குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, May 06, 2013

சித்த வித்யா விஞ்ஞானம் தொடர்பான வாராந்திர கலந்துரையாடல் - அனைவரும் வருக!

எமது வலைத்தளம் வாசிக்கும் இலங்கை வாசகர்களுக்கும், மற்றும் எமது தளத்தின் விடயப்பரப்பு தொடர்பான ஆர்வலர்களுக்கும் அறிவிப்பு.

குருவருளினால்  சில ஆர்வமுள்ள இளைஞர்களின் வேண்டுகோளுக்கு அமைய கொழும்பில் (இலங்கை) சித்த வித்யா விஞ்ஞானம் தொடர்பான  வாரந்திர கலந்துரையாடல் செய்யலாம் என எண்ணியுள்ளோம். எம்முடன் தொடர்புகொண்ட ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ள பலர் நாம் எழுதும் விடயம் பற்றி  திறந்த நிலை கலந்துரையாடல் கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆகவே இந்த கலந்துரையாடல்களை நடத்துவதற்கு  எண்ணியுள்ளோம். இதற்கு குருநாதரின் பரிபூரண ஆசி கிட்ட பிரார்த்திக்கிறோம். 

இதன் ஆரம்ப நோக்கங்கள்  வருமாறு;
 1. எமது யோக, சித்த கலாச்சார விடயங்களை அறிவியல் பூர்வமாக விளங்கிகொள்ளல், விழிப்புணர்வினை ஏற்படுத்துதல். 
 2. யோகம், மந்திர சாஸ்திரம், ஆழ்மனம், வாஸ்து, ஜோதிடம் பற்றிய அறிமுக கலந்துரையாடல்களும், ஆழ்ந்த கற்கையும் - மேலதிக விடயதானங்களை கீழே தந்துள்ளோம் 
பொதுவாக இந்த கலந்துரையாடலை வாராந்திர கலந்துரையாடலாக நடாத்த எண்ணியுள்ளோம். இந்த கலந்துரையாடலில் கீழ்வரும் விடயப்பரப்புகள் தொடர்பாக உரையாடல்கள் நடாத்த எண்ணியுள்ளோம். 

 • சித்தர்களின் அடிப்படைத்தத்துவங்கள் 
 • சித்தர் நூற்கள் 
 • இல்லற யோக சாதனை முறைகள் 
 • மந்திர சாஸ்திர விளக்கங்கள் 
 • மனம் சித்தர்களின் பார்வையில் 
 • குண்டலினி யோக கோட்பாடுகள்
 • ஜோதிடம் அடிப்படை, பிரயோகம்
 • கிரியா யோகம்
 • காயத்ரி உபாசனை, விஞ்ஞானம்
 • சகல தெய்வ உபாஸனை முறைகள் 
 • ஆழ்மன சக்தி செயற்பாடு சாதனைகள்
 • ஹிப்னாடிசம் மெஸ்மரிசம்
 • யோகம்
 • தந்திர யோகம்
 • தந்திர கிரியா யோகம்
 • பதஞ்சலி யோக சூத்திரம்
 • ராஜ யோக பயிற்சி அடிப்படைகள்
 • சித்த யோகபயிற்சி
 • நவரத்திரன விஞ்ஞானம்,பிரயோகம்
 • கர்ம விஞ்ஞானம்
 • அமானுஷ்ய சக்தி, ஆவிகள்
 • யந்திர விஞ்ஞானம் 
 • மூலிகை சாதனை முறைகள்
 • டெலிபதி எனும் சூஷ்ம திருஷ்டி விஞ்ஞானம் 
 • மேலும் பல....
இது ஆரம்ப கூட்டத்திற்கான முன்மொழிவு மாத்திரமே! 

இந்த விடயங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன். 

மேலும் இந்த கலந்துரையாடல்கள் அனைத்தும் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ளுவதற்காக மட்டுமே!  ஏனெனில் இன்று பலரும் சித்த, யோக விடயங்களை ஆழ்ந்து கற்காமல் வெறுமனே ஒரு சில விடயங்களை கேள்விப்பட்டு முயற்சித்து பின்னர் பலன் எது வித  பெறாமல் ஆர்வம் குன்றிப்போய்விடுகின்றனர். எமது கலந்துரையாடல்களில் ஒவ்வொரு விடயத்தினையும் தெளிவாக புரிந்து கொண்டு அவரவர்களை பக்குவப்படுத்தி தயார் படுத்திக்கொள்ள உதவும்.

மேலும் இந்த விடயங்கள் சாதாரணமானவர்கள் அறிந்துகொள்ள, பயிற்சிக்க முடியாத அபூர்வ விடயம் என்ற மாயையினை தகர்த்து அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய பொதுச் சூழலினை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது அமையும்.

இந்த கலந்துரையாடல்கள் வெறுமே நட்புடன் கூடிய சகோதரத்துவத்தினை வளர்க்கும் உரையாடல்களாகவே  இருக்கும்.

இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள இலங்கையில் உள்ள அன்பர்கள் பின்னூட்டம் மூலம் அல்லது sithhavidya@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அறியத்தரலாம். கலந்துகொள்ளவிரும்பும் நண்பர்களது எண்ணிக்கை கண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தபின்னர் இடம், திகதி  பற்றிய அறிவிக்கப்படும் ! 

மேலும் இந்த கலந்துரையாடல் சிறப்புற உங்களது முன்மொழிவுகளையும் பின்னூட்டமிடவும்!

இதன் அடுத்த கட்ட முன்னேற்றங்கள் எமது பதிவினூடே அறியத்தருகிறோம். 

10 comments:

 1. I would like to participate. this is good start for explore the real truth of different subjects. thanks and look forward to meet everyone.

  ReplyDelete
 2. Goodluck and best wishes for the success of this event.
  Any chance of this getting done in Chennai???

  ReplyDelete
 3. உயர்திரு சுமணன் ஐயா அவர்களுக்கு

  தங்களது அறிமுகமே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. இருப்பினும் அடியேன் சென்னையில் உள்ள காரணத்தினால் கலந்து கொள்ள இயலாது.

  தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

  அவ்விதம் நடைபெறும் கலந்துரையாடலை தங்கள் வலைப்பூவில் பதிவு செய்ய வேண்டும். முடிந்தால் ஒளி வடிவமாக பதிவு செய்து அனைவரும் பயன்பெறும்படி செய்ய வேண்டும்.

  மிக்க நன்றி

  சேர்மராஜ், சென்னை.

  ReplyDelete
 4. நன்றி gurru, Surya Narayanan & Sermaraji அவர்களே!

  நிச்சயமாக கலந்துரையாடப்படும் விடயங்கள் செய்திமடலாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில் வெளியிடப்படும்.

  ReplyDelete
 5. உங்களது புதிய முயற்சிக்கு பாராட்டுடன் கலந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. i would like to participate this programme, please inform to me when you will start it.

  ReplyDelete
 7. வணக்கம். ஐயா நான் மோகன்.
  நானும் இதில் கலந்து கொள்ளவிரும்புகிறேன் என்னையும் இணையுங்கள்.

  kc1987_mohan@yahoo.com

  ReplyDelete
 8. வணக்கம். ஐயா
  நான் மோகன்

  kc1987_mohan@yahoo.com

  ReplyDelete
 9. நண்பரே என்னால் கலந்து கொள்ள முடியாத வர்களுக்கு MP3 வில் ரெக்கோர்ட் செயதீரிகள் என்றால் தரவிறக்கம் செய்து கொள்வோம் நன்றி செந்தில்

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...