இன்று நாம் அதிகாரம்,
அரசியல், உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இவை எல்லாம் கிடைத்தால் எமக்குள்
இருக்கும் மைய நீக்க விசைகளை நீக்கிவிட்டு ஒன்றுபட்டு ஒரு இலக்கிற்கு பாடுபடுவோமா
என்று எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கேட்டுக்கொள்ள வேண்டும்.
மைய நீக்க விசை என்பது ஒரு
குழுவாகச் சேர்ந்து செயற்படும்போது தமது தனிப்பட்ட அபிலாசைகளை, சுயநலங்களை
அடிப்படையாக வைத்துக் குழப்பி பிரிதல். நான் பெரிது, சரி என்று முரண்டு பிடித்தல்
என்பவை.
பொதுவான ஒரு கோயில் நிர்வாகமாக
இருந்தாலும் சரி, பாடசாலை பழைய மாணவர் சங்கமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக
இருந்தாலும் சரி, இறுதியாக என் வழி தனி வழி என்று கூட்டத்தைக் குழப்பிவிட்டு
வெளியே வருவது முதல் படி! பிறகு தலைமையிற்கு தெரிவு செய்யப்பட்டவரை வாழ்நாள் பூராக
எதிர்த்துக்கொண்டு அவர் எப்போது கவிழ்வார்! திண்ணை காலியாகும் நாம் ஏறி உட்காரலாம்
என்று போராடிக்கொண்டிருப்பது என்ற வகையிலேயே அதிகாரப் போட்டி நிகழ்கிறது,
இப்படி இல்லாமல் அனைவரையும்
புரிந்து, ஒன்றிணைத்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இலக்கினை
நிர்ணயிக்கத்தெரிந்தவர்களே உண்மையான தலைமைப் பண்பு கொண்டவர்கள். இப்படி இல்லாதவர்களது
ஆக்கிரோஷமான மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களிலேயே நாம்
கவர்ச்சியுறுகிறோம். இப்படி சினிமாத்தனமான தலைமைத்துவம் ஒரு போதும் சமூகத்தை நல்ல
நிலைக்கு கொண்டு செல்வதில்லை.
ஜனநாயக அரசியலின் அடிப்படை
குடித்தொகையின் எண்ணிக்கை - வாக்கு எண்ணிக்கை; ஜனநாயக அரசியலில் அதிகாரத்தைப் பெற
தன் சமூகம் சார்ந்த குடித்தொகையை ஒரு மையத்தில் குவிக்கும் தலைமைத்துவ ஆற்றல்
வேண்டும். அதைவிடுத்து ஒன்றுபடாமல் ஒவ்வொன்றாகப் பிளந்தால் ஆற்றல் சிதறும்.
ஒரு குழு அதிகாரத்தை அடைய
முடியாமல் இருப்பதற்குக் காரணம் தமக்குள் இருக்கும் மைய நீக்க விசைகளை நீக்கி பொது
இலக்கை நிர்ணயித்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய மனம் - எண்ண ஓட்டம் -
thought process - இல்லை என்பதாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.