எது உண்மைக் கல்வி?


இளைமை முதல் எமது உண்மை ஸ்வரூபத்தினை பலவித முகமூடிகளை கொண்டு மறைத்த வண்ணமே வாழ்ந்து வருகிறோம். எம்மை புற உலக தேவைகளுக்கு ஏற்றவாறு எப்படி தயாற்படுத்திக்கொள்வது என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. எமது குடும்பமும் நண்பர்களும் சமூகத்தில் எப்படி நடக்கவேண்டும் என்பதனை கற்று தருகின்றனர். எமது கல்வி முறைகள் பணத்தையும் பௌதிக தேவைகளை பெறுவது எப்படி என்பது பற்றியும் சொல்லித்தருகிறது. இந்த பௌதீக கல்வி மூலம் பணத்தை சம்பாதிப்பது எப்படி? சமூகத்தில் எப்படி மேலான அந்தஸ்திற்கு வருவது என்பது பற்றியே சதா சிந்தித்து போராடி வருகிறோம்.

ஆனால் மிக அரிதாக சிறிதளவான நபர்களே தமது அகவாழ்க்கை, ஆற்றல்களை அறிவதற்கும், பெறுவதற்கும் முயற்சித்து வருகிறார்கள். இந்த அக ஆற்றலை அறிந்தவர்களே தெய்வீக ஞானம், ஆழ்மன சக்தி, சுயசிந்தனை, தன்மதிப்பு, சூஷ்ம சக்திகள், ஆன்மீக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். இவற்றை பெறுவதற்கான சுயம் எம் அனைவரிலும் எப்போதும் நித்தியமாக இருக்கும் ஆன்மாவாகும். இதன் குரலை கேட்பவர்கள் ஆன்ம வாழ்வில் படியெடுத்து வைக்கிறார்கள். இதற்கான வழிமுறைகள் காலம் காலமாக எல்லாவித கலாச்சாரங்களிலும் இரகசியமாக குரு பரம்பரை மூலம் பரப்ப பட்டு வருகிறது. இந்த குருபரம்பரையினை பூர்வ புண்ணியமாக தொடர்பு கொண்டவர்கள் இன்று வரை இந்த உலகில் குப்த யோகிகளாக இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். யார் தமது உள்ளுணர்வின் குரலை மதித்து  உண்மையான அகவாழ்க்கையினை வாழ விரும்பி தாகம் கொள்பவர்களுக்கு இந்த அதி சக்தி வாய்ந்த தெய்வ உதவி கிடைத்த வண்ணமே இருக்கிறது.

துன்பம் நிறைந்த வாழ்க்கை
வாழ்வு என்பது பல்வேறு சவால்களை கொண்ட துன்பம் நிறைந்த ஒன்று, அமைதியான அன்பு நிறைந்த குடும்ப வாழ்க்கை, வெற்றி நிறைந்த தொழில், பாதுகாப்பான செல்வம், நோயற்ற வாழ்க்கை இவற்றை பெறுவது என்பது மிகுந்த சவாலானது. இன்றைய ஆன்மீக ஆசான்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் இதற்கான பதிலாக பூர்வ கர்மம், ஒருவன் செய்த பாவம் என்பவற்றை காரணம் சொல்லி சமாதானமடைகின்றனர். அப்படியானால் இவற்றை வழியே இல்லையா என சோர்வடைந்து வருந்தி மேலும் மேலும் துன்பத்தினை தமக்கு வருவித்துக்கொள்கின்றனர். ஆன்மிகம் என்றவுடன் பலவித ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என்பவற்றை போதித்து அனைவரிலும் தாழ்வு மனப்பான்மையினை உருவாக்கி தம்மை பெரியவர்களாக்கி கொள்ளும் உளவியல் உத்திதான் இன்றைய ஆன்மீக ஆசான்களிடம் காணப்படுகிறது.
உண்மை ஆன்மீகம் என்பது தன்னை அறிந்து தனது உள்ளுணர்வை தொடர்பு கொண்டு, தன் உள்ளுனர்விடமிருந்தே எல்லாவித பிரச்சனைகளுக்கும் பதிலை பெற்று வாழ்வின் சவால்களை எதிர் கொண்டு வெற்றி கொள்வது!


இத்தகைய கல்வியே மனிதனுக்கு தேவையான உண்மைக்கல்வி! இத்தகைய கல்வியினை மக்கள் பேறுவதற்கு எமது சித்த வித்யா வலைத்தளம் வழிகாட்டும்! 

Comments

  1. மிக உண்மையான கருத்து. சரியான குருவை தேடுவதே ஒரு கலையாகி விட்டது இக்காலகட்டத்தில். காரணம் யாரையாவது நாம் நம்பி விட்டோம்மானால், அவர் அவரின் கருத்து கணிப்புகளை சரிபார்த்துக்கொள்ள நமது வழக்கை சம்பவங்களை வைத்தே பரிசீலிக்க மூட்படுகிறார்

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு