குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, September 30, 2020

சிலந்தி - எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?

எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்ற கூற்று சிலந்தி - விவசாயி உறவிற்கு பொருத்தமான பழமொழி! 

சிலந்திகள் பூச்சிகள் வர்க்கத்திற்குள் இருக்கும் விவசாயிகளின் நண்பன்; பூச்சிகளுக்கு ஒரு கோடாலிக் காம்பு;   

ஏனென்றால் விவசாயிகளுக்கு பிரச்சனை கொடுக்கும் சைவ உண்ணிப் பூச்சிகளைப் பிடித்து உண்பதுதான் இவர்களின் வேலை! 

சராசரியாக ஒரு சிலந்தி வருடத்திற்கு 2000 பூச்சிகளை உண்பதாகக் கணித்துள்ளார்கள். நுளம்புகளையும் பிடித்து உண்ணும். 

எதிரிக்கு எதிரி நண்பன் என்று சிலந்திகளுடன் உறவாடச்சென்றால் விஷத்தைப் பாய்ச்சி மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 

பூச்சிகளைக் கொல்கிறோம் என்று தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் இந்த நன்மைதரும் சிலந்திகளும் அழிந்துவிடுகின்றது. 

இயற்கை விவசாய தத்துவ ஞானி 

மசனோபு புக்குவோக்கா தனது ஒற்றைவைக்கோல் புரட்சி நூலில் இயற்கை விவசாய நிலம் என்பதற்கான குறிகாட்டியாக சிலந்திவலைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார். ஒரு விவசாயக்காணிக்குள் சிலந்திகள் இருக்கிறது என்றால் அங்கு இரசாயனம் எதுவும் பாவிக்கப்படவில்லை என்று அர்த்தம். 

இது மனிதனின் உணவுப்பாகமான பழங்கள், தண்டுகளை உண்டு பாதிப்பை ஏற்படுத்தும் aphids, grasshoppers, leafhoppers, beetles, caterpillars ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. 

சிலந்திகளைப் படிப்பது எப்படி எமக்கு ஆபத்து இல்லாமல் தோட்டத்திற்குள் இவற்றின் குடித்தொகையை வைத்திருப்பதும் இயற்கை விவசாயம் செய்ய நினைப்பவர்களுக்கு அவசியமானது! 

கீழே இருக்கும் சிலந்தியும் வலையும் கண்டியில் இருக்கும் ஒரு தோட்டத்தினூடு நடக்கும்போது கண்களில் பட்டது! அருகே தனது இரையைக் - பூச்சியொன்றைக் கொன்று வைத்திருக்கிறது.


Tuesday, September 29, 2020

நக்ஷத்திரங்களின் மறையியல் ஆற்றல் - 02

இன்று ஜோதிடத்தில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இன்ன குணம் என்று பலன் சொல்லி மகிழ்வதைக் காண்கிறோம். ஆனால் அப்படியென்றால் எல்லோரும் அப்படிப்பட்ட தெய்வீக குணங்களுடன் இருந்தால் உலகமே துன்பமற்ற இன்பமான நிலையில் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை? ஏன்?
மனிதன் மனம் என்ற கருவியுடன் தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும், விலக்கும் பூரண ஆன்ம சுதந்திரத்துடன் படைக்கப்பட்டுள்ளான். ஆகவே அவன் பிறக்கும் போது அவன் பிறந்த இடத்தில் இருக்கும் சந்திரன் நிற்கும் நக்ஷத்திரத்தின் ஆற்றலுடன் பிறந்தாலும் பின்னர் அவன் தனது மனதினைப் பழக்கப்படுத்தும் இயல்பிற்கு ஏற்பவே அந்த நக்ஷத்திரத்தின் ஆற்றல் அவனில் வளர்ந்து பலன் தரும். 
உதாரணமாக ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் மோக்ஷத்தினை அடையக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாகவும், பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருப்பார்கள் என்றால் ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களிடம்  இந்த ஆற்றல் விதையாக இருக்கிறது என்று தான் அர்த்தம்; அதை வளர்த்தால் அந்த நிலை அடையலாம். ஆகவே முயற்சி எதுவும் இல்லாமல் வெறுமனே ஜோதிடத்தை நம்புபவர்கள் சோம்பேறிகளாகவும், மூட நம்பிக்கையாளராகவும்தான் இருப்பார்கள். 
ஜோதிடத்தின் மறையியல் உண்மைகள் மனத் தத்துவத்துடன் சேர்ந்து புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். 
இவற்றை எமது மானச யோக வித்யா கற்கை நெறியில் மனத்தத்துவம் பாடங்களில் படித்தறியலாம். கற்கை விபரங்கள் தேவைப்படுபவர்கள் பதிவு செய்ய:

நட்சத்திரங்களின் மறையியல் இரகசியம் - 01

நட்சத்திரங்கள் வானத்தில் இருக்கும், பூமிக்கு நுண்மையான ஒளியைத் தரும் பொருட்கள். பூமியை உருவாக்குவதற்கான மூலசக்திகள் என மறையியலில் கருதப்படுகிறது. சூரியன் எமது மூல பிராண சக்தியாக இயங்கும் போது இவை அதிசூக்ஷ்ம அல்லது காரண பிராண சக்தியாக இயங்குகின்றது. அதாவது இவற்றிலிருந்து வரும் நுண்மையான ஒளி பூமியைச் சூழ உள்ள நவக்கிரகங்களினால் கூட்டிக் குறைத்து பூமிக்குப் பாய்ச்சப்படுவதால் பூமியும் பூமியில் உள்ள உயிரினங்களும் அந்த ஒளியைப் பெற்று தமது ஆற்றல்களை வளர்த்துக்கொள்வது என்பதுதான் ஜோதிடத்தின் மறையியல் (occult) உண்மை. இந்த உண்மையைக் கணிக்கும் விரிவான கலை ஜோதிடமாக விரிந்தது. 

இந்தப்பதிவுத் தொடரில் நட்சத்திரங்கள் பற்றிய மறையியல் உண்மைகளைத் தொகுத்துப் பார்ப்போம். 

ரேவதி

********

இது இருபத்தியேழாவது நக்ஷத்திரமாக கணிக்கப்படுகிறது. இதன் பொருள் பிரகாச ஒளி என்பது. இந்த நக்ஷத்திர சக்தி அனைத்தையும் போஷிக்கும் ஆற்றல் உள்ளது. வளமைப்படுத்தும் ஒளி! இந்த நக்ஷத்திரத்தின் அதிதேவதை பூஷம் எனப்படும் பன்னிரு ஆதித்தியர்களில் ஒருவர். இந்த ஒளி மற்றவர்களுக்கு வழிகாட்டவும், சூக்ஷ்ம உலகங்களுக்குச் செல்லும் வழிகாட்டியுமாகும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் மோக்ஷம் அல்லது வீடுபேற்றிற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது.

உத்தரட்டாதி

************

உத்தரட்டாதி (உத்தரம்) என்றால் மேன்மையான ஆதி ஒளி என்று சொல்லலாம். இது பூமிக்குள்ளும், மனித உடலிற்குள்ளும் மறைந்திருக்கும் நாகசக்தியையும் வளத்தையும், ஆதார சக்தியையும் குறிக்கும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் காமம் அல்லது இன்பத்திற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது. 

பூரட்டாதி

**********

இதன் பொருள் நன்கு ஆசீர்வதிக்கப்பட்ட என்பதாகும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி மனதினை மேம்படுத்தும் தத்துவத்திற்கான ஆற்றலைத் தருகிறது. இந்த நக்ஷத்திர ஆற்றலின் மூலம் ஒருவன் உயர்ந்த தத்துவங்களை மனதில் ஆராயும் தன்மையைப் பெறுகிறான். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் அர்த்தம் அல்லது பொருளிற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது.


Sunday, September 27, 2020

தலைப்பு இல்லை

மனிதன் சிந்திக்கும் விலங்கு;

இன்று புத்தாக்கம் (innovation) பற்றி அதிகம் உரையாடுகிறோம். புத்தாக்கம் மனதின் ஒரு ஆற்றல்! அதற்கு மனித மனம் சிந்திக்கப் பழகவேண்டும். 

எப்படிச் சிந்திப்பது என்பதற்கு சிறு படிகளை வரைபுபடுத்தியுள்ளோம். இந்த முறையை நீங்கள் எந்தப் பிரச்சனைக்கு மாதிரியாக (model) பயன்படுத்த முடியும்!

மாணவர்கள் தமது பரீட்சை வினாவிற்கு எப்படி பதில் எழுதுவது என்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம்;

அன்றாடம் எமது நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்! 

முதலில் நாம் அணுக வேண்டிய பிரச்சனையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். புரிந்துக் கொள்ள அதைப் பற்றிய கண், காது போன்ற புலன்களின் அவதானம் மிக அவசியமானது! 

பிறகு புரிந்துக் கொண்டதை உங்கள் மனதிற்குப் புரியும் வண்ணம் எழுத்தில் வரையறுத்துக் கொள்ள வேண்டும். 

அப்படி வரையறுத்துக் கொண்ட ஒவ்வொன்றிற்கும் தீர்வு என்ன என்பதைப் எழுதிக்கொள்ள வேண்டும். 

பிறகு தீர்வுகளை ஒவ்வொன்றையும் இணைத்து அதன் விளைவுகளைச் சிந்தித்து மாதிரியுருப்படுத்த வேண்டும். 

இப்படி சிந்தித்து மனதில் உறுதி ஏற்பட்ட பிறகு அந்தத் தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.


Saturday, September 26, 2020

தலைப்பு இல்லை

"Come and meet me once" என்பது தான் குருஜியிடமிருந்து வந்த செய்தி! முதல் முதலாக இந்தியா வந்ததும் குருஜியைப் பார்க்கத்தான்!

சென்னையிலிருந்து கல்கத்தா ஹௌரா எக்ஸ்பிரஸில் ஏறி மூன்றாம் வகுப்பில் பல்வேறு மொழிகள் பேசும் பலரைப் பார்த்து ரசித்துக் கொண்டு கிருஷ்ணா நதியெல்லாம் தாண்டி, முப்பது மணி நேரம் பயணம் செய்து மொழி தெரியாத தெலுங்கு தேசம் சென்றேன்! 

மலைகள் நிறைந்த விசாகப்பட்டணம்; பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் பல்லாண்டு பழகிய ஒருவரைச் சந்திக்கும் உணர்வு! 

உபதேசம் தந்தார்; சாதனை செய் என்றார்! சித்தர் நூற்களை ஆராய்ந்து உண்மைகளை வெளிக் கொண்டு வரலாம் என்றார்; தேவி உன்னுள் இருப்பாள்! உன்னை நாடி வருபவர்களுக்கு வழிகாட்டு என்றார்! வழியும் சொல்லித் தந்தார்! ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன் எப்படி கற்பது என்றேன்; குருபாதுகை இருக்கிறது தருகிறேன் என்றார்! நவீன தொழில்நுட்பம் இருக்கிறது, மின்னஞ்சலில் எழுது; வருடம் ஒருமுறை வந்து செல்லலாம் என்றார்! 

வாழ்க்கை மாறியது! சுமனனாக இருந்த என்னுடன் "ஸ்ரீ "யும் "ஸக்தி" யும் சேர்ந்துக் கொள்ள ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆனேன்! 

இன்று குருஜியின் ஆங்கிலத் திகதி பிறந்த நாள்!


Thursday, September 24, 2020

தலைப்பு இல்லை

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை தலாயிலாமா இப்படி விளக்கிச் சொல்கிறார்; ஒருவன் தனது சீலத்தை, ஒழுக்கத்தை மூன்று நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டும்;
1. செயலில்
2. வார்த்தைகளில்
3. மனதில் தோன்றும் எண்ணங்களில்
இந்த மூன்று நிலைகளில் எம்மை நாம் கவனித்து ஆராயவேண்டும். வார்த்தைகளிலும், செயலிலும் வரும் முன்னர் நாம் செய்யும் செயல்கள் முதலில் எண்ணங்களாகத் தான் தோற்றம் பெறும்; அப்படி எண்ணங்களாகத் தோற்றம் பெறும்போது அவற்றைச் சரியாக கவனித்து அவற்றை வார்த்தைகளாகவோ, செயலாகவோ தோற்றம் பெறுவதை தடை செய்ய முடியும். இது பயிற்சியால் சாத்தியமாகும்!
எண்ணங்களைக் கவனித்தால், அந்த எண்ணங்கள் செயலாகுவதற்கும், வார்த்தைகளாவதற்கும் முதல் அதை தடை செய்ய முடியும்; குறித்த எண்ணம் உருவாகும் போது அது செயலாகினால் என்ன விளைவினை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க அந்த எண்ணம் எம்மை துன்பத்திற்குள் செலுத்தும் என்பதைப் புரிந்துக் கொண்டு அதைத் தடைப்படுத்தி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 
உதாரணமாக ஒருவர் மேல் எரிச்சல் அதிகமாகி, கோபமாகி குறித்த நபரிற்கு பாடம் படிப்பிக்கிறோம் என்ற நினைப்பில் எமது மனதில் உள்ள ஆத்திரங்கள், வக்கிரங்கள் எல்லாவற்றையும் கொட்டி கடிதம் எழுதியோ, மெசேஜ் அனுப்பிவிட அது சட்டப்படி பெரும் குற்றமாகி தண்டணை அனுபவிக்க வேண்டி வந்து விடலாம்! 
இது மனதில் எரிச்சலாக எழும்போதே அவதானிக்கும் ஆற்றலை பயிற்சியினால் உருவாக்கிக் கொண்டால் அப்படிச் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள், தீமைகளை சிந்தித்து மனதினை நல்லெண்ணங்களினால் நிரப்பினால் நாம் தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து தப்புவோம்! 
எமது எண்ணங்களைக் கவனித்துப் பழகுவது அனைவரும் வாழ்க்கையில் பயில வேண்டிய அதிமுக்கிய பயிற்சி!

தலைப்பு இல்லை

இன்று சாமி உடலை விட்டுப் பிரிந்த நாள்!

A/L பரீட்சையின் கடைசி நாள் ஆங்கிலப் பாடம்; காலையிலேயே சாமியிடம் போவது என்று முடிவெடுத்து அம்மாவிடம் சொல்லிவிட்டு, வினாத்தாளை இரண்டு மணித்தியாலத்தில் செய்து முடித்து விட்டு Ink அடித்து விளையாடும் விளையாட்டெல்லாம் விட்டுவிட்டு நேரே பஸ் ஏறி ஆசிரமம் சென்றாயிற்று! 

சாமியும் "வந்திட்டிங்களாப்பா?" என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்! ஆசிரமத்திற்கு ஞானம் பெறவேண்டும், உயர்ந்த சாதனைகள் கற்க வேண்டும் என்ற தீரா ஆவலுடன் சென்ற எனக்கு சாமியின் உடுப்பு மடிக்க வேண்டும், கோயில் கூட்ட வேண்டும் என்று குரு பணி தொடங்கி கடைசியாக சாமியின் எழுத்து வேலைகளும், புத்தகம் வெளியிடும் பணியாகவும், அவருடன் கூடவே வாழும் நிலையும் உண்டாகிற்று! 

ஆசிரமத்தில் இருக்கும் காலத்தில் பெற்ற அனுபவம் பெரிது! நாடாளும் பிரதமர் தொடக்கம், சமூகத்தின் பொருளாதார அடிமட்டத்தில் உள்ளவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானவர்களின் மனநிலையைப் படிக்கும் அனுபவத்தை சாமி புரியவைத்தார்! 

சாப்பிட்டிங்களாப்பா என்று எல்லோரையும் கேட்பார்; அவர் சாப்பிட முதல் எங்களுக்கு தனது கையால் சாப்பாடு தந்துவிட்டுத்தான் சாப்பிட உட்காருவார்! 

கீழேயுள்ள படம் மட்டக்களப்பு நாவலடிக் கடற்கரையில் நானும் சாமியும்! மற்றச் சிறுவர்கள் இருவரும்!


Wednesday, September 23, 2020

தலைப்பு இல்லை

தந்திரா என்றால் விரிவடைதல் என்றும் விரிவடைதலுக்கான உத்தி என்றும் பொருள் கொள்ளலாம்! எமது உணர்வை (consciousness) இனை விரிவடையச் செய்து பெறும் அனுபவம் ஞானமாகி விழிப்புணர்வு அடையும் வழி என்று சொல்லலாம்! 
இந்த வழிகள் அனைத்தும் சிவன் சக்திக்குக் கூறியதாக தந்திரங்களாகக் காணப்படுகிறது. 
ஓஷோவின் தந்திரா இரகசியங்கள் (Secret of Secret என்ற ஆங்கில உரையில் மொழி பெயர்ப்பு) என்ற விஞ்ஞான பைரவ தந்திரத்தின் உரை பதினேழு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த போது தமிழில் மாத்திரமே வாசிப்பு அதிகமாக இருந்ததால் ஆவலுடன் வாசிக்கத் தொடங்கி பின்பு மொழிபெயர்ப்பு வரத்தாமதமாகும் போதும் ஒவ்வொன்றாக வாங்கி வாசித்துவிட்டு தந்திரமெல்லாம் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு ஆகாது; குரு தொட்டுக்காட்டவேண்டும் என்ற உண்மை உறைக்க ஓஷோவை வாசிக்கும் கிளர்ச்சி நீண்ட காலத்திற்கு முன்னர் தேவையில்லாமல் போனது! 
எனினும் புத்தகக் காதலனான எனக்கு கடைசிப்பாகம் 2018 இல் வெளியிட்ட பொழுதே சுடச்சுட கைகளில் சென்னையில் இறங்கிய போதே கிடைத்தது! 
இன்று அங்கங்கே சிதறிக்கிடந்தவற்றை ஒன்றாக்கி அடுக்கியாயிற்று!

தலைப்பு இல்லை

சந்தோஷத்திற்கு ஐந்து சூத்திரங்கள்

1) நல்லெண்ணங்களைக் கொண்ட மனப்பாங்கினை உங்களில் கட்டியெழுப்புங்கள்; உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

2) ஒரு நாளில் ஐந்தரை மணி நேரம் மட்டுமே வேலை செய்யுங்கள்.

3) சமூகத்துடன் இணைந்து வாழுங்கள்; உயிர்ப்புடன் இருங்கள்; மனிதர்களை நேசியுங்கள் {உங்களைத் திருப்பி நேசிக்க முடியாத வாகனம், சொத்துக்கள், உடைகள் போன்ற உங்களுக்குக் கடன் சுமையைத் தருபவற்றை நேசிக்காதீர்கள்) குடும்பத்துடன், நண்பர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள்; வாராந்தம் இன்பமாக இருக்கக் கூடிய ஒன்று கூடலைச் செய்யுங்கள்.

4) தொண்டாற்றுங்கள்; உங்கள் உண்மை ஸ்வரூபம் கருணையும் தாராள மனமுமே; தம்மிடம் இருப்பவற்றைப் பகிர்ந்து கொள்வதும், மற்றவர்களுக்குத் தருவதால் இன்பமடையும் பண்பைச் சிறுவயதிலிருந்து வளர்த்தெடுங்கள்; சிறு தியாகம் கூட அதிக இன்பத்தினைத் தரும்

5) எப்போதும் சிரியுங்கள்; உடல் போலிச் சிரிப்பு, உண்மைச் சிரிப்பு என்று வேறுபடுத்தாது; போலியாகச் சிரிக்கத் தொடங்கினாலும் உண்மையாகச் சிரிக்க வைக்கும். 

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம் 

{Dr. பிரகலாத சாஸ்திரிகள் - இயற்பியல் அணுவிஞ்ஞானி}

Translated from William Thomas - Thank you


Tuesday, September 22, 2020

தலைப்பு இல்லை

இன்று மனிதர்கள் தமது உணர்ச்சிகளையும் எண்ணத்தையும் சரியாக்கத் தெரியாமல் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கிறார்கள்.

பலருக்கு கருணை என்றால் மற்றவர்கள் மீது என்ற போக்கிற்குச் சிந்தித்து தம்மீது கருணை அற்று துன்பமான வாழ்க்கை வாழ்வார்கள். 

தலாயிலாமாவுடனான உரையாடல் தொகுப்பு நூலாகிய destructive emotions என்ற நூலில் இதைப் பற்றி உரையாடுகிறார்; அவை வருமாறு,

எம்மைக் கொல்லும் மூன்று உணர்ச்சிகள்

1) ஒன்றின் மீதான பேரவா

2) கோபம்

3) யதார்த்தத்திற்கு மாறான மனதின் கற்பனை

எமது மனம் அழிவுச் சிந்தனை நிலையில் (destructive state of Mind) இருக்கிறதா என்பதை கீழ்வரும் குணங்களைக் கொண்டு அறியலாம்:

- தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம்

- அதீத சுய நம்பிக்கை

- தீய எண்ணங்களை, சிந்தனைகளைக் கொண்டிருத்தல்

- பொறாமையும் எரிச்சலும்

- எம்மீதும் மற்றவர்கள் மீதும் கருணையற்று இருத்தல்

- மற்றவர்களுடன் இணைந்து உறவாடமுடியாமல் இருத்தல்

எமது மனம் ஆக்கப்பூர்வ நிலையில் இருக்கிறது என்பதை அறிய;

1) சுய மரியாதை

2) தன்னம்பிக்கை

3) செயற்பாடுகள் அனைத்தும் தர்மத்தின் வழி இருக்க வேண்டும் என்ற எண்ணம்

4) தன்மீதும் பிறர் மீதும் கருணை

5) நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம்

6) தாராள மனப்பான்மை

7) உண்மையைப் பார்த்தல்

 எது சரி, எது பிழை என்ற உறுதியான எண்ணம் இருத்தல்

9) அன்புணர்ச்சி

10) நட்புணர்வு


Saturday, September 19, 2020

தலைப்பு இல்லை

அண்மையில் நண்பர் ஒருவர் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்டிருந்தார்;
பலரும் வாழ்க்கையில் பணம், பதவி என்பவற்றை வெற்றியாகக் கருதி பெருமளவு அடைந்தாலும் மனம் மகிழ்ச்சியடையாமலும், உடல் ஆரோக்கியம் இழந்தும் இறுதியில் துன்பத்தை அடைவார்கள்; 
ஆனால் அபிராமிப்பட்டர் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர், அல்லது இவற்றை அடைந்தால் வாழ்க்கை வெற்றியுடையதாக இருக்கும் என்கிறார்;
1) கலையாத கல்வியும் - கல்வி என்றால் கலையாத மனதையும், ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் மனம்.
2) குறையாத வயதும் - இது  எமக்கு எவ்வளவு வயது சென்றாலும் ஆற்றலும், உற்சாகமும் குறையாத நிலை! 
3) ஓர் கபடு வாராத நட்பும் - எம்மைச் சூழ இருப்பவர்கள் எந்தக் கபடமும் இல்லாவிட்டால் எமக்கு மனதில் தொல்லை இல்லை;
4) கன்றாத வளமையும் - கன்றல் என்றால் ஆடம்பரம், ஆடம்பரம் இல்லாமல் நாம் வாழத்தேவையான வளங்களும், அதாவது எமது தேவைக்கு மீறிச் சொத்துச் சேர்த்து துன்பமுறாத நிலையும்
5) குன்றாத இளமையும் - இளமை எப்போதும் குன்றாமல் 
6) கழுபிணியிலாத உடலும் - உடலைத் துன்புறுத்தும் நோயில்லாத உடலும்
7) சலியாத மனமும் - எந்தக் காரியத்திலும் சலிப்பு வராதம் மனமும்,
 அன்பகலாத மனைவியும்/கணவனும் - எம்முடன் வாழ்க்கையைப் பகிரவந்த மனைவி இருமனமும் ஒருமனமாக வாழும் அன்பு மிகுந்த மனைவியும்,
9) தவறாத சந்தானமும் - ஒழுக்கம் தவறாத குழந்தைகளும் 
10) தாழாத கீர்த்தியும் - எப்போதும் தாழ்ந்துவிடாத புகழும்,
11) மாறாத வார்த்தையும் - சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வலிமையும்
12) தடைகள் வாராத கொடையும் - நாம் யாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற போது வாழ்க்கையின் எமது நிலையால் அந்தக்கொடை தடைபடக்கூடாது.
13) தொலையாத நிதியமும் - நாம் சேர்ந்த நிதி களவுபோய் துன்பமுறாத நிலையும்
14) கோணாத கோலுமொரு - நாம் வாழும் நாட்டில் செங்கோல் - நீதி வழுவாமல் இருக்க வேண்டும்
15) துன்பமில்லாத வாழ்வும் - 
16) துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் - அந்த அம்பிகையின் பாதத்தில் எப்போதும் அன்பும் அத்தகைய அம்பிகையில் அன்பு மிகுந்த தொண்டருடன் கூட்டும் 
என்ற இந்த பதினாறு பேறும் வாழ்வில் இருந்தால் வாழ்வு வெற்றியுள்ள வாழ்வு என்று வரையறுத்துள்ளார்.

Friday, September 18, 2020

தலைப்பு இல்லை

நவீன மனதிற்கு எப்படி பண்டைய யோக விஞ்ஞானத்தை பாரம்பரியம் மாறாமல் கொண்டு சேர்ப்பது என்ற இலக்கை சிருஷ்டி கொண்டுள்ளது! 

இதன்படி யோகம் பயிலும் ஒருவர் தனது கருவிகளான மனம், பிராணன், உடல் ஆகிய மூன்று கருவிகளையும் எப்படி செம்மைப்படுத்தி தனது தொழில், குடும்பம் போன்ற பௌதீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்வின் உயர்ந்த நோக்கத்தினை நோக்கி தன்னை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையை அறிந்துக் கொள்ளலாம். 

சிருஷ்டியின் முதல் முயற்சியாக மானச யோக வித்யா கற்கை நெறி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் அடிப்படைக் கற்கை நெறி மூன்று நிலைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

1. மனம்

2. பிராணன்

3. உடல் 

இவை மூன்றையும் சரியான யோக விஞ்ஞானப் புரிதல் அடையும் ஒருவன் யோக சாதனைக்குத் தயாராவான். 

தற்காலத்திற்கு ஏற்றவகையில் கோட்பாட்டறிவு காணொளி மூலமும், பின்னர் சந்தேகம் தெளிதல் zoom வழியாகவும், இறுதியாக ஒவ்வொரு மாணவரது புரிதலையும் அனுபவமுள்ள ஆசிரியருடனான தனிப்பட்ட கலந்துரையாடல் மூலமும் தெளிவு பெறும் வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆர்வமுள்ளவர்கள் கீழ்வரும் படிவத்திற்கு விண்ணப்பிக்கவும் விபரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

https://forms.gle/8wdbGstN8rUzUSse7


Thursday, September 17, 2020

தலைப்பு இல்லை

இராவணன் நீர்வீழ்ச்சியில் ஒரு நாள்!

மகாலய அமாவாசையும் பித்ருக்களும்

மனிதர்களுக்கு ஸ்தூல, சூக்ஷ்ம, காரணம் என்ற மூன்று வகைச் சரீரம் இருக்கிறது.  

இறப்பு என்பது ஸ்தூலத்தை விட்டு விடுவது; அப்படி ஸ்தூல உடல் விடும் போது வாழ்ந்த காலத்தில் ஏற்படுத்திய பதிவுகள் அனைத்தும் பதிந்து அவை அந்த ஆன்மாவை பூவுலகுடனேயே சுற்றிக் கொண்டிருக்கச் செய்யும்; இந்த நிலையில் இதை வாசனா சரீரம் என்பார்கள், 

இறந்த பின்னர் கர்மங்கள் எதையும் செய்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாததால் அந்த ஆன்மாவிற்கு தனது மனோ சரீரத்தினால் தொடர்பு கொள்ளப்படக் கூடிய உறவுகளின் உதவி தேவை! இந்த உதவியைத் தான் பித்ரு தர்ப்பணம் என்கிறோம்! தர்ப்பணம் என்றால் திருப்தி என்று அர்த்தம்! இப்படி வாசனை சரீரத்தில் அலைந்து கொண்டிருக்கும் எமது அன்புக்குரியவர்களை அந்த வாசனைகள் நீங்கி திருப்தியுற்று அடுத்த நிலைக்கு செல்வதற்கான பொறிமுறை தான் தர்ப்பணம்! 

அவர்கள் தமது வாசனைகள் எனப்படும் நிறைவேறாத இச்சைகள், குழப்பங்கள் இருக்கும் போது அவர்களுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ளக் கூடிய உறவினர்களின் மனதில் தமது தேவைகளை உணர்ச்சிகளாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது பூவுலகில் வாழ்பவர்களுக்கு மனத் துன்பங்கள், குழப்பங்கள் வரலாம்! 

ஆகவே வாசனை சரீரத்தில் சிக்கியிருக்கும் ஆன்மாக்களின் துன்பத்தை தர்ப்பணத்தின் மூலம் நீக்குவதால் அவர்கள் திருப்தியுற்று வாழ்த்துவதால் எமக்கு இன்பமான வாழ்க்கை கிடைக்கும் என்பது பித்ரு தர்ப்பணத்தின் அடிப்படைத் தத்துவம்! 

அனைவருக்கும் அவரவர் பித்ருக்கள் மோக்ஷ நிலை பெற்று திருப்தியுற்று நல்வாழ்க்கை கிடைக்க இந்த நாளில் பிரார்த்தனைகள்!


Wednesday, September 16, 2020

தலைப்பு இல்லை

அனேகர் தமது அனுபவத்தின் படியே உரையாடுவார்கள்! கருத்துரைப்பார்கள்!
அனுபவம் இன்பமானால் கருத்தும் இன்பமாக இருக்கும்.
அனுபவம் துன்பமானால் கருத்தும் துன்பமாக இருக்கும்.
காதல் கசந்தவனுக்கு காதலிக்கிறேன் என்று சொன்னால் விஷமருந்தப் போகிறாயா என்பான்! 
இரு மனம் ஒரு மனமாகி காதலின்பம் கண்டவன் காதலித்துப் பார் என்பான்! 
மனம் அனுபவத்தைப் பற்றி சித்தத்தில் சேர்க்க சித்தம் மீண்டும் மீண்டும் இயங்கி தன்னுடைய பதிவுதான் உண்மை என்று நம்பவைக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும்! 
சித்தத்தின் இந்த முயற்சி தான் நாம் ஒரு செயலைச் செய்யும் போது எமக்கு ஏற்படும் இனம் புரியாத பயமும், குழப்பமும், செயல் வெற்றி பெறுமா என்ற நம்பிக்கையீனமும்!
ஒவ்வொரு செயலும் வெற்றி பெற ஒரு விதியுண்டு! அந்த விதியை மதியாகிய மனத்திற்கு பழக்கினால் மனம் திருப்தியுறும்! குழப்பம் தீரும்! 
ஆகவே எவராவது எமது ஆற்றலைக் குறைக்கும் வகையில் தடையிட்டால் அவரது அனுபவத்திலிருந்து அப்படிப் பேசுகிறாரேயொழிய அது அறுதியான உண்மையாக இருக்க முடியாது என்பதை அறிந்து கொண்டு அந்தச் செயலை எப்படி சரியாக முடிப்பது என்ற விதியை அறிய முயற்சியுங்கள்!

Monday, September 14, 2020

தலைப்பு இல்லை

இது நீங்கள் அனைவரும் உங்கள் மனம் திறப்பதற்கான பதிவு!

இந்தப் பக்கத்தில் நாம் எழுதும் எமது எழுத்துக்கள் உங்களிற்கு பயனுள்ளதா? 

உங்கள் மனதில் சட்டெனத் தோன்றும் ஒரு வரியை Comment ஆக இடுங்கள்! புகழாரமாக மட்டும் இருக்கத் தேவையில்லை! குறைகளை, குற்றங்கள் இருப்பினும் சுட்டிக் காட்டலாம்!


Saturday, September 12, 2020

தலைப்பு இல்லை

பலருக்கு ஆன்மீகம் கற்கிறோம், யோகம் பழகுகிறோம் என்றவுடன் தாம் ஏற்றிருக்கும் கடமைகளிலிருந்து தப்பி எங்கேயோ வானுலகம் போகப் போகிறோம் என்ற எண்ணம் தான் வருகிறது!

இறைவனை அறிதல், பரம்பொருளை அடைதல் என்பவையே வாழ்க்கையின் இறுதி இலட்சியம்! மிக உயர்ந்த செயல் என்றால்,

கற்கும் கல்வி

செய்யும் தொழில்

வாழும் குடும்பம் 

எமது உடல்

எமது மனம் 

ஆகியவற்றை செம்மைப்படுத்தாமல் கண்களை மூடி தியானம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில்தான் இருக்கிறார்கள் பலர்! 

முதலில் மனதைச் செம்மைப்படுத்தி,

பின்னர் உடலைப் பலப்படுத்தி,

அதன் வழி,

நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளைச் செய்து கொண்டு, எமக்கு அமைந்த தொழில், குடும்பத்தை சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வைத்துக் கொண்டு, இவை எல்லாவற்றிற்கும் மேலே ஒரு உண்மை, சக்தி இருக்கிறது அதை அறிய வேண்டும் என்ற முயற்சியுடன் இருப்பவனுக்கு உயர்ந்த வாழ்க்கைக்குரிய விசா கிடைக்கிறது! 

அப்படியல்லாமல் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று தப்பி விசா எடுத்து ஓடினால் ஆன்மீக வாழ்க்கையும் அதேபோல் தான் துன்பமயமாகத் தான் இருக்கும்!

ஆகவே யோகம் பயில்கிறோம், ஆன்மீக வாழ்க்கை வாழ்கிறோம் என்று அர்த்தமற்ற வெளிவேஷமின்றி அகத்தை மேம்படப் பாடுபடவேண்டும்! கர்மத்தால் அமைந்த வாழ்க்கையை செம்மையுற வாழவேண்டும்!    


தலைப்பு இல்லை

நாம் பாவிக்கும் யந்திரங்களுக்கும் எமது மனதிற்கும் எப்போதும் ஒரு நுணுக்கமான தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்! 

எமக்குள் ஒரு சமநிலை இருந்தால் நாம் தினசரி பாவிக்கும் சடப் பொருட்கள் ஏதோ ஒருவித அறிவினால் எம்முடன் தொடர்புபட்டு எமக்கு உதவக்காத்திருக்கிறது என்பதை பல தடவை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். 

எனது Car இதுவரை ஒவ்வொரு முறை பழுதாகும் போதும் என்னை பிரச்சனைக்குள்ளாக்காமல் அருகில் தொழில்நுட்ப உதவி கிடைக்கும் இடத்திலேயோ, நிலமையை இலகுவாக சமாளிக்கக் கூடிய உதவி உள்ள வகையிலேயே பழுதாகியிருக்கிறது! இவை அனைத்தும் எழுந்தமானமாக இருந்தாலும் அதற்குள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சிக்கலான ஒரு ஒழுங்கு இருக்கிறது!

இந்த தைரியத்தில் காரில் இதுவரை hydraulic Jack எடுத்துச் சென்று பாவித்ததில்லை என்பது risk ஆன ஒரு உண்மை!    


தலைப்பு இல்லை

உண்மை சிவதொண்டன் பண்புகள் பற்றி சிவயோக சுவாமிகளின் பாடல்!

சிவபரம்பொருள் பற்றி வாதிடுவோர் அறிவிலேற்றவேண்டியவை! 

பகுதி - 01

கடவுளை எங்கும் கண்டுகளிப்பார் 

மெய்யடியார்கள் ஓம்

காமக்குரோத மோகம் நீக்கிக் கண்டு களிப்பார் மெய்யடியார்கள் ஓம்

திடமுடன் தியானம் செய்து களிப்பார் 

மெய்யடியார்கள் ஓம்

தீவினை நல்வினை கண்டுகளிப்பார்கள் மெய்யடியார்கள் ஓம்

படமுடியாத துயரம் வரினும் கண்டுகளிப்பார்கள் மெய்யடியார்கள் ஓம்

பாரும்விண்ணும் ஒன்றாய்ப் பரவுவர் 

மெய்யடியார்கள் ஓம்

நடனமிடும் திருவடி கண்டுகளிப்பார் 

மெய்யடியார்கள் ஓம்

நமச்சிவாய வாழ்கவென்று நவிவர் 

மெய்யடியார்கள் ஓம்

ஆதியும் அந்தமும் நமக்கிலையென்பார் மெய்யடியார்கள் ஓம்

அன்புசெய் பத்தரை என்றும் மறவார் 

சிவனடியார்கள் ஓம்

சாதிசமயப் பற்றினை விட்டார் 

மெய்யடியார்கள் ஓம்

சந்ததம் மோன நிலை தவறாதார்

மெய்யடியார்கள் ஓம்

மன்னா இளமை என்றும் மகிழார் 

மெய்யடியார்கள் ஓம்

ஓதி ஓதி உமத்தராவார் 

மெய்யடியார்கள் ஓம்

உண்மை முழுது என்றும் சொல்வார் 

மெய்யடியார்கள் ஓம்

தொடரும்....

நற்சிந்தனை - 1958


Friday, September 11, 2020

தலைப்பு இல்லை

சிவயோகசுவாமிகளின் சிவயோகப்பாடல்கள் ஐந்து

தலைப்பு இல்லை

சிவயோக சுவாமிகளின் யோக சாதனைப் பாடல்கள்! 

பாடல் - 01

இந்தப் பாடல் தன்னையறிய வேண்டும், அதற்கு தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மனதிற்கு பக்குவம் வேண்டும், அந்தப் பக்குவத்திற்கு பற்று நீக்க வேண்டும், சிவபரம்பொருள் எம்மைக் காத்திட வேண்டும்! மனதில் விருத்தி அற்ற எண்ணங்களற்ற நிலை வேண்டும் என்று வேண்டும் பாடல்!


சிவயோக சுவாமிகளின் என் குருபர புங்கவ சிங்கமே

ஈழத்துச் சித்தர் மரபில் சிவயோகர் சுவாமிகள் அற்புதமானவர்! மற்றெல்லாச் சித்தர்களும் தமது சித்துக்களாலும் ஆற்றல்களாலும் தமது காலத்தில் வாழ்ந்தவர்களை உயர்த்தவும், அருளவும் செய்த போது, யாழ்ப்பாணத்திற்கேயுரிய புலமை மரபையும், சித்தர் நெறிக்குரிய அறிவினை, அனுபவத்தை நூலாக்கி காலம் கடந்து நிற்கும் பணியைச் செய்து நற்சிந்தனை தந்தவர்!

2003ம் ஆண்டளவில் யாழ் சிவதொண்டனில் செல்லத்துரை சுவாமியை சந்திக்கும் போது “நற்சிந்தனை படியும்” என்று சொல்லி நற்சிந்தனை புத்தகம் தந்தார்! ஒரு நான்கு மாதம் அவருடன் தினசரி நெருங்கிய உரையாடல் இருந்தது! அதில் குண்டலினி யோக நெறி பற்றியும், திருமந்திரம் பற்றியும் உரையாடக் கிடைத்தது!

நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பர் சாந்தரூபன் அவர்கள் காலையில் வாட்ஸப்பில் இந்தப் பாடலை அனுப்பினார்! பாடல் சிவயோக இரகசியத்தைச் சொல்லுகிறதே என்று மனம் மகிழ்ந்தது!

இந்தப் பாடல் தொகுப்பு சிவ யோக சுவாமிகளின் நற்சிந்தனையில் இருக்கும் எங்குருபர புங்கவச் சிங்கமே என்ற சிவபரம்பொருளை குருவாக அல்லது குருவை சிவப்பரம்பொருளாகக் கொண்டு தனக்கு யோக சித்தி வேண்டிப் படிக்கும் பாடல்!

இந்தப்பாடல்களுக்கு நாம் பொருள் கூறுகிறோம் என்று எவரும் எண்ணக்கூடாது! இவை சிவயோக சுவாமிகளின் உயர்ந்த அனுபவம்! பாடலைப் படிக்கும் போது மனதில் ஏற்பட்ட அனுபவத்தை எமது வார்த்தைகளில் தொகுத்துத் தந்துள்ளோம்!

முதல் இரண்டு பாடல்களிலும் ஒரு சாதகன் அறிய வேண்டியதையும், விலக்க வேண்டியதையும் சுவாமிகள் குரு நாதரிடம் வேண்டுதலாக வைத்து தனது குருபக்தியைத் தெரிவிக்கிறார்!

மூன்றாவது பாடலில் உயர்ந்த சிவயோக அனுபவத்தை தனக்கு வேண்டுகிறார்.

நான்காவது பாடலில் அந்த உயர்ந்த அனுபவம் வாய்த்த பின்னர் தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை வேண்டுகிறார்.

ஐந்தாவது பாடலில் சிவயோகத்தின் உயர்ந்த நிலையான ஐந்தெழுத்தால் மூன்றுடலைச் சேர்க்கும் உயர்ந்த இரகசியத்தைப் போதிக்கும்படி வேண்டி அதற்குத் தடை ஆணவ மலம் என்றும் அதன் நீக்கம் என்றும் வேண்டுகிறார்! சிவபரம்பொருளின் பெருமையுடன் பாடல் முடிகிறது!

இந்தப் பாடல் தொகுப்பு யோக சாதனை செய்பவர்களுக்கு நல்ல தினசரி அப்பியாசம்!


Thursday, September 10, 2020

தலைப்பு இல்லை

Vishuddhi Magga is a step by step guide to enlightenment of Buddhist meditation practice; I was learning this;

It deal with the purification of mind 

First chapter is purification of conduct - sīla-visuddhi

I made as simple diagrams for understanding! 

Sharing here for interested serious practitioners of meditation


தலைப்பு இல்லை

ஒளி பொருந்திய சலனிக்காத மனமும் 

அறிவொளி நிறை புத்தியும்

எஃகுபோன்ற உடலும்

சலிக்காத செயலூக்கமும் 

அனைத்திலும் நன்மை காணும் கண்களும்

குறையாத ஆற்றலும் 

எனைக் காண்போர் நினைப்போர் எல்லாம் எல்லா நலனும் பெற வேண்டும் 

என்ற வரம் அருள்வாய் அன்னையே!

**************************************************

கலையாத கல்வியும் குறையாத வயதும் 

ஓர் கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் 

குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் 

அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் 

மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் 

கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் 

அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அம்ருதேஸ்வரி


Wednesday, September 09, 2020

தலைப்பு இல்லை

My team's wonderful commitment to provide quality Healthy vegetable through natural farming methods; 
All the credits goes to them, I am just an igniter  
மல்லாவிப் பக்கம் செல்லுபவர்கள் எமது தோட்டத்து உரம் பூச்சிக்கொல்லி அற்ற இயற்கை விவசாய மரக்கறிகளை விவசாயத் திணைக்களத்தின் அம்மாச்சி உணவகத்தில் பெற்றுக் கொள்ளலாம்!
#Sri SHAKAMBHARA NATURAL AGRICULTURE FARMS 

Tuesday, September 08, 2020

தலைப்பு இல்லை

தாடி குறைத்த மீசைக்கார வேஷம்

தலைப்பு இல்லை

நான் தொழில் முறை ஆசிரியன் அல்லன்! அறிந்ததை உணர்ந்ததை பகிரவேண்டும் என்ற பேராவலால் சந்தர்ப்பவசத்தால் ஆசிரியன் ஆக்கப்பட்டவன்! 
கற்ற அனைவரும் அவர்கள் புரிதலை மேம்படுத்தியிருக்கிறேன் என்ற வார்த்தையைப் பின்னூட்டமாகச் சொன்னது மிகப் பெரிய சந்தோஷம்! 
அறிவு ஒளி பொருந்திய விளக்கு! அது இன்னொரு திரியாகிய மனதை ஒளியேற்ற வேண்டும்! 
அப்படியொரு முயற்சியில் மனம் பற்றிய யோக வித்தை அடிப்படைகளைக் கற்றுக் கொண்ட முப்பது மாணவர்கள் இன்று தமது கற்கையைப் பூர்த்தி செய்துள்ளார்கள்! 
மிகச் சுவாரசியமான இரண்டு வாரங்கள்! சிரத்தையான கற்றல் தாகம் கொண்டவர்கள்! 
ஆர்வமும் சிரத்தையும் கொண்ட குழாமுடன் பயணம் தொடரும்!

தலைப்பு இல்லை

மனிதன் சிந்திக்கும் விலங்கு;
இன்று புத்தாக்கம் (innovation) பற்றி அதிகம் உரையாடுகிறோம். புத்தாக்கம் மனதின் ஒரு ஆற்றல்! அதற்கு மனித மனம் சிந்திக்கப் பழகவேண்டும். 
எப்படிச் சிந்திப்பது என்பதற்கு சிறு படிகளை வரைபு படுத்தியுள்ளோம். இந்த முறையை நீங்கள் எந்தப் பிரச்சனைக்கு மாதிரியாக (model) பயன்படுத்த முடியும்!
மாணவர்கள் தமது பரீட்சை வினாவிற்கு எப்படி பதில் எழுதுவது என்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம்;
அன்றாடம் எமது நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்! 
முதலில் நாம் அணுக வேண்டிய பிரச்சனையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள அதைப் பற்றிய கண், காது போன்ற புலன்களின் அவதானம் மிக அவசியமானது! 
பிறகு புரிந்துகொண்டதை உங்கள் மனதிற்குப் புரியும் வண்ணம் எழுத்தில் வரையறுத்துக்கொள்ள வேண்டும். 
அப்படி வரையறுத்துக் கொண்ட ஒவ்வொன்றிற்கும் தீர்வு என்ன என்பதைப் எழுதிக் கொள்ள வேண்டும். 
பிறகு தீர்வுகள் ஒவ்வொன்றையும் இணைத்து அதன் விளைவுகளைச் சிந்தித்து மாதிரியுருப்படுத்த வேண்டும். 
இப்படிச் சிந்தித்து மனதில் உறுதி ஏற்பட்ட பிறகு அந்தத் தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தலைப்பு இல்லை

நாம் பூமியிற்கு வந்திருப்பதோ சிறு விஜயம், ஆகவே நேரத்தை விரயம் செய்யாமல் எம்மையும் எம்மைச் சூழ உள்ளவர்களையும், சூழலையும் இருப்பதை விட மேம்படுத்தப் பாடுபட்டு விட்டு மீளச் செல்வோம்!

Let us strive to make this earth a better place by living in alignment with nature, improving us and empowering those who around us – We visited earth for short time, we'd be gone when the time is ripe so let's not squander even a single minute


Saturday, September 05, 2020

தலைப்பு இல்லை

மனிதனை நெறிப்படுத்த வந்த தத்துவங்கள் மதமாகி குழம்பியது மனித மனத்தின் ஆணவத்தால்! 

எதிரி வெளியே என்று ஒரு மயக்கத்திலேயே உள்ளே தாழ்ந்து போகிறோம்! எமது சிந்தனைக் குறைபாடுகளால் தான் நாம் துன்புறுகிறோம் என்பதை எப்போதும் உணர்வதில்லை!

ஒரு நாள் எனக்கு முதுமை வரும், அது தவிர்க்க முடியாது என்பது அறிந்தால் இளமையாக இருக்கிறோம் என்று எல்லோரையும் எள்ளி நகையாடும் ஆணவம் கட்டுப்படும்!

ஒரு நாள் எனக்கும் நோய் வரும், அது தவிர்க்க முடியாது என்று அறிந்துகொண்டால் ஆரோக்கியமான உடலை வைத்துக் கொண்டு காட்டும் திமிர்த்தனம் வராது!

ஒரு நாள் எனக்கும் மரணம் வரும், அது தவிர்க்க முடியாது என்பது ஞாபகம் இருந்தால் இறக்காமல் இருக்கப் போகிறோம் என்ற மாயையில் சொத்துச் சேர்ப்பது, தனது என்று கட்டுப்படுத்தி வைக்கும் மாயை ஆணவம் குறையும்!

நான் பற்றிக் கொண்டிருக்கும் எல்லாம் ஒரு நாள் என்னை விட்டுப் போகும், அப்படிப் போகும் போது அது தவிர்க்க முடியாது என்பதை அறிந்தால் எல்லாவற்றிற்கும் புலம்பிக் கொண்டிருக்க மாட்டோம். 

நான் இப்போதோ, எப்போதோ செயலின் விளைவு தான் எனக்கு நடப்பவை என்ற கர்ம விதி புரிந்தால் எல்லாவற்றிற்கும் மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்!

மதம் வளர்த்தல் என்பது மற்றவர்களைத் தூற்றுதல் என்ற ஆணவச் செய்கையாக இருக்கக் கூடாது; தாம் பின்பற்றும் வழியின் ஆழமான தத்துவங்களை தாமும் பயிற்சித்து மற்றவர்களும் அந்த நிலையடைய வேண்டும் என்ற பரந்த மனதுடன் செயல்படும் உயர்ந்த பண்பாக இருக்க வேண்டும்! 


Friday, September 04, 2020

தலைப்பு இல்லை

Today I met the well known intellectual celebrity of our nation Dr. Harsha Subasinghe; CEO of Codegen and having his PhD in Artificial Intelligence. 
Visionary inspirational leader; He is visualizing the highly developed human mind on future generations. In his vision meditation and mind cultivation can be a essential tool for future generation to create innovation, prosperity and healthy lifestyle;
He is an exemplary; UK return and invested his money to develop his mother land! He wanted to create a lifestyle and ecosystem to stay higher minds - techno experts to develop the nation!
His team developed Vega EVX; it is an all-electric battery-powered two-seater sports car developed by Sri Lankans, 

Tuesday, September 01, 2020

தலைப்பு இல்லை

ஒருவன் தனது அலையும் மனதைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் பயன்பெற வேண்டுமாக இருந்தால், 

1) முதலில் மனதின் இயல்புகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

2) மனதின் ஆற்றலை வீணாக்கும் வாழ்க்கை முறையிலிருந்து வெளிவந்து மன ஆற்றலை அதிகரிக்கும் வாழ்க்கை முறையை தன்னில் உருவாக்க வேண்டும்.

3) தினசரி தனது மனத்தினைப் பயிற்றுவிக்க வேண்டும். 

இதைப் போதிப்பதுதான் யோக வித்யா அல்லது யோக வித்தை அல்லது யோக சாத்திரம்!


தலைப்பு இல்லை

தமிழி பதிப்பகத்தினால் சிவயோக ஞானத்திறவுகோல் நூல் சலுகை விலையில் விற்கப்படுகிறது!
தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்! இந்த வாய்ப்பு இந்தியாவிற்குள் மாத்திரம்! 
ஒரு புத்தகத்திற்கு 20%
மூன்று புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால் 30%
அதற்கு மேல் மொத்தமாக வாங்கி நூலகங்களுக்கும், சாதகர்களுக்கு அன்பளிப்புச் செய்ய விரும்புவர்கள் மேலும் விஷேட சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம்! 
அச்சிடப்பட்ட இறுதி 200 பிரதிகள் மாத்திரம் கையிருப்பில் உள்ளது!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...