எந்தவொரு
மந்திரத்தினதும் ஆற்றல் வாழ்க்கையை நடாத்துவதற்குரிய அதன் (சூக்ஷ்ம)
பகுதியிலிருந்து வருகிறது.
(எனவே) மந்திரங்கள் வெறுமனே
இயந்திர கதியில் ஜெபிப்பதற்குரியது அல்ல. மந்திர சாதனையின் எண்ணக்கரு அதை
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் உணர்ந்து அனுபவிப்பதற்கானது. உண்மையான சாதனை
என்பது அந்த மந்திரத்தின் சத்தியத்தை அனைத்து நேரங்களிலும் உணர்ந்து கொண்டு
செயலாற்றுவது.
ஸ்ரீ அம்ருதானந்த நாத
சரஸ்வதி
தேவிபுரம்
ஸ்ரீ ஸக்தி சுமனனின்
சாதனை விளக்கம்
*****************************
மேற்கூறிய உபதேசத்தை
விளங்கிக்கொள்ள ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை உதாரணம் எடுத்துக்கொண்டால், ஸ்ரீ காயத்ரி
மந்திரத்தின் ஆற்றல் ஸவிதா என்ற பேரொளி மண்டலத்தில் இருந்து சூரியன் மூலம்
பூமிக்கு வருகை தருகிறது. இந்த ஆற்றல் எமது புத்தியைத் தூண்டுகிறது.
ஆகவே ஒருவன் காயத்ரி ஜெபத்தின்
போதும், தினசரி சாதனையின் போதும் அந்தப் புத்தியைத் தூண்டும் பேரோளி எம்முள்ளும்
புறமும் நிறைந்து எம்மை வழிகாட்டும் பாவனையை உணர வேண்டும். இப்படி தனக்குள்ளும்,
வெளியிலும் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளி நிறைவதை உணர்ந்து காயத்ரி சாதனை
செய்பவன் தனது வாழ்க்கையை பிரபஞ்ச ஒழுங்கான ரிதம் பிரக்ஞைக்கு ஒத்திசைவாக்குவதால்
பேரறிவினை அடைகிறான். காயத்ரி சாதகன் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலிலும் தான்
அந்தப் புத்தியைத் தூண்டும் பேரொளியால் வழி நடாத்தப்படுகிறேன் என்ற உணர்வுடன்
செயற்படுவது காயத்ரி மந்திர சித்திக்கு வழி வகுக்கும்.
எமது சாதனை உபதேசங்களில் காயத்ரி சித்த சாதனை என்ற பகுதி இதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு மந்திர சாதனையும் எமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியை ஒழுங்குபடுத்தும் சூக்ஷ்ம சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அவற்றைச் சாதனை செய்பவர்கள் இதை உணர்ந்து சாதனை செய்ய வேண்டும்.