குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Saturday, December 14, 2013
எது உண்மைக் கல்வி?
Sunday, December 08, 2013
எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி
Saturday, December 07, 2013
எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி
Sunday, December 01, 2013
ஸ்ரீ ஜோதி சாதனை தொடர்பான சந்தேகங்களும் பதில்களும் - 01
Saturday, November 30, 2013
ஸ்ரீ ஜோதி படிவம் அனுப்பும் அன்பர்களுக்கான வேண்டுகோள்
Monday, November 25, 2013
சித்தர்களின் தொடர்பு பெற்று சித்த வித்யா பயிற்சிப்பதற்கான வழிகாட்டல்
- முதலில் எம்மில் உறுதியினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்த உறுதியினை வெறும் உதடுகளும், வாயும் சொல்லும் மேலோட்டமானதாக இல்லாமல் ஆழ்மனதில் பதிந்து உள்ள ஒரு பண்பாக மாறவேண்டும். இதனை செய்வதற்கு சித்த சாதனை உதவி புரியும், எமது வலைத்தளத்திற்கு இறை சாதனை பற்றி அறிந்து அதனை பெற்று உலக இன்பங்களும், மோஷ சாதனையும் பெற என்ற எண்ணத்துடன் வருகை தந்திருப்பீர்களேயானால் இந்த பதிவில் உள்ள சித்த சாதனையுடன் உங்கள் சாதனையினை தொடங்குங்கள்! உங்கள் வாழ்வில் அற்புதமான இன்பமயமான, மாற்றத்தினை காண்பீர்கள்! தெய்வ சக்தி உங்களுக்கு எப்போதும் உதவிக்கொண்டிருப்பதை உணர்வீர்கள்! இந்த சாதனை உங்களை அடிப்படையில் தயார் செய்வதற்கு!
- இரண்டாவது படி எம்மைவிட எமக்கு உதவக்கூடிய உயர்ந்த சக்தியுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது! எமது வலைத்தளத்தினை பார்வையிட வரும் அனைத்து ஆன்மாக்களுக்கும் எமது குருமண்டலத்தின் குருமார்கள் அனைவரும் உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள்! ஆகவே அவர்களது உதவியினை பெறுவதற்கு தினமும் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம், ஆகவே கீழ்வரும் குரு நாமங்களை தினமும் கூறி எம்மை சரியான பாதையில் வழி நடத்தும் படி வேண்டிக்கொள்ளவேண்டும். மீண்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், அவர்களது பணி உங்களுக்கு காரியத்தினை நடாத்தும் சக்தியினை தந்து உதவுவதே! காரியத்தை ஆற்ற வேண்டியது நீங்கள்! கீழ்வரும் பத்து குருமார்களும் எமது சித்த வித்யா மண்டலத்தினை வழி நடாத்தும், சக்தியளிக்கும் குருமார்கள்! இவர்களை தினமும் நினைப்பது அவசியம்!
- சித்த வித்யா குருமண்டலம் :
- காயத்ரி உபாசனை : இதுபற்றிய விரிவாக எழுதியுள்ளோம், பதிவுகளின் தொகுப்பை எமது வலைத்தளத்தின் உள் காணலாம். காயத்ரி சாதனை ஒருவனது அறிவினை தூண்டி இறைவழியில் சரியாக நடாத்தி வைக்கும்.
- ஸ்ரீ ஜோதி – ஸ்ரீ வித்யா: இது போகம் மோஷம் ஆகிய இரண்டையும் வாழ்வில் தரக்கூடியது. இதுபற்றிய மேலதிக விபரங்களை தகுந்த இணைப்புகளில் காண்க,
Thursday, November 21, 2013
தெய்வ சக்தியை துரிதமாக எம்மில் விழிப்பிக்கும் சித்த சாதனை (Subconscious mind Practice to awaken the divinity in Us!)
- தேவி, எனது முகமூடிகளான கோபம், சந்தேகம், வெட்கம், வெறுப்பு, நான் எனது குடும்பம் மட்டும் என்ற சுயநலம், எனது இனம் ஜாதி என்ற சிறுமை மனப்பான்மை, எனது செயல்களுக்கு பலன் கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டேன்.
- எனது இருதயத்தில் உன்னை வரவேற்க, நிரந்தரமாக குடியிருக்கக் மலர்ந்த மென்மையான தாமரையினை வைத்திருக்கிறேன்,
- உன்னை பணிந்து வேண்டிக்கொள்கிறேன், என்னுள் வருவாயாக! உனது குளிர்ந்த, மென்மையான, பொன்னிற கிரணங்களை என்னுள் செலுத்துவாயாக!
- எனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உனது இயல்பான அன்பு, இன்பம், ஞானம் ஒளி, சங்கீதம், நாட்டியம், கவித்துவம், இரக்கம் என்பவற்றை நிரப்புவாயாக!
- இந்த குணங்களின் இயல்புகளை அலை அலையாக என்னுள் மோதச் செய்து என்னை இன்பத்தில் மூழ்க வைப்பாயாக!
- அனைத்து தீமையிலிருந்தும் காப்பாயாக!
- நீ என்னுள்ளும் வெளியிலும் இருந்து காட்டும் வழியினை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனப்பாங்குடன் இருக்கிறேன். எனக்கு தூய தெளிந்த குரலினையும் இனிமையான வார்த்தைகளையும் தருவாயாக, உன்னுடைய தெய்வீக காட்சியினை அனுதினமும் உணரக்கூட்டிய தெளிந்த மனத்தினை தருவாயாக! நேருக்கு நேர் கண்டு உணரக்கூடிய ஆற்றலினை தருவாயாக!’
- ஒரு கணமும் என்னிடமிருந்து பிரியாதிருப்பாயாக!
- நீயில்லாமல் எனது வாழ்க்கை இல்லை! எனது கடமைகள் முடிந்து நேரம் வரும்போது என்னை உனது இருதயத்தினுள் எடுத்துக்கொள்!
- உனது அழகினையும் அன்பினையும் உலகத்திற்கு பகிர்ந்தளிக்க கூடியவனாகவும், பயனுள்ளவனாகவும் என்னை செயல்பட வை! இதுவே எனது நிரந்தர பிரார்த்தனையும், ஆசை, மற்றும் வாழ்வின் இலட்சியம்!
- முதலாவது பிரார்த்தனையினால் எமது முகமுடிகளை கலைத்து விட்டு உண்மையான தன்மையுடன் இருக்க முனைகிறோம்!
- இரண்டாவது பிரார்த்தனையினால் தெய்வீக தன்மையினை இருத்துவதற்கான இடத்தினை எம்மில் உருவாக்குகிறோம்.
- மூன்றாவது பிரார்த்தனை மூலம் தெய்வ காந்த சக்தியினை எம்முள் ஈர்த்து எம்மை ஒளிப்படுத்துகிறோம்!
- நான்காவது பிரார்த்தனையில் எமது ஒவ்வொரு அணுவும், மூலையும் தெய்வீக தன்மையினால் நிரம்பும்.
- ஐந்தாவது பிரார்த்தனையினால் எமது உடலிலும் மனதிலும் தெய்வ காந்த சக்தியினை அலை அலையாக பெற்று எம்மில் சக்தியினை வலுப்படுத்துகிறோம்.
- ஆறாவது பிரார்த்தனையில் எம்மை நேர்மையற்ற வழியில் செலுத்தி ஆற்றலை வீணாக்கும் தீய சக்திகளில் இருந்து காக்கும் கவசத்தினை உண்டாக்குகிறோம்!
- ஏழாவது பிரார்த்தனையில் எம்மை சரணாகதி அடையவைத்து எம்முள் தோன்றி தெய்வ சக்தி இருந்து வழி நடத்தும் தன்மையினை உருவாக்குகிறோம்!
- தெய்வீக தன்மை இன்றி வாழ மாட்டோம் என்ற உறுதியினை எம்மில் உருவாக்குகிறோம்!
- எல்லையற்ற பரம்பொருளுடன் இரண்டற கலக்கும் நிலைக்கு எம்மை தயாற்படுத்துகிறோம்.
- மற்றவர்களுக்கு உதவி வாழ்வதே உண்மை இயல்பு ஆதலால் தெய்வ சக்தி பெற்று மற்றவர்களுக்கும் உதவும் தன்மை உடையவர்களாகிடுங்கள்!
Sunday, November 17, 2013
ஸ்ரீ வித்யா - ஸ்ரீ ஜோதியில் எமது வாசகர்கள் அனைவரும் பயன் பெறும் முறை
இந்த பதிவினை PDF ஆக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம்.
- ஸ்ரீ சக்கரம் படம் ஒன்று (வர்ண படம் சென்னையில் ஆத்மா ஞான யோக சபாவில் கிடைக்கும், தொடர்பு கொண்டால் தபாலில் அனுப்பி வைப்பார்கள். முடியாதவர்கள் இந்த இணைப்பில் உள்ள படத்தினை போட்டோ பிரிண்டு போட்டு லேமினேட் செய்து பிரேம் செய்து கொள்ளவும்.
- எண்ணை விளக்கு : நெய் விளக்கு உத்தமம், அல்லாவிடில் தேங்காய் எண்ணை விளக்கு வைத்துக் கொள்ளலாம்.
- இடம்: பூஜை அறை அல்லது வசதியான சுத்தமான இடத்தில் ஒரு சிறிய மேசையில் கிழ்வரும் அமைப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ
சக்கரம்
|
இதுவே அனைவரையும் இணைக்கும் சிம்
காட் (Sim card), ஸ்ரீ சக்கரத்திலுள்ள கேத்திர கணித
அமைப்புகள் பிரபஞ்ச சக்திகளை சரியான விகிதத்தில் ஆகர்ஷித்து குவிக்கும் செயலை
செய்விக்கும். அத்துடன் குரு மண்டலத்தில் இருந்து அனுப்பும் சக்தியினை சேர்த்து நீங்கள்
பிரார்த்திக்கும் வேளையில் உங்களிற்கு தரும்.
|
விளக்கு
|
இது அக்னி, பிரபஞ்சத்தில் எந்த சக்தியினையும் இணைப்பது அக்னி, இதனாலேயே
அனைத்து விடயங்களிலும் அக்நியிற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. தற்கால
நடைமுறையில் கூறுவதானால் செல்போனிற்கு பற்றரி மாதிரி!
|
இடம்
|
குறித்த ஒரு
இடம் இந்த சக்தி பரிமாற்றத்திற்கு ஒதுக்குவதால் அந்த இடத்தில் சக்தி தேங்கி
உங்கள் பிரார்த்தனை, மனவிருப்பங்கள் நிறைவேறும்.
|
படிவம்
|
இதுவே மூல சக்தியுடன் உங்களை இணைக்கும் இணைப்பு, இந்த படிவத்தினை உங்கள்
கைகளால் நிரப்பி அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஐந்து பேர் இதனால்
பலன் பெற வேண்டுமெனில் அவர்கள் ஐந்து பெரும் தனித்தனி படிவம் நிரப்பி அனுப்ப
வேண்டும். இந்த படிவங்கள் நவாவரண பூஜை நடக்கும் மகா மேருவிற்கு கீழே
வைக்கப்படுவதால் அந்த நபர்களுக்கு ஸ்ரீ யந்திரத்தின் சக்தி எப்போதும் செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கும்.
|
- முதலில் விளக்கை ஏற்றி சற்று நேரம் ஆழமாக மூச்சினை எடுத்து மனதினை அமைதிப்படுத்தவும். பின்னர் உள்முச்சு எடுக்கும் போது “ஓம்” எனும் மந்திரத்தினை ஓம் ம் ம் என்று “ம்” சப்தம் முன்று தடவை வரும் அளவிற்கு உச்சரிக்கவும். வெளிமுச்சுடன் “ஹ்ரீம்” என்ற மந்திரத்தினை உச்சரிக்கவும். இப்படி இயலுமான அளவு மூன்று தொடக்கம் ஐந்து நிமிடம் செய்யவும். இதன் போது உங்கள் உடல், மனம் என்பன சக்தியினை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் உரிய வகையில் அமைதியடையும்.
- உங்கள் தாய்,
தந்தை, குருவினை, குலதெய்வம், கிராம தெய்வத்தினை வணங்கவும். பின்னர் மூலாதாரத்தில் இருக்கும் கணபதியினை மனதில்
வணங்கவும். பின்பு கீழ்வரும் சித்தவித்யா குருமண்டல ஆவாஹனம்:
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குரவே போற்றி!ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குரவே போற்றி!ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குரவே போற்றி !ஓம் ஸ்ரீ போக நாத குரவே போற்றி!ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குரவே போற்றி!ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குரவே போற்றி!ஓம் பரம் தத்வாய நாராயண குரவே போற்றி!ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குரவே போற்றி!ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குரவே போற்றி!ஓம் ஸ்ரீ ஸோமானந்த நாத ஆத்ம குரவே போற்றி! இந்த பத்து நாமங்களையும் கூறி இந்த தியானத்தினை செய்வதற்கு மானசீகமாக வழிகாட்டும் படி பிரார்த்தித்து கொள்ளவும்.
- பின்பு அமைதியாக கண்ணை திறந்து எரியும் விளக்கின் ஜோதி யினை சில வினாடிகள் பார்த்துவிட்டு அத்தகைய ஜோதி உங்களது மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கண் வரை பயணித்து வெளிவந்து உங்கள் முன்னாள் இருக்கும் ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் இருக்கும் “புள்ளி” “பிந்து” வில் வந்து இணைவதாக பாவிக்கவும். இந்த பாவனையின் நடுவில் மனதில், அல்லது வாயினை அசைத்த வண்ணம் “ஓம் ஹ்ரீம் ஓம்” என்ற மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் இருக்க வேண்டும்.
- பின்னர் சில வினாடிகள் ஸ்ரீ சக்கரத்த்தின் பிந்துவினை கண்களால் உற்றுப்பார்த்து “ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரத்தினை உச்சரித்தவண்ணம் பிந்துவிலிருந்து ஜோதி வந்து உங்கள் உடலில் சேர்வதாக பாவிக்கவும். இந்த ஜோதி நீங்கள் முதலில் செலுத்திய ஜோதியிலும் பார்க்க பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஏனெனில் முதலில் செலுத்திய ஜோதியில் உங்கள் ஆத்ம சக்தி மாத்திரம் இருந்தது, இப்போது நீங்கள் பெறும் ஜோதியில் இந்த வட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து ஆன்மாக்களது சக்தியும், குருமண்டல சக்தியும் சேர்ந்து வரும். இதனை பெற்றவுடன் உங்களால் உங்கள் இன்ப வாழ்க்கைக்கு தேவையான வற்றை பெறும் சக்தி பெற்றவர்கள் ஆவீர்கள்.
- பின்னர் இந்த பிரார்த்தனையினை மனதில் மூன்று முறை உச்சரித்து அமைதியாக தியானிக்கவும்.
இதன் பின்னர் ஸ்ரீ சக்கரத்தினை பார்த்த வண்ணம் உங்களால் இயன்ற அளவு “ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரம் ஜெபம் செய்யவும்.
Sunday, November 03, 2013
ஸ்ரீ வித்யா - ஸ்ரீ தந்திரம் - ஸ்ரீ ஜோதி - அனைத்து ஆன்மாக்களும் ஒளி பெறும் சாதனை
ஸ்ரீ வித்யா உபாசகர் போகத்தினையும் மோக்ஷத்தினையும் ஒரே பொருளின் இரு வேறு முனைகளாக கருதி எதனையும் வெறுத்து ஒதுக்காமல் ஞானத்துடன் வாழ்ந்து பேரின்பத்தினை பெறுவர. உலக வாழ்க்கை என்பதும் ஆன்ம வாழ்க்கையின் ஒரு பாகமாகும். இறைவன் இறைவி என்ற இரண்டும் சக்திகளும் எப்போதும் பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்தே காணப்படுகிறது. ஒருவருடைய தனி வாழ்க்கை என்பதில் இந்த பிரபஞ்ச்சத்தின் வாழ்க்கையும் இணைந்தே உள்ளது. இந்த பிரபஞ்ச்சத்தின் சிறுபகுதியும் அதன் முழு ஆற்றலையும் கொண்டுள்ளது. இதையே பிண்டத்தில் உள்ளதெல்லாம் அண்டத்தில் உண்டு என்றார்கள். தாந்திரிகம் இந்த அடிப்படையினை கொண்டு மனிதனது ஸ்தூல, சூக்ஷ்ம அமைப்பினை அறிந்து அதனை சரியாக தட்டி எழுப்புவதன் மூலம் பிரபஞ்ச சக்திகளை வசப்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டார்கள். இப்படியாக பல தாந்திரிக முறைகள் உருவாயின, எந்த ஒரு தந்திரத்திற்கும் மேலே குறிப்பிட்ட மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற மூன்றும் இணைந்திருக்கும். இப்படியானவையே இன்று உருவ வழிபாடுகளாக, கோயில்களாக உருப்பெற்று உள்ளன. இன்று இவை வெறும் சின்னங்களாக மட்டுமே உள்ளன. உண்மை ஞானம் வெளிப்படையாக மறைந்து குரு பரம்பரையினூடாக மாத்திரம் பரிமாறப்பட்டு வந்துள்ளது. இந்த வழியில் எமது தளம் குரு பரம்பரையின் அனுமதி பெற்று உலகம் இன்பப் பாதையில் ஆக்க வழியில் செல்லக்கூடிய ஸ்ரீ தந்திரம் பற்றியும், காலம் வரும் போது காயத்ரி தந்திரம் பற்றியும் கூறுவோம்.
எமது குரு அத்வைத அமிர்தானந்த பரமஹம்ஸ பரிவ்ராஜகாச்சார்யா திகம்பர அவதூத அதிவர்ணாமி 108 ஸ்ரீலஸ்ரீ மகா மண்டலேஸ்வரர் அருளிய ஸ்ரீ ஜோதி பூஜா விதானம்;
ஸ்ரீ ஜோதி என்றால் அன்பும் அரவணைப்பும் நிறைந்த எல்லையற்ற ஒளி என்று பொருள், அதேவேளை எல்லையற்ற ஒளியினை தரக்கூடியது என்றும் பொருள் படும். இந்த சிறிய பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரது இருதய கமலத்திலும் 05 பில்லியன் ஒளிக்கற்றைகள் உள்ளன. தேவியானவள் தனது பெருந்திட்டத்தில் வானத்தை பில்லியன் கணக்கான அண்டங்க்களாலும், ட்ரில்லியன் கணக்கான நட்சத்திரங்களாலும் ஒளிரச் செய்கிறாள். இந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து ஆன்மாக்களும் தன்னிலை உயர்ந்து உயர் நிலை பெற்றிடும் தெய்வீக திட்டம்தான் இந்த ஸ்ரீ ஜோதி!
எளிய பிரணாயாமத்தினால் உடலில் உள்ள நஞ்சினையும், தியானத்தினால் மனதின் குழப்பங்களையும் அகற்ற முடியும். எமது வாழ்க்கையின் தரத்தினை சாதாரண நிலையிலும் பார்க்க உயர்ந்த நிலைக்கு உயர்த்த முடியும். ஆன்மீகம் உங்களை தெய்வத்தன்மை உடையவர் ஆக்குகிறது. எதைக் கொடுக்கிறீர்களோ அதனைப் பெறுவீர்கள். அன்பைக் கொடுத்தால் அன்பு கிட்டும். நீங்கள் மற்றவரை ஆதரித்தால் நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்! உங்களுக்கு எவ்வளவு நபர்களை அல்லது எவ்வளவு தெரியும் என்பது சிறிய எல்லைக்கு உட்பட்டது. தெரியாத நபர்களும் விடயங்களும் எல்லை அற்றவை. எல்லையற்று பரந்து நிறைந்திருக்கும் இயற்கையின் அதீத சக்திகளை பெறும் முறையினை தெரிந்து கொண்டால் அவை நாம் உதவி கேட்பதற்கு முன்னரே எமது தேவைகளை தெரிந்து கொண்டு நடாத்தி வைக்கும். ஆனால் இயற்கையின் ஒரு நியதி "அறுவடை செய்யமுன்னர் விதைக்க வேண்டும்" என்பது ஆகும். எமது உடலானது இந்த இயற்கை அதீத சக்திகளை ஈர்க்க கூடிய கேந்திரங்களை கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட சக்தி வாய்ந்த அடிப்படைகளை கொண்டு நான் சிறிய பூஜை முறை ஒன்றினை வகுத்துள்ளேன். அது உங்களது அன்பு சக்தியை ஒளியாக்கி அந்த ஒளியை அதீத சக்தியாக மாற்றும் தன்மை வாய்ந்தது.
எம்மில் அனேகர் வாழ்க்கை என்பது போராட்டம், 90 % மனசஞ்சலம் 10 % இன்பம், நாம் அனைவரும் எப்போது ஏதாவது ஒரு பிரச்சனையிலேயே இருக்கிறோம். அவை எம்மாலோ அல்லது நாம் வாழும் சமூகத்தாலோ உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். சமூகம் தனது விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும். அவற்றை கடைப்பிடிக்க தவறினால் தண்டிக்கப்படுவோம். இத்தகைய நிலையில் எமது பிரச்சனைகள் அனைத்தையும் எம்மால் தீர்க்க முடியாது. அந்த நிலையில் எமக்கு உதவி தேவைப்படுகிறது. முதலில் நாம் எமக்கு தெரிந்த நபர்களிடம் உதவி கேட்போம். ஆனால் எமக்கு தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம். மொத்த மக்கள் எண்ணிக்கையில் ஆயிரம் நபர்களே எமக்கு தெரிந்தவர்களாக இருக்கும். தற்போதைய நிலையில் இன்டர் நெட்டில் தேடிப்பார்ப்போம். இயற்கை அழிவுகளில் அதுவும் உதவாது. இயற்கை பூகம்பம், புயற்காற்று, எரிமலை, சுனாமி என்பவற்றில் பயங்கரமான விளைவுகளை கொடுக்கும். இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றிருந்தோமானால் அது மிகவும் இனைமையானது. இயற்கையினை கட்டுப்படுத்த முடியுமாயின் எல்லையற்ற சக்தியினையும் நிறைவினையும் பெற முடியும். கண்ணுக்கு புலப்படாது இயற்கையினை கட்டுப்படுத்தும் சக்திகளையே நாம் தேவ தேவியர் என அழைக்கிறோம். இயற்கையிடமிருந்து உதவியினை பெறவேண்டுமாயின் முதலில் அதன் விதிகளை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். அறுவடை செய்யும் முன்னர் விதைக்க வேண்டும். அதாவது இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் தேவதைகளது உதவியை பெறுவதற்கு முன்னர் நாம் அவற்றிற்கு தாவேண்டும். இயற்கை சக்திகளில் இருந்து பெறும் உதவியானது நாம் எமது பிரச்சனைகளை தீர்த்து அமைதியான முறையில் ஆனந்தமாக எமது வாழ்க்கையினை களிப்பதற்கு ஆகும். இதற்கு ஒருவர் தனது "நான்" என்ற சுய நல வட்டத்தில் இருந்து "நாம்" என்ற ஒரே நான் ஆக வேண்டும். இதை அனைவரும் சேர்ந்து குழுவாக சேர்ந்து ஒரு நோக்கத்திற்காக செய்ய வேண்டும். அந்த பொதுவான ஒரே நோக்கம் " நாம் அனைவரும் தெய்வ ஆற்றல் உள்ளவர்களாக மாறுவதுடன் எமது குழுவில் உள்ள அனைவரையும் தெய்வ சக்தி உடையவர்களாக மாற்றுவது" என்பதாகும்.
இது செயல்படும் முறை கீழ்வருமாறு; நாம் அனைவரும் எமது உயிர் சக்தியை வரையப்பட்ட சக்தி வாய்ந்த ஸ்ரீ யந்திரத்தின் மத்தியில் உள்ள ஒளியில் செலுத்தி அந்த யந்திரத்தை மலர்களாலும், ஒளி விளக்குகளாலும் அலங்கரித்து அக்னி, சூரியன், சந்திரன், காலம் முதலான பிரபஞ்ச சக்திகளை ஆவஹித்தல் வேண்டும். இப்படி செய்யும் போது பிரபஞ்சத்தில் உள்ள ஆண் (yang ) பெண் (yin) சக்திகள் இணைந்து பிரபஞ்ச பேரானந்தம் ஊற்றெடுக்க தொடங்கும். இந்த அமிர்த பெருக்கினை எமது கண்களை, வாக்கு, இதயம், குஹ்யஸ்தானம் என்பவற்றில் நிலைப்பிக்கச் செய்து பெற்ற சக்தியினை அனைவரிடமும் பகிர்ந்து எமது தேவைகளை தெய்வ சக்தியின் உதவி கொண்டு பெற்றுக்கொள்ளலாம். மதம் என்ற பெயரால் தேவையற்ற சுமைகளை சுமந்து எம்மை நாமே தண்டித்து கொண்டு துன்புறும் நிலையில் இருந்து வெளிப்பட்டு வெண்ணிற ஒளியில் இருந்து வானவில் வெளிப்பட்டு அழகு தோன்றுவது போல் எமது அன்பினை பலவித வண்ணத்தில் ஒளிரச் செய்யலாம். இது கற்றுக்கொள்வதற்கும் இலகுவானது.
இந்த அரிய ஞானம் ஸ்ரீ வித்யா மார்க்கத்திலிருந்து வெளிக்கொண்டரப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பங்கு கொண்டு தேவியின் ஒளியை பெற்று தமது ஆன்மாவினை ஒளி நிலைப்படுத்துவதுடன் அனைவரும் ஒளி பெற உதவிட வேண்டும்!
நீங்கள் தெரிய வேண்டியது: உங்களது முக்கியத்துவம் உடலின் அமைப்பும் அது எப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு பட்டுள்ளது என்பதனை உணர்ந்து அறிதல்!
நீங்கள் உணர வேண்டியது: உங்களில் அன்பு சக்தி எவ்வளவு விழிப்படைந்துள்ளது , உங்களைச் சூழ இருக்கும் அனைத்துமே உங்களது வாழ்க்கைக்கு அர்த்தத்தினை தருவது என்பது!
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது: ஏன் தெய்வ சக்தியினை நாம் பெறுவதனை விட அனைவருக்கும் கொடுப்பது முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் மாற வேண்டியது: நீங்கள் யார்? எமது வாழ்வு எத்தகையது? இந்த உலகம் எப்படி? என்பதனை அன்பினூடாகவும் எமது மனதினூடாகவும் புரிந்து கொள்ளுதல்!எமது ஸத்குரு தேவரது ஆசியுடனும், குரு மண்டல ஆசீர்வாதத்துடனும் எமது வலை தளத்தினை படிக்கும் அனைவரையும் இந்த ஸ்ரீ ஜோதியில் இணைத்து தெய்வ சக்தியினை பெறும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.
அடுத்த பதிவில் எப்படி நீங்கள் அனைவரும் ஸ்ரீ ஜோதியில் இணைந்து கொள்வது என்ற வழிமுறையினை கூறுகிறோம்!
தீபத்திரு நாளில் அனைவரது ஆன்மாவிலும் ஸ்ரீ ஜோதி பெருகட்டும்!
ஸத்குரு பாதம் போற்றி!
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...