ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 21: நாமங்கள் 31 - 40


கநகாங்கத-கேயூர-கமனீய-புஜன்விதா (31)  
பொன்னாலான தோள்வளைகளை அணிந்தவள்

கநகா - பொன்/தங்கம், அங்கதா - வளையல்கள், கேயூர - தோற்பட்டைகளில் அணியும் ஆபரணம். தேவி இந்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். இதன் அர்த்தம் இப்படியானதாக இருக்கலாம்; இரண்டு ஆபரணங்களும் தங்கத்தினால் ஆனவை, இரண்டும் வேறான வடிவாக இருப்பினும் ஒரே பொருளான தங்கத்தினால் ஆனது. அதுபோல் உயிரினங்களின் தோற்றம் வேறானதாக இருப்பினும் உள்ளிருக்கும் பிரம்மன் ஒன்றானது. 

ரத்ன-க்ரைவேய சிந்தாக லோல-முக்தா-பலான்விதா (32)
அசைகின்ற முத்துக்களுடன் கூடிய ரத்தினப்பதக்கம் பொருந்திய அட்டிகை அணிந்தவள்

முத்துப்பதித்த அட்டிகையும் ரத்தினபதக்கவும் கழுத்தில் கொண்டவள் தேவி, இந்த ஆபரணங்கள் தேவியில் கழுத்தில் அசைகின்றன.

இந்த அசையும் ஆபரணங்கள் மனதினை குறிக்கும். தேவியினுடைய முழு உருவத்தையும் (தலைமுதல் பாதம் வரை) தியானிக்க கூடியா ஆற்றல் அற்ற கீழ் நிலை பக்தர்கள் லோலா எனப்படுவர். யார் தலைமுதல் பாதம் வரையிலான முழு உருவையும் தியானிக்க கூடியவர்களோ அவர்கள் முக்தா-உயர்ந்த பக்தர்கள் எனப்படுவர். லோலாவும் முக்தாவும் அவரவர் தகுத்திக்கு ஏற்ப அவர்களது பிரார்த்தனைக்கு பலன்பெறுவார்கள். இதுவே லோல-முக்தா-பலான்விதா என்பதன் பொருள். தேவியை வணங்கும் போது மனதினை உறுதியாக எதுவித எண்ண சலனமும் இன்றி வைத்திருக்க வேண்டும். 

காமேச்வர-ப்ரேமரத்ன-மணிப்ரதீபண-ஸ்தன்யை (33) 
இரத்தின கலசம்போன்ற தனது ஸ்தனங்களையே கொடுத்து காமேசருடைய பிரேமையை விலைக்கு வாங்கியவள்

காமேச்வரரது அன்பினை பெறுவதற்கு தனது இரு ஸ்தனங்களையும் அவருக்கு அளித்தவள். இதன் உட்பொருள் தனது அன்புக்கு பாத்திரமான பக்தர்களுக்கு தன்மீது செலுத்தும் பக்தியின் இருமடங்காக தனது அருளினை தருபவள் என்பதாகும். 

நாப்யாலவால-ரோமாலி-லதாபலகுசத்வயா (34)
நாபி என்ற பாத்தியிலிருந்து முளைத்தெழுந்த கொடிபோன்ற மெல்லிய ரோம வரிசையின் உச்சியில் பழுத்த பழங்களை யொத்த இரு ஸ்தனங்களையுடையவள்.

அவளுடைய ஸ்தனங்கள் நாபியில் இருந்து முளைத்த கொடியில் பழுத்த பழங்கள் போன்று காட்சியளிக்கிறது. இந்த நாமத்தின் முக்கியத்துவம் நாபி - மணிப்பூரக சக்கரமும், இருதய - அநாகத சக்கரமும் ஆகும். இருதய சக்கரத்தினை தியானிக்கும் போது குண்டலினி நாபியில் இருந்து எழுந்து வந்து அநாகதத்தில் மலர்வதாக தியானிக்க வேண்டும். சௌந்தர்ய லஹரி (76) ஸ்லோகம் " காதலின் கடவுளான காமன் சிவனின் கோபத்திற்கு ஆளாகாமல் உனது நாபியில் அடைக்கலம் புகுந்து கொண்டான்" என வர்ணிக்கிறார்

லக்ஷ்ய-ரோம-லதா தாரதா-ஸமுன்னேய-மத்ய மாயை (35) 
உரோம வரிசையாகிற கொடி காணப்படுவதால் அதற்கு ஆதாராமக இருக்க கூடிய ஒரு இடம் இருக்கவேண்டும் என்று ஊகிக்கும் படி (காணப்படாமல்) இருக்கும் உடையுடையவள். 

அவளுடைய இடை முந்தைய நாமாவில் கூறப்பட்ட கொடிபோன்ற ரோம வரிசையினை தாங்கும் இடமாகும். அது கண்களுக்கு புலனாகாமல் இருக்கிறது என்பது. இதன் இரகசியார்த்தம் ஆன்மா சூட்சுமமானதும் கண்களுக்கு புலனாகாததுமாகும். தியானத்தின் மூலமாக மட்டுமே உணரக்கூடியது என்பதாகும். 

ஸ்தன பார-தலன்-மத்ய-பட்ட-பந்த-வலித்ரயாயை (36) 
ஸ்தன பாரத்தினால் இடைக்கு ஊனமேற்படாது காப்பதற்காக அணியப்பெற்ற முப்பட்டையோ என விளங்கும் மூன்று மடிப்புகளை வயிற்றில் உடையவள். 

தேவியினுடைய ஸ்தன பாரத்தினால் மடியும் இடையினை தாங்கிக்கொள்வதற்கு தங்கத்தினால் ஆன பட்டி அவளது வயிற்றில் மூன்று மடிப்புகளை உருவாக்குகிறது. 

சௌ. லஹரி (80) " மன்மத வடிவான உன்னுடைய மார்பு அணியப்பட்ட ஆடைக்கு மேலாக மேற்கையில் உரசுகிறது, உன்னுடைய இடையினை உடைவதில் இருந்து பாதுகாப்பதற்காக மூன்று மடிப்புகள் காணப்படுகிறது. 

இதன் உட்பொருள் அவளது எல்லையற்ற கருணை மார்பின் பாரமாக உருவகப்படுத்தப்படுகிறது. மூன்று கோடுகளும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை குறிப்பிடுகிறது. அவளுடைய கருணைக்கான நேரம் மற்றைய தொழில்களை விட அதிகமானது. எல்லாவற்றுக்கும் மேலாக அவள் இந்த பிரபஞ்சத்தின தாய். 

அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்கடீதட்யை (37) 
சிவப்பு பட்டாடையால் பிரகாசிக்கின்ற இடையுடையவள்

தேவி தனது இடையினை சுற்றி சிவப்பு பட்டுத்துணியினை அணிந்துள்ளாள். சிவப்பு என்றால் கருணை என்று பொருள். தேவியுடன் தொடர்புடைய அனைத்தும் சிவப்பு வர்ணமாணவை, இது ஸ்ரீ மாதாவாக அவளது முழுமையான கருணையினை குறிப்பதாகும். தேவி தனது முத்தொழில்களையும் கருணையுடனேயே செய்கிறாள் எனக்கூறப்படுகிறது. இது வாக்தேவிகளிள் ஒருவரானா அருணாவினையும் குறிப்பிடுகிறது. இந்த சஹஸ்ர நாமம் எட்டு வாக்தேவிகளான வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலே, அருணா, ஜயினி, ஸர்வேஸ்வரி, கௌளினி என்போரால் ஆக்கப்பட்டது. அருணா வாக்தேவி தேவியின் இடையினை சுற்றியுள்ள சிவப்பு பட்டாடையால் குறிக்கப்படுகிறாள். 

ரத்ன-கிங்கிணிகா-ரம்ய-ரசனா-தாம-பூஷிதாயை (38) 
இரத்தினச் சதங்கைகளுடன் விளங்கும் அழகிய அரைஞாண் பூண்டவள்

தேவியினுடைய அரைஞாண் இரத்தினங்கள், சதங்கை மணி போன்றவற்றை கொண்டிருக்கிறது. தேவியின் பஞ்சதசி மந்திரம் மூன்று கூடங்களை கொண்டிருக்கின்றது. வாக்ப கூடம் 13 தொடக்கும் 29 வரையிலான நாமக்களில் கூறப்பட்டது. மத்ய கூடம் 30 தொடக்கம் 38 வரையிலான நாமக்களில் கூறப்பட்டது. சக்தி கூடம் 39 இலிருந்து 47 வரை கூறப்படும், தேவியின் முகம் வாக்ப கூடம் எனப்படும். கழுத்து முதல் இடைவரையிலான பகுதி மத்ய கூடம் அல்லது காமராஜ கூடம் எனப்படும். சக்தி கூடம் அதற்கு இடுப்புக்கு கீழே உள்ள பகுதி. பஞ்சதசி மந்திரத்தின் முழுவிளக்கமும் 13 வது நாமாவில் இருந்து 47 வது நாமாவரை விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, தேவியின் முழுமையான வடிவம் 13 தொடக்கம் 54 வரை காணப்படுகிறது.

காமேச-ஜ்ஞாத-ஸௌபாக்ய-மார்த்தவோரு-த்வயான்விதாயை (39) 
அழகும் மென்மையும் காமேசரால் மட்டும் அறியப்பட்ட துடைகளை உடையவள் 

தேவியின் தொடையின் அழகு அவளுடைய கணவரான காமேஸ்வரருக்கு மட்டுமே தெரியுமானது. மறைமுகமாக சக்தி கூடத்தின் விளக்க அரம்பம் இதிலிருந்து ஆரம்பமாகிறது. 

மாணிக்ய-முகுடாகார-ஜானுத்வய-விராஜிதாயை (40) 
மாணிக்க மகுடம் போன்ற முழந்தாள் சில்லுக்களை உடையவள்.  

தேவியினுடைய முழங்கால் சில்லுகள் சிவந்த் மாணிக்க கிரீடங்கள் போன்று காணப்படுகிறது.*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு