நம்பிக்கையை வளர்த்தல் என்பது ஆற்றலை
ஒருங்கிணைக்கும் பொறிமுறை. பொதுவாக ஒரு குழுவாக இணைந்து எந்தத்துறையில்
பணியாற்றும்போதும் ஒருவர் மற்றவரை நம்பாமல் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத்
தொடங்கினால் அந்தக் குழு இலக்கினை நோக்கிச் செல்வதை விட்டு விட்டு ஒருவரை ஒருவர்
குறைகாணும் மனநிலையும், பேச்சும்தான் அதிகரிக்கும்.
இரண்டு
மாடுகள் பூட்டிய வண்டிலில் இரண்டு மாடும் ஒரே திசையில் சென்றால்தான் பயணம்
பூர்த்தியாகும். ஒரு மாடு நின்றுவிட்டால் மற்ற மாடு அந்த இடத்தைச் சுற்றித்தான்
வரமுடியும். சமூகமோ பலமாடுகள் பூட்டிய வண்டில். இன்று சமூகத்தில் மலிந்து கிடப்பது
நம்பிக்கையீனம். எதை உருப்படியாகச் செய்யலாம் என்ற விவாதமோ, திட்டமோ, மூலோபாயமோ
இன்றி வெறுமனே தமக்குள் சண்டையிட்டு ஆற்றலை இழக்கும் முட்டாள்தனம்.
முதலில்
சாத்தியமான அடையக்கூடிய இலக்கு எது என்பது பற்றிய தெளிவு,
இவற்றை அடைய முடியும் என்ற கூட்டுப்பொறுப்புடன் கூடிய தலைமைத்துவம், கூட்டுப்பொறுப்புடன் கூடிய தலைமைத்துவம் என்பது அனைவருமாக முடிவெடுக்கிறோம், வெற்றியோ, தோல்வியோ அனைவரும் ஏற்றுக்கொண்டு முன்னேறுவோம் என்ற மனப்பாங்குடன் கூடிய தலைமத்துவம். தலைவர் என்றவுடன் அவர் சர்வவல்லமை வாய்ந்த கடவுள் என்று துதிபாடும் மனநிலை அறவே நீங்க வேண்டும்.
ஒரு பாடசாலையில் அதிபருக்கும் ஆசிரியருக்கும் ஒரே இலக்கில் சிந்தனையும், செயற்பாடும் இல்லாவிட்டால் பலன் எதுவும் இல்லை.
அரசியல் தலைமைகள் ஒரே திசையில் ஒன்றுபடாமல், ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையீனம் விதைத்துக்கொண்டு சமூகத்திற்கு தலைமை தாங்குகிறோம் என்று நினைப்பது கோமாளித்தனம்.
எமக்குள்
தன்னம்பிக்கையும், எமது சமூகத்திற்கு இடையில் நம்பிக்கையையும், நாம் வாழும் இடத்தில்
பல்லின சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையையும் வளர்த்தல் என்பதை படிமுறையினூடான
சிந்தனை (step by step thinking process) உருவாக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.