It is true the structure of the body of Sadaka does not change easily, but it is equally true that inner changes are bound to be reflected in some form in the body. 

When a new skin is formed in the tissues of a snake its symptoms are reflected in its body. It become heavy cannot run fast and being deprived of swiftness and enthusiasm. The snake prefers to lie down in a place. When the new skin gets matured, the snake changes its old skin which known as casting of the slough. After this casting off there is a fresh enthusiasm and the activities of the snake are changed. Smoothness, luster, and tenderness are easily visible in this new skin. Similarly Sadaka also undergo such a change in PRANAMAYA KOSHAM, VIGNANAMAYA KOSHAM AND MANOMAYA KOSHAM. When he progress on Sadana there are some symptoms of sadness, heaviness, slackness and lack of enthusiasm. But after attaining the maturity altogether different symptoms start appearing. So long as a women is pregnant she feels heaviness an sluggishness, but after delivering the child mother feel fresh, light and enthusiastic with maturity. 

When the Sadaka sits for Sadana there is spiritual impregnation in him. In Tantra Sadhana it has been called “MAITHUNA” – Cohabitation. As cohabitation is kept secret Sadhana also kept in secret manner. When soul embraces God it get and indescribable pleasure which is known as complete identification of Bakthi. When both of them meet profoundly, unite and assimilate the resultant discharge is known as SAMADHI. Spiritual cohabitation thus culminates in the pleasure of SAMADHI, In Gayathri Upanishad and Savithri Upanishad several cohabitations as one between Savita and Savithri have been described. Savita and Savithri constitute one pair. By Savithri (Gayathri) worship the SADAKA’S soul becomes like Vagina in which Gods’s brilliance or potency (semen) is discharged. This process also known as SAKTHIPAT. According to this science of SAKTHPAT there can be a creation without physical cohabitation. Kundi Devi delivered Karna and Mother Mary gave birth to Christ was happened in this way. Divine powers are born in this manner by subtle cohabitation. In the universe electrical current is produces by the union of negative and positive ions. Cohabition has been praised in TANTRA SASHTRA at every step. This is nothing but cohabitation of Sadhana. 

The meaning of SADHANA is to unite within us the power of devotion and practice and create a new power which is known as SIDDHI – Divine boon or Miracle. There are certain prerequisite for attaining this. A man may take up any route his destination but he has to carry with him food, clothes and money for his journey. So also all virtues, righteous thoughts and actions are required for performing SADHANA of any divine power. It is rather impossible for a person to accomplish his Sadhana if his life throughout has been sinful, vicious and non discipline. Therefore persons who are keen to attain something by Sadhana should in first instance try to pure their mind, speech and body. Then alone can they can think of any kind of Siddhi. 

Cohabitation of the Soul and God of Savita and Savithri by profound embracement or assimilation results in spiritual conceiving. The Sadaka has to make room within him to give entry to this element of conception. Old element have to make room within him to give entry of new ones. There are changes in the natural activity of Sadaka during the transitional person in which his Sadhna attains maturity, just as there are symptoms of dissatisfaction, nausea, constipation, laziness, pain in body like in pregnant women. He feels himself heavy, tightened an d dejected like snake with a slough. Those who well versed in science of spiritual knowledge know it well what adversities the SADHAK is required to face in the period of SADHANA, they therefore adive to live strictly accordingly to prescribed manner and morals during this period. The Sadhaka can cover come this transitional period by remaining in restricted diet and having routine as is prescribed for a woman in menstruation period or one who is pregnant. 

Whatever important work a man may like to do him us bound to face challenges of obstacles and interruptions. Only those who can meet these challenges successfully can succeed. A Sadhaka goes astray on account of defect in his diet routine, lethargy, impatience, intemperance, hatred, malice, wantonness, evil association and vanity. Then it becomes impossible for him to attain Siddhi. Corruption, earning money by theft, depriving other of their legitimate rights, intense selfishness, and similar other vogue these days in abundance, they incapacitate a person to attain divine success. Therefore those person aspire to attain success by completion of their Sadhana should be glad to do utmost sacrifice and bear miseries, so that their Sadhana may mature and yield desired results. 

Just as an issue is born from an egg or to a woman, a Sadhak as a result of his Sadhana gets an issue which called Siddhi or Power. It is known as Samadhi, Bhramha state of TUREEYATHEETHAVASTHA (State where the individual self is united with the universal self). In the beginning the offspring is weak, delicate and tender like a newly born baby. A wise sadaka provides nourishment to it in the same manner as mother bring up, foster and nourishes her baby.

Until Sadaka’s Sadhana attain maturity there are signs of lethargy and dejection in him. When it gets matured and gives birth to the tender issues of Siddhi, the Sadhka gets adorned with brilliance, luster and lightness. The symptoms of attaining success are reflected in the following manner; 

1. The body feels light and mind becomes enthusiastic.

2. A specific kind of smell starts to coming from body. 

3. Skin become more smooth and tender

4. There is aversion for Tamasik food and routine, the Sadhaka gets inclined towards righteousness.

5. Selfishness gives way to selflessness and benevolence

6. There is luster in eyes

7. Je become to right conclusion when he thinks about any person or any work

8. He takes no time in reading the feelings and thoughts of other persons

9. He gets premonition of things which are going to happen in the future

10. He can do good or bad to others by his secret divine power

Those Sadakas who rear foster and bring up this issue of divine power, enjoy a happy like has as an old man who has obedient issues does. But person who are devoid of sense of proportion and misuse of their Siddhi soon after it is born, get deprived of it and have ultimately to repent like a mother who has lost he newly born baby. 

Thursday, July 04, 2013

சென்னை ஆத்மா ஞான சபையின் ஆன்மீக வகுப்புகள்

எமது குருவின் குருவான கண்ணைய யோகீஸ்வரரிடம் ஆத்மா, யோக, ஞான வித்தை பயின்று அவர் உபதேசித்த வழி இல்லறத்திலிருந்தே சாதனைபுரிந்து யோக நிலை பெறலாம் என்று உணர்த்தி வரும் பெருமதிப்பிற்குரிய இராஜ யோகி ராஜமோகன் ஐயா அவர்கள்  சென்னையில் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரிடம் தாம் பயின்றவற்றை ஆன்மீக படைப்புகளாக வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் சென்னையில் சித்த வித்தைகளின் சில பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசித்து உள்ளதாக அறியத் தந்துள்ளார்கள்.  இவற்றை பயில ஆர்வம் உள்ளவர்கள் கீழ்வரும் அறிவித்தலின் படி தொடர்புகொள்ளவும்.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...