ஸ்ரீ ஜோதி சாதனை தொடர்பான சந்தேகங்களும் பதில்களும் - 01

எமக்கு அனுப்பபட்டிருந்த ஒருசில சந்தேகங்ககளும் அதற்கான விடைகளும். 


இந்த சாதனையினை ஞாயிறுகளில் காலை  08.00 - 08.40 மணியிலும் மேலும் தினசரியும் செய்யச் சொல்லி அறிவுறுத்தி இருந்தீர்கள், சற்று விளங்கவில்லை, விபரமாக கூற முடியுமா? 

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டு தியானம், இது மின்கலத்தினை சக்தியேற்றும் செயல்முறை போன்றது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆகாய மனத்தினூடாக (Cosmic mind) அனைவருக்கும் குருமண்டலத்திலிருந்து சக்தி பரவும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதற்கு சொல்வதே ஞாயிற்றுக்கிழமை, ஏற்றுக்கொண்ட சக்தியினை சமநிலையில் வளர்த்துக்கொள்வதற்கு தினசரி பயிற்சி, தினசரி பயிற்சியினை காலை, மாலை உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றை வகுத்துக்கொண்டு செய்யலாம். 

ஸ்ரீ வித்யா ஸ்ரீ ஜோதி மார்க்கத்தில் முதல் படிமுறையில்  உள்மூச்சின் போது ஓம் என்று உச்சரிப்பதுபற்றியும் "ம்" என்ற சப்தத்தை மூன்று முறை அழுத்தி கூறுவது பற்றியும் விளக்க முடியுமா?

உள்முச்சின் போது "ஓம்" என உச்சரிப்பு மனதில் நிகழவேண்டும், அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மூச்சினை அவதானிக்கவேண்டும், அப்படி அவதானிக்கையில் மனதில் உச்சரிக்கும் "ஓம்" மூச்சில் மோதி மூச்சுடன் கலக்கும். மற்றும்படி ஒலி வெளியே கேட்கும்படி 'ஓம்" இணை உச்சரித்து உள்முச்சினை எடுப்பது இயலாத காரியம். மனதில் உச்சரித்து மூச்சினை அவதானித்து கலப்பதே சரியான செய்முறை. மனதில் உச்சரிக்கும் பொது "ம்" இணை சற்று நீட்டி மூன்று தடவை வரும் நேர அளவிற்கு உச்சரிக்கவும். 

தியான நிலையில் ஓம் ஹ்ரீம் என்பதனை மனதில் உச்சரிக்கவே முடிகிறது. இது சரிதானா?
ஆம் இது சரியானது, உண்மையான சாதனை மனதினாலேயே நடைபெறுகிறது, 

சில நேரங்களில் மனம் அலைபாய்கையில் மந்திரத்தை சொல்லவதை விடுத்து சாட்சி பாவமாக இருக்க எத்தனிக்கிறேன். நான் இதே முறையை தொடரலாமா? அல்லது மீண்டும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டுமா?

நீங்கள் சொல்லும் நிலை சாட்சி பாவம் என்று கொள்ள முடியாது, சாட்சி பாவம் என்பது மனதின் எண்ணங்களால் எதுவித சலனமும் ஏற்படாமல் மனதினை எம்மால் கட்டுப்படுத்த கூடிய நிலை. 
மனம் அலைபாய்கையில் மீண்டும் மந்திரத்தினை ஜெபித்து மனதை சரியான நோக்கத்தில் இயங்க வைக்க வேண்டும். மனம் இயற்கையில் பலவித சக்திகளை எண்ணங்கள் மூலம் ஈர்த்து செயல் புரிகிறது. மந்திரம் என்பது குறித்த ஒரு சக்தியில் அலை அதிர்வு (frequency), அதனை திரும்ப திரும்ப சொல்லுவதால் அது மனதுடன் பரிவுற்று மனதினை தெய்வ சக்தியினை ஈர்க்கும் தன்மையினை  உண்டு பண்ணுகிறது. ஆகவே வேறு எண்ணங்கள் வருகின்றது என்றால் சலித்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து சாதனையினை தொடரவும். 

மனதினை சரியான வழியில் இயங்க வைக்கும் சித்த சாதனை இந்த இணைப்பில் தந்துள்ளோம். இதனை கூறிய படி பயிற்சிக்கவும். 

இந்த சாதனையின் முடிவில் உங்களால் தரப்பட்ட பிரார்த்தனை தவிர்ந்து வேறு பிரார்த்தனை எதனையும் செய்யலாமா?

ஆம், நிச்சயமாக, ஆனால் உங்கள் குறைகளை புலம்பும் மறை நிலை வார்த்தைகள் இல்லாமல், அந்த குறைகள் தீரவேண்டிய நேர் நிலை வாசகங்களாக பிரார்த்திக்கவேண்டும். கல்வி, செல்வம், மகிழ்ச்சி, நல்லுறவு, சந்தோஷமான இல்லற வாழ்க்கை, ஆரோக்கயம் என்பவற்றை பிரார்த்திக்க வேண்டும், 
Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு