நட்சத்திரங்கள் வானத்தில் இருக்கும், பூமிக்கு நுண்மையான ஒளியைத் தரும் பொருட்கள். பூமியை உருவாக்குவதற்கான மூலசக்திகள் என மறையியலில் கருதப்படுகிறது. சூரியன் எமது மூல பிராண சக்தியாக இயங்கும் போது இவை அதிசூக்ஷ்ம அல்லது காரண பிராண சக்தியாக இயங்குகின்றது. அதாவது இவற்றிலிருந்து வரும் நுண்மையான ஒளி பூமியைச் சூழ உள்ள நவக்கிரகங்களினால் கூட்டிக் குறைத்து பூமிக்குப் பாய்ச்சப்படுவதால் பூமியும் பூமியில் உள்ள உயிரினங்களும் அந்த ஒளியைப் பெற்று தமது ஆற்றல்களை வளர்த்துக்கொள்வது என்பதுதான் ஜோதிடத்தின் மறையியல் (occult) உண்மை. இந்த உண்மையைக் கணிக்கும் விரிவான கலை ஜோதிடமாக விரிந்தது.
இந்தப்பதிவுத் தொடரில் நட்சத்திரங்கள் பற்றிய மறையியல் உண்மைகளைத் தொகுத்துப் பார்ப்போம்.
ரேவதி
********
இது இருபத்தியேழாவது நக்ஷத்திரமாக கணிக்கப்படுகிறது. இதன் பொருள் பிரகாச ஒளி என்பது. இந்த நக்ஷத்திர சக்தி அனைத்தையும் போஷிக்கும் ஆற்றல் உள்ளது. வளமைப்படுத்தும் ஒளி! இந்த நக்ஷத்திரத்தின் அதிதேவதை பூஷம் எனப்படும் பன்னிரு ஆதித்தியர்களில் ஒருவர். இந்த ஒளி மற்றவர்களுக்கு வழிகாட்டவும், சூக்ஷ்ம உலகங்களுக்குச் செல்லும் வழிகாட்டியுமாகும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் மோக்ஷம் அல்லது வீடுபேற்றிற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது.
உத்தரட்டாதி
************
உத்தரட்டாதி (உத்தரம்) என்றால் மேன்மையான ஆதி ஒளி என்று சொல்லலாம். இது பூமிக்குள்ளும், மனித உடலிற்குள்ளும் மறைந்திருக்கும் நாகசக்தியையும் வளத்தையும், ஆதார சக்தியையும் குறிக்கும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் காமம் அல்லது இன்பத்திற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது.
பூரட்டாதி
**********
இதன் பொருள் நன்கு ஆசீர்வதிக்கப்பட்ட என்பதாகும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி மனதினை மேம்படுத்தும் தத்துவத்திற்கான ஆற்றலைத் தருகிறது. இந்த நக்ஷத்திர ஆற்றலின் மூலம் ஒருவன் உயர்ந்த தத்துவங்களை மனதில் ஆராயும் தன்மையைப் பெறுகிறான். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் அர்த்தம் அல்லது பொருளிற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.