ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 22: நாமங்கள் 41 - 48


இந்த்ரகோப-பரிக்ஷிப்த-ஸ்மரதூணாப-ஜங்கிகா (41) 
இந்திரகோபங்கள் என்ற கார்காலத்துப் பூச்சிகள் மொய்க்கப்பற்ற மதனவேளின் அம்பறாத்துணிகளோ எனத்தோன்றுபவையான பசனை படர்ந்த முன்னங்கால்களை கொண்டவள்

தேவியினுடைய முன்னங்கால் சதைகள் மன்மதனுடைய அம்பறாத்துணிகளைப்போன்றவை. சௌ.லஹரி (83) கூறுகிறது " மன்மதன் சிவனுடைய மனதினை வெல்ல ஐந்து பாணங்களைக்கொண்ட மன்மதன் தேவியினுடைய முன்னங்கால்களை அம்பறாத்துணியாகவும் பத்து அம்புகளையும் (கால் விரல்கள்) ஆக்கிக்கொண்டான்" என்கிறது. 

கூட குல்பாயை (42) 
உருண்டு அழகிய கணைக்கால்களையுடையவள்

தேவியினுடைய உருண்ட அழகிய கணைக்கால்கள் மறைவானவை

கூர்ம-ப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதாயை (43) 
ஆமையின் முதுகுபோல் வளைந்த புறங்கால்களை உடையவள்

தேவியினுடைய புறக்கால்களின் வளைவுகள் ஆமையின் முதுகின் வளைவுகளை விட அழகானவை. ஆனால் சங்கரர் தேவியினுடைய கால்களை ஆமையின் முதுகுடன் ஒப்பிடுவதை கோபத்துடன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார். சௌ.லஹரி (88) " உன்னுடைய கால் பெருவிரலின் காரணமாகவே இந்த உலகு நிலைத்திருக்கிறது. அவர் முழுப்பாதமும் என்று கூட குறிப்பிடவில்லை, பெருவிரல் மட்டுமே என்று குறிப்பிடுகிறார். சிவன் உன்னுடைய காலின் மென்மையினை உணர்ந்தவர், அதனால் தான் திருமணத்தின் போது அந்த பாதங்களை மிக அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார். எப்படி அவர்கள் இத்தகைய மென்மையான பாதத்தினை கடினமான ஆமையின் முதுகுடன் ஒப்பிடலாம்" என்கிறார். இதிலிருந்து இந்த சஹஸ்ர நாமம் சௌந்தர்ய லஹரியிலும் மிகப்பழமையானது என்பது புலப்படுகிறது. 

41, 42, 43 நாமாக்கள் சாமூத்திரிக லட்சண சாஸ்திரப்படி உறுப்புகள் அமையவேண்டிய விதத்தின் படி கூறப்பட்டுள்ளது. 

நகதீதிதி-ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணாயை (44) 
தன் பாதங்களில் வணங்குவோர் அகத்திலுள்ள இருளை நகத்தின் காந்தியால் போக்குள்ளவள்

தேவியினுடைய பாத நகங்களில் இருந்து வெளிவரும் ஒளிப்பிரபாவம் வணங்க்குபவர்களது அறியாமை இருளினை அகற்றுகிறது. தேவர்களும் அசுரர்களும் வரம் வேண்டி தமது இரத்தினங்கள் பதித்த கிரீடங்களை உடைய தலையினை தேவியில் பாதத்தில் வைத்து வணங்கும் போது அந்த இரத்தினங்களின் ஒளி தேவியின் பாத நகத்தில் இருந்து வெளிவரும் ஒளியுடன் ஒப்பிடும்போது அதனை ஒப்பிடமுடியாதுள்ளது. அந்த பாத நக ஒளி பக்தர்களின் தமோ குணத்தினையும், அறியாமையினையும் அகற்றும் வல்லமை உடையது. 

தேவி தன து கரங்களால் ஆசீர்வதிப்பதில்லை, தன து பாதங்களாலேயே ஆசீர்வதிக்கிறாள். அவள் அபய, வர கரங்களை கொண்டிருப்பதில்லை. பொதுவாக அனைத்து தேவ தேவியர்களும் அபய, வர ஹஸ்தங்களை கொண்டிருப்பதை அவதானிக்கலாம். வர கரம் பக்தர்கள் வேண்டும் வரங்களையும், அபய கரம் பக்தர்களை இரட்சிக்கும் காப்பையும் தரும். தேவியின் ரூபத்தினை அவதானித்தால் அவளது நாலு கரங்களிலும் நான் கு சக்தி வாய்ந்த (நாமங்கள் 09,10,11,12) தெய்வங்களை கொண்டிருக்கிறாள். ஆகவே அவளது அபய வர செய்கைகள் கால் பாத நகங்களால் நடைபெறுகிறது. 

பத-த்வய-ப்ரபா-ஜால-பராக்ருத-ஸ்ரோருஹாயை (45) 
தாமரையிலும் மிக்க அழகுவாய்ந்த பாதங்களையுடையவள்

தேவியின் பாத அழகு தாமரையிலும் வடிவானது. பொதுவாக தாமரையானது தேவதேவியரது கண்களையும் பாதங்களையும் உருவகப்படுத்த பயன்படும். சௌ. லஹரி (2) " உனது பாத கமலத்தில் இருந்து வரும் தூசியின் ஒரு நுண்ணிய பகுதியில் இருந்து பிரம்மா இந்த உலகங்களை படைக்கிறார், விஷ்ணு உலகை காக்கிறார், ருத்திரன் அழிக்கிறார். 

தேவியிற்கு நான் கு பாதங்கள் உள்ளன என்று கூறுவர். அவை சுக்ல,ரக்த, மிஸ்ர, நிர்வாண என்பனவாம். சுக்ல,ரக்த ஆகிய இரண்டும் ஆஞ்ஞா சக்கரத்திலும், மிஸ்ர இருதய சக்கரத்திலும், நிர்வாண சஹஸ்ராரத்திலும் காணப்படும். ஒவ்வொரு பாதமும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சதாசிவன் ஆகியோரால் ஆளப்படுகிறது. அவை படைப்பு, காத்தல், அழித்தல், முக்தி என்பவற்றை குறிப்பன. 

புராணங்களின் படி இயற்கையின் ஒவ்வொரு செயலும் ஒரு தேவ, தேவதையாக குறிக்கப்படும். உதாரணமாக நீர் வருணணாலும், நெருப்பு அக்னியாலும், செல்வம் குபேரனாலும், இறப்பு யமனாலும் நடைபெறுவதாக குறிக்கப்படும். இது இயற்கையினையும் பிரபஞ்ச சக்தியினையும் வணங்க்குவதற்கான ஒரு குறியீடே அன்றி வேறில்லை. இது போன்று ஒவ்வொரு இயற்கை சக்தியும் ஒரு தெய்வ சக்தியாக உருவகப்படுத்தப்படுகிறது.  

சௌ. லஹரி (03), " உனது பதத்தில் இருந்து உதிரும் தூசு ஒரு அறிவிலியின் அறியாமையினை போக்கும் வல்லமை உடையது" 

ஸிஞ்ஜான-மணி-மஞ்ஜீர-மண்டித-ஸ்ரீபதாம்புஜாயை (46) 
ஒளிரும் இரத்தினப் பரல்களை கொண்ட சிலம்புகளால் விளக்கமுறும் அழகிய பாதங்களையுடையவள்

தேவியினுடைய சிலம்பு ஓளி வீசும் அபூர்வ இரத்தினங்களால் ஆனவை. 

நாம் இந்த நாமாக்களின் ஒழுங்கினை கவனித்தோம் ஆனால் 42 தொடக்கம் 46 வரையிலான ஐந்து நாமாக்களில் தேவியின் பாதத்தின் அமைப்பு மிகவிரிவாக கூறப்பட்டுள்ளது. அவளுடைய முழுமையான வடிவம் மனிதனால் சிந்திக்கப்படமுடியாதது. இந்த நாமாக்கள் வாக்தேவியரால் தேவியின் ப்ரகாச விமர்ஸ மஹா மாயா ஸ்வரூபிணி என்ற வடிவத்தினை விளங்கிக்கொள்ள ஆக்கப்பட்டது, 

மராலீ-மந்த-கமனாயை (47) 
ஹம்ஸம் போன்ற மெதுவான நடையுடையவள்

தேவியினுடைய நடை பெண் அன்னத்தின் நடையினை ஒத்தது. தேவி குண்டத்தில் இருந்து வெளிப்பட்டது (நாமா - 04) தேவ தேவியர்களை நோக்கி நடந்தாள். அப்போது அந்த நடை இப்படி வர்ணிக்கப்பட்டது. உண்மையில் அவளுடைய நடை அன்னத்தின் நடையுடன் கூட ஒப்பிடமுடியாதது. ஆனால் புரிந்து கொள்வதற்கு அதீத பட்ச உவமையாக அன்னத்தின் நடையே பொருந்தி வருகிறது அதனால் அப்படி கூறப்பட்டது. சௌ. லஹரி (91) கூறுகிறது, " ஓ அழகிய நடையுடைய தேவியே, உன்னுடைய வீட்டு அன்னங்கள் உனது நடையினை கண்டு தம்முடைய பாதங்களை அது போன்று நடப்பதற்கு ஒத்திசைவாக அசைக்க முயற்சிக்கின்றன, ஆதலால் உன்னுடைய பாதத்தினை கீழே வைக்கவேண்டாம்" என் கிறார். 

இந்த நாமத்துடன் பஞ்சதசி மந்திரத்தின் சக்தி கூட வர்ணணை முற்றும். 

மஹா-லாவண்ய-சேவத (48) 
பேரழகின் பொக்கிஷமானவள்

தேவி பேரழகின் பொக்கிஷம், சௌ. லஹரி (12)" பெரும் படைப்பாளியான பிரம்மா கூட உனது வடிவத்தினை ஒப்பிடுவதற்கு உரிய வடிவத்தினை தேடுவதற்கு கஷ்டப்படுகின்றனர். தேவகன்னியர் கூட உனது அழகைக்காண்பதற்கு ஏங்குகின்றனர். சிவத்தினுடன் கலந்த அந்த வடிவம் பெரும் தவத்தலும் அடைய முடியாதது.


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************


Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு