பலருக்கு ஆன்மீகம் கற்கிறோம், யோகம் பழகுகிறோம் என்றவுடன் தாம் ஏற்றிருக்கும் கடமைகளிலிருந்து தப்பி எங்கேயோ வானுலகம் போகப் போகிறோம் என்ற எண்ணம் தான் வருகிறது!
இறைவனை அறிதல், பரம்பொருளை அடைதல் என்பவையே வாழ்க்கையின் இறுதி இலட்சியம்! மிக உயர்ந்த செயல் என்றால்,
கற்கும் கல்வி
செய்யும் தொழில்
வாழும் குடும்பம்
எமது உடல்
எமது மனம்
ஆகியவற்றை செம்மைப்படுத்தாமல் கண்களை மூடி தியானம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில்தான் இருக்கிறார்கள் பலர்!
முதலில் மனதைச் செம்மைப்படுத்தி,
பின்னர் உடலைப் பலப்படுத்தி,
அதன் வழி,
நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளைச் செய்து கொண்டு, எமக்கு அமைந்த தொழில், குடும்பத்தை சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வைத்துக் கொண்டு, இவை எல்லாவற்றிற்கும் மேலே ஒரு உண்மை, சக்தி இருக்கிறது அதை அறிய வேண்டும் என்ற முயற்சியுடன் இருப்பவனுக்கு உயர்ந்த வாழ்க்கைக்குரிய விசா கிடைக்கிறது!
அப்படியல்லாமல் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று தப்பி விசா எடுத்து ஓடினால் ஆன்மீக வாழ்க்கையும் அதேபோல் தான் துன்பமயமாகத் தான் இருக்கும்!
ஆகவே யோகம் பயில்கிறோம், ஆன்மீக வாழ்க்கை வாழ்கிறோம் என்று அர்த்தமற்ற வெளிவேஷமின்றி அகத்தை மேம்படப் பாடுபடவேண்டும்! கர்மத்தால் அமைந்த வாழ்க்கையை செம்மையுற வாழவேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.