குருவிடம் செல்லும்போது
சந்தேக மனதை தூக்கி வெளியே வைத்துவிட்டு தரப்பட்ட உபதேசத்தை பயிற்சிக்க வேண்டும்.
இது உங்களுடைய வழமையான கருத்துக்களுக்கு/ நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கலாம்,
என்றாலும் இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உங்களுக்குத் தெரிந்ததை
மாத்திரமோ, பிடித்ததை மாத்திரமோ குரு உங்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றால்
நீங்கள் வளர மாட்டீர்கள்.
ஸ்ரீ அம்ருதானந்த நாத
சரஸ்வதி
********************************************
ஸ்ரீ ஸக்தி சுமனனின்
குறிப்பு:
மேலே குறிப்பிட்டதை சரியாகப்
புரிந்துகொள்ள வேண்டும்; குருவிடம் கேள்வி கேட்கக் கூடாது என்றோ, சொல்வதை எல்லாம்
நம்பிக்கொண்டு பகுத்தறிவு இன்றி செயற்படுவதையோ இது குறிக்கவில்லை. முதலாவது
தரப்பட்ட பயிற்சியை முறைப்படி சுய அனுபவத்தைப் பெற வேண்டும். அதன் மேல்
கேள்விகளைக் கட்டமைத்து தனக்குள் கேள்வி கேட்டு அவதானிப்பதன் மூலம் பதில் பெற
வேண்டும்.
ஒரு பயணத்தின் வரைபடத்தை
வைத்துக்கொண்டு வழிகாட்டியை இந்த இடத்தில் என்ன இருக்கிறது? அந்த இடத்தில் என்ன
இருக்கிறது என்று கேள்வி கேட்டுத் துளைக்காமல், வழிகாட்டியிடம் வரைபடத்தைப்
பெற்றுக்கொண்டு சுயமாக, கூர்ந்து கவனித்துக்கொண்டு தானாக பயணத்தை பயிற்சிக்க
வேண்டும். அவதானிக்க வேண்டும். தன்னுடைய பயண அனுபவத்தைத் தொகுத்து ஏற்கனவே
பயணித்து பயணத்தை பூர்த்தி செய்துள்ள வழிகாட்டியான குருவிடம் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த
உபதேசத்தின் விளக்கம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.