மனிதனை நெறிப்படுத்த வந்த தத்துவங்கள் மதமாகி குழம்பியது மனித மனத்தின் ஆணவத்தால்!
எதிரி வெளியே என்று ஒரு மயக்கத்திலேயே உள்ளே தாழ்ந்து போகிறோம்! எமது சிந்தனைக் குறைபாடுகளால் தான் நாம் துன்புறுகிறோம் என்பதை எப்போதும் உணர்வதில்லை!
ஒரு நாள் எனக்கு முதுமை வரும், அது தவிர்க்க முடியாது என்பது அறிந்தால் இளமையாக இருக்கிறோம் என்று எல்லோரையும் எள்ளி நகையாடும் ஆணவம் கட்டுப்படும்!
ஒரு நாள் எனக்கும் நோய் வரும், அது தவிர்க்க முடியாது என்று அறிந்துகொண்டால் ஆரோக்கியமான உடலை வைத்துக் கொண்டு காட்டும் திமிர்த்தனம் வராது!
ஒரு நாள் எனக்கும் மரணம் வரும், அது தவிர்க்க முடியாது என்பது ஞாபகம் இருந்தால் இறக்காமல் இருக்கப் போகிறோம் என்ற மாயையில் சொத்துச் சேர்ப்பது, தனது என்று கட்டுப்படுத்தி வைக்கும் மாயை ஆணவம் குறையும்!
நான் பற்றிக் கொண்டிருக்கும் எல்லாம் ஒரு நாள் என்னை விட்டுப் போகும், அப்படிப் போகும் போது அது தவிர்க்க முடியாது என்பதை அறிந்தால் எல்லாவற்றிற்கும் புலம்பிக் கொண்டிருக்க மாட்டோம்.
நான் இப்போதோ, எப்போதோ செயலின் விளைவு தான் எனக்கு நடப்பவை என்ற கர்ம விதி புரிந்தால் எல்லாவற்றிற்கும் மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்!
மதம் வளர்த்தல் என்பது மற்றவர்களைத் தூற்றுதல் என்ற ஆணவச் செய்கையாக இருக்கக் கூடாது; தாம் பின்பற்றும் வழியின் ஆழமான தத்துவங்களை தாமும் பயிற்சித்து மற்றவர்களும் அந்த நிலையடைய வேண்டும் என்ற பரந்த மனதுடன் செயல்படும் உயர்ந்த பண்பாக இருக்க வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.