"எனது
விழிப்புணர்வே எண்ணத்திற்கு ஆற்றலைத் தருகிறது. எனது விழிப்புணர்வு பூதக்கண்ணாடி
போன்றது, அது எதில் ஏகாக்கிரம் கொள்கிறதோ அதைப் பெருக்குகிறது. அதை
வெளிப்படுத்துகிறது. ஆகவே நான் எனது விழிப்புணர்வை தீய எண்ணங்களுக்குத்
தரமாட்டேன்; அவை ஆடம்பரமாக ஒரு போதும் வாய்ப்பளிக்க மாட்டேன். ஏனென்றால் அவை
விழிப்புணர்வினால் போசிக்கப்படுகின்றது, விழிப்புணர்வின் மேல் வளர்கின்றன, அவை
எப்படி தன்னை குறிப்பிட்ட ஒன்றாக அடையாளப்படுத்தி வளர்கின்றனவோ அவற்றையே
ஆகர்ஷிக்கின்றது".
அம்ருதோப நிஷத்
ஸ்ரீ அம்ருதானந்த நாத
சரஸ்வதி
தேவிபுரம்
***************************************
ஸ்ரீ ஸக்தி சுமனனின்
குறிப்பு;
விழிப்புணர்வு என்பது எம்மை
ஒன்றுடன் அடையாளப்படுத்தி மனதை அதனுடன் தொடர்புடையவற்றுடன் ஈடுபடுத்தும் நிலை!
நான் என்னை யோக சாதகன் என்று விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்தினால் மனம் யோக
சாதனைக்குரிய எண்ணங்களில் கவனம் செலுத்தி அவற்றை விருத்தியாக்கி என்னை யோக
சாதனையில் ஈடுபடுத்தும்.
நான் என்னை ஒரு தேவி உபாசகன் என விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்தினால் என்னை தேவி உபாசனையில் ஈடுபடுத்தி தேவியின் ஆற்றலை ஆகர்ஷித்துத் தரும்.
நான் துன்பப்பட்டவன் என விழிப்புணர்வுடன் அடையாளப்படுதினால் மனம் துன்ப அலைகளை எழுப்பி அவற்றை ஆகர்ஷித்து துன்பமான வாழ்க்கையைத் தரும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.