தெய்வ சக்தியை துரிதமாக எம்மில் விழிப்பிக்கும் சித்த சாதனை (Subconscious mind Practice to awaken the divinity in Us!)


இந்த பதிவினை PDF கோப்பாக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம். 


எந்த காரியத்தை செய்வதற்கும் தகுந்த பக்குவம் அவசியம், அந்த பக்குவம் பெறாமல் செய்யும் எந்த காரியமும் முறையான பலனினை தராது என்பது பிரபஞ்ச நியதிகளுள் ஒன்றாகும்!
இந்த பிரார்த்தனை எமது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ அமிர்தானந்த நாதரால் வகுக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த முறையாகும். இதனை உறுதியுடன் கடைப்பிடிப்பவர்கள் பயிற்சிக்க தொடங்கிய சில நாட்களிலேயே தமது வாழ்க்கை இன்பமாக, தெய்வ சக்தியால் வழி நடாத்தப்படுவதை உணர்வார்கள்!
அந்த வகையில் ஸ்ரீ ஜோதி மூலம் ஸ்ரீ வித்யா சாதனை செய்ய விரும்புபவர்கள் குறித்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும், அந்த பண்புகளும் தன்மைகளும் அவர்களது ஆழ்மனமான சித்தத்தில் பதிந்து இருக்க வேண்டும், அப்படியிருப்பினும் மட்டுமே அவர்களது உபாசனை சிறப்பாக வேலை செய்யும். ஆகவே ஸ்ரீ ஜோதியில் பலன் பெற விரும்புபவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையினை நாற்பது நாட்கள் விடாமல் தினசரி மூன்று வேளை, மூன்று தடவைகள் வாசித்து அமைதியாக மனதில் கிரகித்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஸ்ரீ ஜோதியில் பங்கு பற்றி பலன் பெறுவதை விட இதனை செய்து கொண்டு எந்த தெய்வ சாதனை செய்வீர்களானாலும் அதன் பலன் பல நூறு மடங்குகள் அதிகரிக்கும் என்பதனை உறுதி கூறுகிறோம்!

சித்த சாதனை – Sub-conscious mind practice
நான் எனது குருவினதும் தேவியினதும் ஆசியினை வேண்டுகிறேன், அவை இப்போதும் எப்போதும் என்னுடன் இருக்கின்றன.

 1. தேவி, எனது முகமூடிகளான கோபம், சந்தேகம், வெட்கம்,  வெறுப்பு, நான் எனது குடும்பம் மட்டும் என்ற சுயநலம், எனது இனம் ஜாதி என்ற சிறுமை மனப்பான்மை, எனது செயல்களுக்கு பலன் கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டேன்.
 2. எனது இருதயத்தில் உன்னை வரவேற்க, நிரந்தரமாக குடியிருக்கக் மலர்ந்த மென்மையான தாமரையினை வைத்திருக்கிறேன்,
 3. உன்னை பணிந்து வேண்டிக்கொள்கிறேன், என்னுள் வருவாயாக! உனது குளிர்ந்த, மென்மையான, பொன்னிற கிரணங்களை என்னுள் செலுத்துவாயாக!
 4. எனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உனது இயல்பான அன்பு, இன்பம், ஞானம் ஒளி, சங்கீதம், நாட்டியம், கவித்துவம், இரக்கம் என்பவற்றை நிரப்புவாயாக!
 5. இந்த குணங்களின் இயல்புகளை அலை அலையாக என்னுள் மோதச் செய்து என்னை இன்பத்தில் மூழ்க வைப்பாயாக!
 6.  அனைத்து தீமையிலிருந்தும் காப்பாயாக!
 7. நீ என்னுள்ளும் வெளியிலும் இருந்து காட்டும் வழியினை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனப்பாங்குடன் இருக்கிறேன். எனக்கு தூய தெளிந்த குரலினையும்  இனிமையான வார்த்தைகளையும் தருவாயாக, உன்னுடைய தெய்வீக காட்சியினை அனுதினமும் உணரக்கூட்டிய தெளிந்த மனத்தினை தருவாயாக! நேருக்கு நேர் கண்டு உணரக்கூடிய ஆற்றலினை தருவாயாக!’
 8. ஒரு கணமும் என்னிடமிருந்து பிரியாதிருப்பாயாக!
 9. நீயில்லாமல் எனது வாழ்க்கை இல்லை! எனது கடமைகள் முடிந்து நேரம் வரும்போது என்னை உனது இருதயத்தினுள் எடுத்துக்கொள்!
 10. உனது அழகினையும் அன்பினையும் உலகத்திற்கு பகிர்ந்தளிக்க கூடியவனாகவும், பயனுள்ளவனாகவும் என்னை செயல்பட வை! இதுவே எனது நிரந்தர பிரார்த்தனையும், ஆசை, மற்றும் வாழ்வின் இலட்சியம்!
இந்த பிரார்த்தனையின் முக்கியத்துவமும் செயல்முறையும் வருமாறு;

 1. முதலாவது பிரார்த்தனையினால் எமது முகமுடிகளை கலைத்து விட்டு உண்மையான தன்மையுடன் இருக்க முனைகிறோம்!
 2. இரண்டாவது பிரார்த்தனையினால் தெய்வீக தன்மையினை இருத்துவதற்கான இடத்தினை எம்மில் உருவாக்குகிறோம்.
 3. மூன்றாவது பிரார்த்தனை மூலம் தெய்வ காந்த சக்தியினை எம்முள் ஈர்த்து எம்மை ஒளிப்படுத்துகிறோம்!
 4. நான்காவது பிரார்த்தனையில் எமது ஒவ்வொரு அணுவும், மூலையும் தெய்வீக தன்மையினால் நிரம்பும்.
 5. ஐந்தாவது பிரார்த்தனையினால் எமது உடலிலும் மனதிலும் தெய்வ காந்த சக்தியினை அலை அலையாக பெற்று எம்மில் சக்தியினை வலுப்படுத்துகிறோம்.
 6. ஆறாவது பிரார்த்தனையில் எம்மை நேர்மையற்ற வழியில் செலுத்தி ஆற்றலை வீணாக்கும் தீய சக்திகளில் இருந்து காக்கும் கவசத்தினை உண்டாக்குகிறோம்!
 7. ஏழாவது பிரார்த்தனையில் எம்மை சரணாகதி அடையவைத்து எம்முள் தோன்றி தெய்வ சக்தி இருந்து வழி நடத்தும் தன்மையினை உருவாக்குகிறோம்!
 8. தெய்வீக தன்மை இன்றி வாழ மாட்டோம் என்ற உறுதியினை எம்மில் உருவாக்குகிறோம்!
 9. எல்லையற்ற பரம்பொருளுடன் இரண்டற கலக்கும் நிலைக்கு எம்மை தயாற்படுத்துகிறோம்.
 10. மற்றவர்களுக்கு உதவி வாழ்வதே உண்மை இயல்பு ஆதலால் தெய்வ சக்தி பெற்று மற்றவர்களுக்கும் உதவும் தன்மை உடையவர்களாகிடுங்கள்!

Comments

 1. அய்யா,
  ஸ்ரீ சாதனை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி,
  நிரப்பபட்ட சாதனைப் படிவினை மின்அஞ்சல் செய்யலாமா ?

  ஓம்

  ReplyDelete
 2. இல்லை ஓம் தத் சத் அவர்களே, கட்டாயம் தரப்பட்ட முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்கவும்

  ReplyDelete
 3. அய்யா,

  விளக்கத்திற்கு நன்றி. நிரப்பபட்ட சாதனைப் படிவினை அனுப்ப வேண்டிய
  முகவரியை பகிரவும்.

  ஓம்

  ReplyDelete
 4. மேலே முகப்பு பகுதியில் தரப்பட்ட ஸ்ரீ ஜோதி அறிவுறுத்தல் இணைப்பில் சென்று பார்க்கவும், அல்லது இந்த இணைப்பினை சொடுக்கவும்: https://docs.google.com/file/d/0B3eJHMvXLPTTMFh2Uk9WWTJrSHc/edit

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு