உடல் - மனம் - உயிர் இவற்றின் ஒன்றிணைவு ஒத்திசைவு ஆயுளைத் தரும் என்று முன்னைய உபதேசத்தில் பார்த்தோம். இதை எப்படிச் சாதிப்பது என்ற அறிவு ஆயுள்வேதம் என்று பார்த்தோம்.
இதனால் என்ன பிரயோசனம் - பலன்?
ஆயுள்வேதத்தின் பலன்/பிரயோசனம்தான் என்ன?
இந்த அறிவை/ஞானத்தைப் பெறுவதன் மூலம் ஒருவன் தனது உடல் ஆக்கப்பட்டிருக்கும் பஞ்சபூதங்கள் அவற்றிலிருந்து உருவான சப்த தாதுக்களினதும் சம நிலையைப் பேணமுடியும். இதுவே ஆயுள் வேதம் எனும் ஞானத்தைக் கற்பதால் நாம் பெறும் பிரயோசனம். இந்த சம நிலையைப் பேணுவதே ஆரோக்கியம்.
ஏன் நாம் உடல் தாதுக்களின் சம நிலையைச் சரியாகப் பேணவேண்டும்?
நாம் எமது வாழ்வின் இலட்சியங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் நாம் எமது வாழ்வில் அடைவதற்கு நீண்ட ஆயுள் அவசியமாகும். ஆகவே ஒருவன் தனது தாதுக்களின் சம நிலையைப் பேணி ஆரோக்கியத்தையும், அதன் மூலம் உடல், மனம், உயிரினை இணைத்து நீண்ட ஆயுளையும் பெற்று தனது வாழ்க்கையின் இலட்சியமான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் அனுபவித்து பரிபூரணனாக வேண்டு,
இதுவே நீண்ட ஆயுளைப் பெறவேண்டிய ஆயுள்வேதத்தை நாம் கற்பதன் நோக்கமாகும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.