ஸ்ரீ வித்யா - ஸ்ரீ ஜோதியில் எமது வாசகர்கள் அனைவரும் பயன் பெறும் முறை


வாசகர்கள் அனைவரும் கட்டாயம் இந்த முதல் பதிவினை வாசித்து விட்டு இதனை வாசிக்கவும்.

இந்த  பதிவினை PDF ஆக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம். 

இது செயற்படும் முறை:
முதலில் நீங்கள் உங்கள் பூஜை அறை அல்லது வசதியான இடத்தில் கீழே அறிவுறுத்தப்பட்ட படி ஒரு ஸ்ரீ சக்கரமும், எண்ணை விளக்கும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் இங்கு தரப்பட்ட எளிய யோகப்பயிற்சியினை சில வட்டங்கள் செய்து அமைதியான நிலையில் இருந்து கொண்டு உங்கள் பிரார்த்தனையினை செய்து வர வேண்டும்.
மறுமுனையில் எமது குருமண்டலத்தில் உள்ள குருமார்களால் வாராந்திரம் (ஒவ்வொரு ஞாயிறும்) நீங்கள் தியானிக்கும் போது ஸ்ரீ சக்கரத்தில் செலுத்தும் ஆன்ம சக்தியிற்கு ஸ்ரீ வித்யா மந்திரங்களால் சக்தி ஏற்றப்படும்.
இந்த செயல்முறையினை நீங்கள் விட்டிற்கு மின்சாரம் பெறும் முறையுடன் ஒப்பிட்டு மேலும் விளங்கி கொள்ளலாம். அதாவது பெரும் அணைக்கட்டில்/உலையில் உற்பத்தி செய்யப்படும் பல்லாயிரம் கிலோ வோட் மின்சாரம், குறித்த வாரியத்தின் மூலம் நீங்கள் உங்களுக்கு வேண்டும் என விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பம் ஏற்று தகுந்த இணைப்பினை கொடுத்து உங்களுக்கான மின்சாரத்தினை பெறுவது போன்றது. மின்சாரம் இணைப்பு கொடுத்தாலும் அதனை பாவித்து பலன் பெறுவதற்கான ஸ்விட்ச் உங்கள் கையில் இருப்பது போல இதில் பரிபூரண பலன் பெற உங்களது சிறு முயற்சியும் அவசியம்!
இதை நீங்கள் சரியாக செய்துவர உங்கள் வாழ்வில் ஸ்ரீ தத்தும் எனும் போகமும் மோக்ஷமும் பெறும் பாதையில் முன்னேற ஆரம்பிப்பிர்கள்.

இந்த ஸ்ரீ ஜோதியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முன் ஆயுத்தங்கள் கீழே பகுதி ௦1  இல் தரப்பட்டுள்ளது. 

பகுதி ௦1

 1. ஸ்ரீ சக்கரம் படம் ஒன்று (வர்ண படம் சென்னையில் ஆத்மா ஞான யோக சபாவில் கிடைக்கும், தொடர்பு கொண்டால் தபாலில் அனுப்பி வைப்பார்கள். முடியாதவர்கள் இந்த இணைப்பில் உள்ள  படத்தினை போட்டோ பிரிண்டு போட்டு லேமினேட் செய்து பிரேம் செய்து கொள்ளவும்.
 2. எண்ணை விளக்கு : நெய் விளக்கு உத்தமம், அல்லாவிடில் தேங்காய் எண்ணை விளக்கு வைத்துக் கொள்ளலாம்.
 3. இடம்: பூஜை அறை அல்லது வசதியான சுத்தமான இடத்தில் ஒரு சிறிய மேசையில் கிழ்வரும் அமைப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
 4. இந்த இணைப்பில் உள்ள படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி எமக்கு தபாலில் அனுப்பி வைக்கவும். நீங்கள் ஸ்ரீ ஜோதி படிவம் அனுப்பும் தபாலின் இடது மூலையில் உங்கள் முகவரியினையும், படிவத்தின் பின்புறம் உங்கள் ஈமெயில் முகவரியினையும் குறிக்கவும். இயலுமாயின் படிவத்தினை ஸ்கான் செய்து அனுப்பிவைத்தல் நலம். ஏற்கனவே அனுப்பிவிட்டவர்கள் இமெயிலின் மூலம் எமது மின்னஞ்சலிற்கு (sithhavidya@gmail.com) அறியத்தரவும். படிவம் எமக்கு கிடைத்தவுடன் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்துவோம்.

பகுதி - ௦2
இந்த பகுதியில் மேலே கூறிய ஒவ்வொன்றினதும் அவசியமும் முக்கியத்துவமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்கரம்
இதுவே அனைவரையும் இணைக்கும் சிம் காட் (Sim card), ஸ்ரீ சக்கரத்திலுள்ள கேத்திர கணித அமைப்புகள் பிரபஞ்ச சக்திகளை சரியான விகிதத்தில் ஆகர்ஷித்து குவிக்கும் செயலை செய்விக்கும். அத்துடன் குரு மண்டலத்தில் இருந்து அனுப்பும் சக்தியினை சேர்த்து நீங்கள் பிரார்த்திக்கும் வேளையில் உங்களிற்கு தரும்.
விளக்கு
இது அக்னி, பிரபஞ்சத்தில் எந்த சக்தியினையும் இணைப்பது அக்னி, இதனாலேயே அனைத்து விடயங்களிலும் அக்நியிற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. தற்கால நடைமுறையில் கூறுவதானால் செல்போனிற்கு பற்றரி மாதிரி!
இடம்
குறித்த ஒரு இடம் இந்த சக்தி பரிமாற்றத்திற்கு ஒதுக்குவதால் அந்த இடத்தில் சக்தி தேங்கி உங்கள் பிரார்த்தனை, மனவிருப்பங்கள் நிறைவேறும்.  
படிவம்
இதுவே மூல சக்தியுடன் உங்களை இணைக்கும் இணைப்பு, இந்த படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஐந்து பேர் இதனால் பலன் பெற வேண்டுமெனில் அவர்கள் ஐந்து பெரும் தனித்தனி படிவம் நிரப்பி அனுப்ப வேண்டும். இந்த படிவங்கள் நவாவரண பூஜை நடக்கும் மகா மேருவிற்கு கீழே வைக்கப்படுவதால் அந்த நபர்களுக்கு ஸ்ரீ யந்திரத்தின்  சக்தி எப்போதும் செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கும்.


 பகுதி ௦3
தியான முறை
நீங்கள் அனுப்பிய படிவம் எம்மை அடைந்தவுடன் அதன் முலம் உங்களது ஆத்மா சக்தியிற்கு சித்தர்களின் சில இரகசிய முறைகள் முலம் குரு மந்திரமான “ஓம்” கார தீட்சையும், தேவியின் மூல மந்திரமான “ஹ்ரீம்” கார மந்திரமும் உங்கள் சூஷ்ம உடலில் பதிவிக்கப்படும். இதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரத்தின் முன்னாள் அமர்ந்து தியானிக்க தொடங்கும் போது மூல சக்தியுடன் தொடர்பினை பெறுவீர்கள்!
தினசரி குறித்த நேரத்தில் குரு மந்திரமான “ஓம்” தேவியின் மந்திரமான “ஹ்ரீம்” இரண்டையும் கீழே கூறப்பட்ட முறைப்படி அப்பியாசித்து தரப்பட்ட பிரார்த்தனையினை செய்யவும்.

 1. முதலில் விளக்கை ஏற்றி சற்று நேரம் ஆழமாக மூச்சினை எடுத்து மனதினை அமைதிப்படுத்தவும். ின்னர் உள்முச்சு எடுக்கும் போது “ஓம்” எனும் மந்திரத்தினை ஓம் ம் ம் என்று “ம்” சப்தம் முன்று தடவை வரும் அளவிற்கு உச்சரிக்கவும். வெளிமுச்சுடன் “ஹ்ரீம்” என்ற மந்திரத்தினை உச்சரிக்கவும். இப்படி இயலுமான அளவு மூன்று தொடக்கம் ஐந்து நிமிடம் செய்யவும். இதன் போது உங்கள் உடல், மனம் என்பன சக்தியினை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் உரிய வகையில் அமைதியடையும்.
 2. உங்கள் தாய், தந்தை, குருவினை, குலதெய்வம், கிராம தெய்வத்தினை வணங்கவும். பின்னர் மூலாதாரத்தில் இருக்கும் கணபதியினை மனதில் வணங்கவும். பின்பு கீழ்வரும் சித்தவித்யா குருமண்டல ஆவாஹனம்:  
  ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குரவே போற்றி!
  ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குரவே போற்றி!
  ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குரவே போற்றி !
  ஓம் ஸ்ரீ போக நாத குரவே போற்றி!
  ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குரவே போற்றி!
  ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குரவே போற்றி!
  ஓம் பரம் தத்வாய நாராயண குரவே போற்றி!
  ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குரவே போற்றி!
  ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குரவே போற்றி!
  ஓம் ஸ்ரீ ஸோமானந்த நாத ஆத்ம குரவே போற்றி!           இந்த பத்து நாமங்களையும் கூறி இந்த தியானத்தினை செய்வதற்கு மானசீகமாக வழிகாட்டும் படி பிரார்த்தித்து கொள்ளவும். 
 3. பின்பு அமைதியாக கண்ணை திறந்து எரியும் விளக்கின் ஜோதி யினை சில வினாடிகள் பார்த்துவிட்டு அத்தகைய ஜோதி உங்களது மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கண் வரை பயணித்து வெளிவந்து உங்கள் முன்னாள் இருக்கும் ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் இருக்கும் “புள்ளி” “பிந்து” வில் வந்து இணைவதாக பாவிக்கவும். இந்த பாவனையின் நடுவில் மனதில், அல்லது வாயினை அசைத்த வண்ணம் “ஓம் ஹ்ரீம் ஓம்” என்ற மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் இருக்க வேண்டும்.
 4. பின்னர் சில வினாடிகள் ஸ்ரீ சக்கரத்த்தின் பிந்துவினை கண்களால் உற்றுப்பார்த்து “ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரத்தினை உச்சரித்தவண்ணம் பிந்துவிலிருந்து ஜோதி வந்து உங்கள் உடலில் சேர்வதாக பாவிக்கவும். இந்த ஜோதி நீங்கள் முதலில் செலுத்திய ஜோதியிலும் பார்க்க பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஏனெனில் முதலில் செலுத்திய ஜோதியில் உங்கள் ஆத்ம சக்தி மாத்திரம் இருந்தது, இப்போது நீங்கள் பெறும் ஜோதியில் இந்த வட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து ஆன்மாக்களது சக்தியும், குருமண்டல சக்தியும் சேர்ந்து வரும். இதனை பெற்றவுடன் உங்களால் உங்கள் இன்ப வாழ்க்கைக்கு தேவையான வற்றை பெறும் சக்தி பெற்றவர்கள் ஆவீர்கள்.
 5. பின்னர் இந்த பிரார்த்தனையினை மனதில் மூன்று முறை உச்சரித்து அமைதியாக தியானிக்கவும்.
a. அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திட செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
ஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்
கழிந்தன வினைகள் எல்லாம் காய்ந்தன பாப்பம் எல்லாம்
இன்பமும் சுகமும் பெறும் இருந்திடும் பாக்கியங்கள்
நன்மையையும் செல்வம் கீர்த்தி நல்கிடும் அருளும் ஞானம் நாடிய பொருள் கைகூடும் நலிவெல்லாம் அகன்று ஓடும்
தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

இதன் பின்னர் ஸ்ரீ சக்கரத்தினை பார்த்த வண்ணம் உங்களால் இயன்ற அளவு “ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரம் ஜெபம் செய்யவும். 

Comments

 1. Sri gurubhyo namah,

  Sri Matre namah,

  Great work to get the blessings of guru mandala and Universal Mother.
  All the best.

  love
  V.Kumaraguru

  ReplyDelete
 2. மிக்க நன்றி படிவம் எங்கே உள்ளது ??

  ReplyDelete
 3. dear sir,
  I am not able to see the form, please help

  ReplyDelete
 4. அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா........

  ReplyDelete
 5. I am not able to see the form. Please help.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு