மனிதர்களுக்கு ஸ்தூல, சூக்ஷ்ம, காரணம் என்ற மூன்று வகைச் சரீரம் இருக்கிறது.
இறப்பு என்பது ஸ்தூலத்தை விட்டு விடுவது; அப்படி ஸ்தூல உடல் விடும் போது வாழ்ந்த காலத்தில் ஏற்படுத்திய பதிவுகள் அனைத்தும் பதிந்து அவை அந்த ஆன்மாவை பூவுலகுடனேயே சுற்றிக் கொண்டிருக்கச் செய்யும்; இந்த நிலையில் இதை வாசனா சரீரம் என்பார்கள்,
இறந்த பின்னர் கர்மங்கள் எதையும் செய்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாததால் அந்த ஆன்மாவிற்கு தனது மனோ சரீரத்தினால் தொடர்பு கொள்ளப்படக் கூடிய உறவுகளின் உதவி தேவை! இந்த உதவியைத் தான் பித்ரு தர்ப்பணம் என்கிறோம்! தர்ப்பணம் என்றால் திருப்தி என்று அர்த்தம்! இப்படி வாசனை சரீரத்தில் அலைந்து கொண்டிருக்கும் எமது அன்புக்குரியவர்களை அந்த வாசனைகள் நீங்கி திருப்தியுற்று அடுத்த நிலைக்கு செல்வதற்கான பொறிமுறை தான் தர்ப்பணம்!
அவர்கள் தமது வாசனைகள் எனப்படும் நிறைவேறாத இச்சைகள், குழப்பங்கள் இருக்கும் போது அவர்களுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ளக் கூடிய உறவினர்களின் மனதில் தமது தேவைகளை உணர்ச்சிகளாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது பூவுலகில் வாழ்பவர்களுக்கு மனத் துன்பங்கள், குழப்பங்கள் வரலாம்!
ஆகவே வாசனை சரீரத்தில் சிக்கியிருக்கும் ஆன்மாக்களின் துன்பத்தை தர்ப்பணத்தின் மூலம் நீக்குவதால் அவர்கள் திருப்தியுற்று வாழ்த்துவதால் எமக்கு இன்பமான வாழ்க்கை கிடைக்கும் என்பது பித்ரு தர்ப்பணத்தின் அடிப்படைத் தத்துவம்!
அனைவருக்கும் அவரவர் பித்ருக்கள் மோக்ஷ நிலை பெற்று திருப்தியுற்று நல்வாழ்க்கை கிடைக்க இந்த நாளில் பிரார்த்தனைகள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.