மனிதனது முன்னேற்றத்திற்கு, உயர்விற்குத் தடை தனது அனுபவங்களைத் தொகுத்து அறிவாக்கி அவற்றைப் பார்த்துப் பூரிதம் அடைந்து தன்னை அதே நிலையில் தேங்கிய குட்டையாக்கிக் கொள்வது!
சுருங்கச் சொன்னால் நான் சாதித்துவிட்டேன் என்று நினைப்பது முன்னேற்றத்திற்குத் தடையானது! சாதித்தோம், அடைந்தோம் என்பது குறித்த காலத்தில் மாத்திரமே அடையப்பட்ட நிலை; காலம் மாறும் போது அது அற்றுப் போகிறது.
இப்படித்தான் பலரை நாம் பார்க்கிறோம்; குறிப்பாக எனது அனுபவத்தில் இளமானிப்பட்டம் படித்த பல மாணவர்கள் தாம் பெரிதாக வெட்டிப் பிடுங்கியதாகவும், தமக்கு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்குடன் வேலை தேடிவந்து அரசாங்கம், நிறுவனம் கொடுக்கும் என்று கனவு காணும் வலிமையற்றவர்களைத்தான் பார்க்கிறோம்.
இன்னுமொரு சாரார் எப்படியாவது
பென்ஷன், வாழ்க்கை settle ஆகிவிட வேண்டும்; வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும்
என்பது.
செயல் புரிவதில் சலிப்பு
இருக்கக்கூடாது; புதுப்புது அறிவினைத் தேட வேண்டும்! அவற்றின் மூலம் எம்மை
உற்சாகப்படுத்தி புதுப்புது நிலையை அறிவு, செல்வம், ஆற்றல், அதிகாரத்தில்
அடையவேண்டும். நாம் செய்தவற்றை check & Balance பார்ப்பது அடுத்த வருடம்
அதைவிட பல மடங்கு அதிகமாக செயல் புரிவதற்குரிய அடித்தளத்தினை உருவாக்குவதற்காக
இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் நாம் எமது அகத்திலும் புறத்திலும் புதிய நிலையை, முன்னைய ஆண்டை விட உயர்ந்த நிலையை அடைய சங்கல்பம் கொள்வோம்!
ஆகவே சென்ற வருடம் சாதித்தது, அடைந்தது என்ன என்பதை கணக்குப் பார்த்து சமப்படுத்தி பூச்சியமாக்கிவிட்டு இந்த வருடம் முன்னைய வருடத்தை விடப் பலமடங்கு எப்படி உழைப்பது, உயர்வை அடைவது என்பதைப் பற்றி இன்றிலிருந்து சிந்திப்போம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.