சித்தர்கள் கூறும் கத்தரி மான்மியம் கீழே,
சித்த மருத்துவத்தில் தேரையர் கத்தரிக் காயைப் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
தேரையர் கரிசல்
பண்டு மாண்ட கிரந்தியைப் பாலிக்கும்
உண்ட கைக்குந் தினவை உண்டாக்கிடும்
நண்டுகிட்டுங்க் குரங்கென நாமாளுங்
கண்டு விட்டது கத்தரிக் காயதே
எக்கால மும்பழகி யில்லாத மானிடர்க்கு
முக்கால முண்டாலும் மோசமிரா - பக்குவமா
யங்கந் தணிய வமாபத்தி யக்கறியாம்
வங்கக்கா யுண்டறிகு வாய்
வழுதலை யாகிய வங்கக் காய்தினப்
பழுதிலை யஃது நற் பத்தியமாகுமே.
கத்தரிகாய் கரப்பான், சொறி சிரங்கைத் தூண்டும்,
எக்காலமும் பழகிய மனிதர்க்கு, அதாவது வழமையாக கத்தரி உண்டு உடல் ஏற்கும் பக்குவம் உள்ளவர்களுக்கு மூன்று நேரமும் உண்டாலும் எந்த துன்பமும் வராது. பத்தியத்திற்கு உகந்தது.
கத்தரியில் பழுக்க விட்டு உண்டால் அது நோயை உண்டாக்கும். பிஞ்சும் காயும் (விதை உருவாக முன்னர் இருக்கும் காய், இதுவே பறிக்கும் பருவம்) முக்குற்றத்தைத் தணிக்கும். உடலிற்கு நலம் தருவது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.