குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Sunday, November 03, 2013

ஸ்ரீ வித்யா - ஸ்ரீ தந்திரம் - ஸ்ரீ ஜோதி - அனைத்து ஆன்மாக்களும் ஒளி பெறும் சாதனை

ஸ்ரீ தந்திரம் என்பது ஸ்ரீ வித்யா மார்க்கத்தினை சேர்ந்தது. ஸ்ரீ வித்யா என்பது மந்திரம், ஸ்ரீ சக்கரம் என்பது யந்திரம், ஸ்ரீ கல்பம் என்பது தந்திரம். இந்த மூன்றும் இணைந்து செய்யப்படும் சாதனை போகம் எனும் உலக இன்பங்கள் அனைத்தையும் தருவதுடன் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலக்கும் மோக்ஷத்தினையும் தரும்.

ஸ்ரீ வித்யா உபாசகர் போகத்தினையும் மோக்ஷத்தினையும் ஒரே பொருளின் இரு வேறு முனைகளாக கருதி எதனையும் வெறுத்து ஒதுக்காமல் ஞானத்துடன் வாழ்ந்து பேரின்பத்தினை பெறுவர. உலக வாழ்க்கை என்பதும் ஆன்ம வாழ்க்கையின் ஒரு பாகமாகும். இறைவன் இறைவி என்ற இரண்டும் சக்திகளும் எப்போதும் பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்தே காணப்படுகிறது. ஒருவருடைய தனி வாழ்க்கை என்பதில் இந்த பிரபஞ்ச்சத்தின் வாழ்க்கையும் இணைந்தே உள்ளது. இந்த பிரபஞ்ச்சத்தின் சிறுபகுதியும் அதன் முழு ஆற்றலையும் கொண்டுள்ளது. இதையே பிண்டத்தில் உள்ளதெல்லாம் அண்டத்தில் உண்டு என்றார்கள். தாந்திரிகம் இந்த அடிப்படையினை கொண்டு மனிதனது ஸ்தூல, சூக்ஷ்ம அமைப்பினை அறிந்து அதனை சரியாக தட்டி எழுப்புவதன் மூலம் பிரபஞ்ச சக்திகளை வசப்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டார்கள். இப்படியாக பல தாந்திரிக முறைகள் உருவாயின, எந்த ஒரு தந்திரத்திற்கும் மேலே குறிப்பிட்ட மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற மூன்றும் இணைந்திருக்கும். இப்படியானவையே இன்று உருவ வழிபாடுகளாக, கோயில்களாக உருப்பெற்று உள்ளன. இன்று இவை வெறும் சின்னங்களாக மட்டுமே உள்ளன. உண்மை ஞானம் வெளிப்படையாக மறைந்து குரு பரம்பரையினூடாக மாத்திரம் பரிமாறப்பட்டு வந்துள்ளது. இந்த வழியில் எமது தளம் குரு பரம்பரையின் அனுமதி பெற்று உலகம் இன்பப் பாதையில் ஆக்க வழியில் செல்லக்கூடிய ஸ்ரீ தந்திரம் பற்றியும், காலம் வரும் போது காயத்ரி தந்திரம் பற்றியும் கூறுவோம். 

இனி ஸ்ரீ தந்திரத்தின் மூல அடிப்படையான ஸ்ரீ சக்கரம் பற்றி பார்ப்போம். ஸ்ரீ சக்கரம் என்பது இந்த பிரபஞ்சத்தின் மூல அமைப்பு. பிரபஞ்சத்தின் மூல அமைப்பு  எது? 1) இடம் (space) 2) காலம் (time), 3) உயிர் சக்தி (life-energy) இந்த மூன்றின் ஊடாக மட்டுமே இந்த வாழ்வு நகர்கிறது. இந்த மூன்றின் இணைவுமே இந்த பிரபஞ்ச சக்திகள் அனைத்தையும் உணடு பண்ணுகின்றன. இதையே சிவ சக்தி, ராதா கிருஷ்ணன், சரஸ்வதி பிரம்மா என்று குறித்தனர். ஒவ்வொரு மனிதருமே பரிபூரணமான தெய்வங்கள். ஒவோருவரிலும் உயிர்சக்தியான தெய்வம் நிறைந்திருக்கிறது. ஸ்ரீ சக்கரம் என்பது முழுமையான பிரபஞ்ச சக்திகள் இணைந்த நிலையினை குறிக்கும் குறியீடு. அதாவது தனியாக சிவமோ, சக்தியோ இன்றி இரண்டும் வேறு இல்லை என்று இணைந்த நிலை! இதையே லலிதா சஹஸ்ர நாமம் 999 நாமம் சிவசக்தி ஐக்கிய ரூபிணி எனக்குறிக்கிறது. ஆக ஸ்ரீ வித்தையின் மூல நோக்கம் பிரிந்திருக்கும் சக்திகளை ஒன்றாக இணைத்து ஒரே மூல சக்தியாக ஆக்குவது. 

ஸ்ரீ தந்திரம் உயிர் சக்தியினை இணைக்கும் செயன் முறையினை கூறுகிறது. ஆகவே மனித உடலே இந்த பிரபஞ்ச்சத்தில் இருக்கும் மிகச்சிறந்த யந்திரம், ஆக்வே மனித உடலை ஸ்ரீ யந்திரமாக பூஜிப்பதே மிக உயர்ந்த சாதனை! 

பூஜை என்பது குறித்த தெய்வங்களுக்குரிய குணங்களை பாவித்து  மந்திரங்களை உச்சரித்து பிரபஞ்ச தெய்வ சக்திகளை உடல் மனச்சக்தியில் விழிப்பிக்க செய்யும் செயல் முறை! இதனால் உடல் மனம் இருளிலிருந்து ஒளி  நிலையினை அடைந்து விழிப்புணர்வில் இருக்க  ஆரம்பிக்கும். 

குருவே "நான்" என்ற சிறிய  தனி ஆன்மா நிலையில் இருந்து முழுமையான  பிரபஞ்ச ஒளி  நிலைக்கு செல்வதற்குரிய பாதை! குருவுடன் சரணாகதி அடைவது என்பதே இந்த ஒளிக்கலப்பிற்கு பாதை! இப்படிக் கலந்த பின்னர் குரு வேறு சீடன் வேறு என்ற நிலை அற்றுப்போகிறது! இருவரும் ஆன்ம நிலையில் ஒரே கடவுளாகின்றனர்! ஆனால் உலக நாடகத்தில் தமது பாத்திரத்தினை செவ்வனே செய்வதற்கு தனித்து தமது கடமைகளை செய்கின்றனர்! இப்படியான பாதையில் பயணிப்பதால் குரு சீடன் ஆகிய இருவரும் ஆன்ம பலம் பெற்று தெய்வ நிலை அடைகின்றனர். 

மேலே கூறிய நிலையினை எப்படி அடைவது என்று இப்போது உங்களுக்கு கேள்வி வந்திருக்கும். பொதுவாக ஸ்ரீ வித்தை என்றவுடன் பலர் மணிக்கணக்கான நேர பூஜை என்று கருதுகின்றனர். இதில் உண்மை இருந்தாலும், சில சுருக்கமான அதேவேளை சக்தியில் எதுவித குறையும் இல்லாத தந்திரீக முறைகள் இருக்கின்றன. அப்படியான ஒரு முறைதான் எமது குருநாதரால் உபதேசிக்கப்பட்ட "ஸ்ரீ ஜோதி" எனும் பூஜை முறை. 

இதுபற்றி அவர் கூறிய விளக்கங்களை அப்படியே உங்களுக்கு தருகிறோம். இவற்றை விளங்கிக் கொண்ட பின்னர் எமக்கு தனிப்பட மின்னஞ்சலிற்கு உங்கள் விருப்பத்தினை அறியத்தரவும். உங்களுக்கும் இந்த பூஜையின் பலன் கிடைக்கச் செய்யும் வழி முறையினை அறியத்தருகிறோம் .

எமது குரு அத்வைத அமிர்தானந்த பரமஹம்ஸ பரிவ்ராஜகாச்சார்யா திகம்பர அவதூத அதிவர்ணாமி 108 ஸ்ரீலஸ்ரீ மகா மண்டலேஸ்வரர் அருளிய ஸ்ரீ ஜோதி பூஜா விதானம்;
ஸ்ரீ ஜோதி என்றால் அன்பும் அரவணைப்பும் நிறைந்த எல்லையற்ற ஒளி என்று பொருள், அதேவேளை எல்லையற்ற ஒளியினை தரக்கூடியது என்றும் பொருள் படும். இந்த சிறிய பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரது இருதய கமலத்திலும் 05 பில்லியன் ஒளிக்கற்றைகள் உள்ளன.    தேவியானவள் தனது பெருந்திட்டத்தில் வானத்தை பில்லியன் கணக்கான அண்டங்க்களாலும், ட்ரில்லியன் கணக்கான நட்சத்திரங்களாலும் ஒளிரச் செய்கிறாள். இந்த பெருந்திட்டத்தின்  ஒரு பகுதியாக அனைத்து ஆன்மாக்களும் தன்னிலை உயர்ந்து உயர் நிலை பெற்றிடும் தெய்வீக திட்டம்தான் இந்த ஸ்ரீ ஜோதி!
எளிய பிரணாயாமத்தினால் உடலில் உள்ள நஞ்சினையும்,  தியானத்தினால் மனதின் குழப்பங்களையும் அகற்ற முடியும். எமது வாழ்க்கையின் தரத்தினை சாதாரண நிலையிலும் பார்க்க  உயர்ந்த நிலைக்கு உயர்த்த முடியும். ஆன்மீகம் உங்களை தெய்வத்தன்மை உடையவர் ஆக்குகிறது. எதைக் கொடுக்கிறீர்களோ அதனைப் பெறுவீர்கள். அன்பைக் கொடுத்தால் அன்பு கிட்டும். நீங்கள் மற்றவரை ஆதரித்தால் நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்! உங்களுக்கு எவ்வளவு நபர்களை அல்லது எவ்வளவு தெரியும் என்பது சிறிய எல்லைக்கு உட்பட்டது. தெரியாத நபர்களும் விடயங்களும் எல்லை அற்றவை. எல்லையற்று பரந்து நிறைந்திருக்கும் இயற்கையின் அதீத சக்திகளை பெறும் முறையினை தெரிந்து கொண்டால் அவை நாம் உதவி கேட்பதற்கு முன்னரே எமது தேவைகளை தெரிந்து கொண்டு நடாத்தி வைக்கும். ஆனால் இயற்கையின் ஒரு நியதி "அறுவடை செய்யமுன்னர் விதைக்க  வேண்டும்" என்பது ஆகும். எமது உடலானது இந்த இயற்கை அதீத சக்திகளை ஈர்க்க கூடிய கேந்திரங்களை  கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட சக்தி வாய்ந்த அடிப்படைகளை கொண்டு நான் சிறிய பூஜை முறை ஒன்றினை வகுத்துள்ளேன். அது உங்களது அன்பு சக்தியை ஒளியாக்கி அந்த ஒளியை அதீத சக்தியாக மாற்றும் தன்மை வாய்ந்தது. 
 எம்மில் அனேகர் வாழ்க்கை என்பது போராட்டம், 90 % மனசஞ்சலம் 10 % இன்பம், நாம் அனைவரும் எப்போது ஏதாவது ஒரு பிரச்சனையிலேயே இருக்கிறோம். அவை எம்மாலோ அல்லது நாம் வாழும் சமூகத்தாலோ உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். சமூகம் தனது விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும். அவற்றை கடைப்பிடிக்க தவறினால் தண்டிக்கப்படுவோம். இத்தகைய நிலையில்  எமது பிரச்சனைகள் அனைத்தையும் எம்மால் தீர்க்க முடியாது.  அந்த நிலையில் எமக்கு உதவி தேவைப்படுகிறது. முதலில் நாம் எமக்கு தெரிந்த நபர்களிடம் உதவி கேட்போம். ஆனால் எமக்கு தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம். மொத்த மக்கள் எண்ணிக்கையில் ஆயிரம் நபர்களே எமக்கு தெரிந்தவர்களாக இருக்கும். தற்போதைய நிலையில் இன்டர் நெட்டில் தேடிப்பார்ப்போம். இயற்கை அழிவுகளில் அதுவும் உதவாது. இயற்கை பூகம்பம், புயற்காற்று, எரிமலை, சுனாமி என்பவற்றில் பயங்கரமான விளைவுகளை கொடுக்கும். இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றிருந்தோமானால் அது மிகவும் இனைமையானது. இயற்கையினை கட்டுப்படுத்த முடியுமாயின் எல்லையற்ற சக்தியினையும் நிறைவினையும் பெற முடியும். கண்ணுக்கு புலப்படாது இயற்கையினை கட்டுப்படுத்தும் சக்திகளையே நாம் தேவ தேவியர் என அழைக்கிறோம். இயற்கையிடமிருந்து உதவியினை பெறவேண்டுமாயின் முதலில் அதன் விதிகளை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். அறுவடை செய்யும் முன்னர் விதைக்க வேண்டும். அதாவது இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் தேவதைகளது உதவியை பெறுவதற்கு முன்னர் நாம் அவற்றிற்கு தாவேண்டும். இயற்கை சக்திகளில் இருந்து பெறும் உதவியானது நாம் எமது பிரச்சனைகளை தீர்த்து அமைதியான முறையில் ஆனந்தமாக எமது வாழ்க்கையினை களிப்பதற்கு ஆகும். இதற்கு ஒருவர் தனது "நான்" என்ற சுய நல வட்டத்தில் இருந்து "நாம்" என்ற ஒரே நான் ஆக வேண்டும். இதை அனைவரும் சேர்ந்து குழுவாக சேர்ந்து ஒரு நோக்கத்திற்காக  செய்ய வேண்டும். அந்த பொதுவான ஒரே நோக்கம் " நாம் அனைவரும் தெய்வ ஆற்றல் உள்ளவர்களாக மாறுவதுடன் எமது குழுவில் உள்ள அனைவரையும் தெய்வ சக்தி உடையவர்களாக மாற்றுவது" என்பதாகும். 
இது செயல்படும் முறை கீழ்வருமாறு; நாம் அனைவரும் எமது உயிர் சக்தியை வரையப்பட்ட சக்தி வாய்ந்த ஸ்ரீ யந்திரத்தின் மத்தியில் உள்ள ஒளியில் செலுத்தி அந்த யந்திரத்தை மலர்களாலும், ஒளி விளக்குகளாலும் அலங்கரித்து அக்னி, சூரியன், சந்திரன், காலம்  முதலான பிரபஞ்ச சக்திகளை ஆவஹித்தல் வேண்டும். இப்படி செய்யும் போது பிரபஞ்சத்தில் உள்ள ஆண் (yang ) பெண் (yin) சக்திகள் இணைந்து பிரபஞ்ச பேரானந்தம் ஊற்றெடுக்க தொடங்கும். இந்த அமிர்த பெருக்கினை எமது கண்களை, வாக்கு, இதயம், குஹ்யஸ்தானம் என்பவற்றில் நிலைப்பிக்கச்  செய்து பெற்ற சக்தியினை அனைவரிடமும் பகிர்ந்து எமது தேவைகளை தெய்வ சக்தியின் உதவி கொண்டு பெற்றுக்கொள்ளலாம். மதம் என்ற பெயரால் தேவையற்ற சுமைகளை சுமந்து எம்மை நாமே தண்டித்து கொண்டு துன்புறும் நிலையில் இருந்து வெளிப்பட்டு வெண்ணிற ஒளியில் இருந்து வானவில் வெளிப்பட்டு அழகு தோன்றுவது போல் எமது அன்பினை பலவித வண்ணத்தில் ஒளிரச் செய்யலாம். இது கற்றுக்கொள்வதற்கும் இலகுவானது.  
இந்த அரிய ஞானம் ஸ்ரீ வித்யா மார்க்கத்திலிருந்து வெளிக்கொண்டரப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பங்கு கொண்டு தேவியின் ஒளியை பெற்று  தமது ஆன்மாவினை ஒளி நிலைப்படுத்துவதுடன் அனைவரும் ஒளி பெற உதவிட வேண்டும்! 
 நீங்கள் தெரிய வேண்டியது: உங்களது முக்கியத்துவம்  உடலின் அமைப்பும் அது எப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு பட்டுள்ளது என்பதனை உணர்ந்து அறிதல்!
நீங்கள் உணர வேண்டியது: உங்களில் அன்பு சக்தி எவ்வளவு விழிப்படைந்துள்ளது , உங்களைச் சூழ இருக்கும் அனைத்துமே உங்களது வாழ்க்கைக்கு அர்த்தத்தினை தருவது என்பது!
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது: ஏன் தெய்வ சக்தியினை நாம் பெறுவதனை விட அனைவருக்கும் கொடுப்பது முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
நீங்கள் மாற வேண்டியது: நீங்கள் யார்? எமது வாழ்வு எத்தகையது? இந்த உலகம் எப்படி? என்பதனை அன்பினூடாகவும் எமது மனதினூடாகவும் புரிந்து கொள்ளுதல்! 
எமது ஸத்குரு தேவரது ஆசியுடனும், குரு மண்டல ஆசீர்வாதத்துடனும்  எமது வலை தளத்தினை படிக்கும் அனைவரையும் இந்த ஸ்ரீ ஜோதியில் இணைத்து தெய்வ சக்தியினை பெறும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.

அடுத்த பதிவில் எப்படி நீங்கள் அனைவரும்  ஸ்ரீ ஜோதியில் இணைந்து கொள்வது என்ற வழிமுறையினை கூறுகிறோம்!

தீபத்திரு நாளில் அனைவரது ஆன்மாவிலும் ஸ்ரீ ஜோதி பெருகட்டும்!

ஸத்குரு பாதம் போற்றி!

6 comments:

 1. மிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
  நன்றி ஐயா.

  ReplyDelete

 2. Sri gurubhyo namah,
  Sri Matre namah

  Guruji's and amma's blessings be with all the participants in Sri Jyothi,

  Sri Jyothi should be performed every where and every part of the world, The best way of energizing and healing for individuals and the universe. experience and enjoy life. Happiness, love and joy is every human's birth right. Sri Jyothi will show the way towards this.

  with love
  Kumaraguru

  ReplyDelete
 3. நன்று காத்திருக்கிறோம்

  ReplyDelete
 4. ஆன்மாவில் ஜோதி பிரகாசிக்க பிரார்த்திக்கிறோம்..!

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01

குவாண்டம் இயற்பியல் குவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் ...