குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 29, 2016

தீபாவளியும் மகாலக்ஷ்மி அருளும்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 
 
 
தீபாவளி என்பது பலகாரம் உண்ணவும், பட்டாசு சுடவும் என்பதை தாண்டி ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தனது மனதில், உடலில் இருக்கும் இருளை அகற்றி முன்னேற வேண்டும் என்று சங்கல்பிப்பதற்குரிய நாளாக எமது முன்னோர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.
தீபாவளி இரவு மனித வாழ்க்கையின் எல்லா வளங்களுக்கும் குறியீடான ஸ்ரீ மகாலக்ஷ்மியை பூஜிப்பதற்குரிய நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மகாலக்ஷ்மியை பூஜித்துவிட்டால் (ஆடம்பரமாக செலவு செய்து லஞ்சம் கொடுத்துவிட்டால்) தமக்கு பணம் வந்து சேர்ந்து விடும் என்று லக்ஷ்மி பூஜை செய்பவர்கள் ஏராளம். இது வெறும் அறியாமை!
மகாலக்ஷ்மி என்பது ஒருவன் தனது வாழ்வில் முன்னேற கைக்கொள்ள வேண்டிய தத்துவம். காத்தல் கடவுள் விஷ்ணுவும் மனைவி லக்ஷ்மி என்று கூறுவதன் உள்ளார்ந்த தத்துவ விளக்கம், ஒருவன் தனது வாழ்க்கையின் கடின உழைப்பால் அடையும் நன்மைகளை லக்ஷ்மி என்ற பண்பினை கொண்டு நிலைத்திருக்க செய்ய வேண்டும் என்பதே! மகாவிஷ்ணு என்பது மனிதனின் ஆன்மாவின் ஆற்றல் என்றால் அந்த ஆன்ம ஆற்றலுக்கு இருக்க வேண்டிய பண்பே மகாலக்ஷ்மி தத்துவம்.
இதனை விளங்கி கொள்ள மகாலட்சுமி எப்படி தோன்றினால் என்ற புராண வரலாறு மறைமுகமாக விளக்கும், தேவர்களும் (மனிதனின் நல்லெண்ணம்) அசுரர்களும் (மனிதனின் தீய எண்ணம்) மேருவை மத்தாக (சுழுமுனை நாடி ஓடும் முள்ளந்தண்டு) வாசுகி என்ற பாம்பை (வாசி எனும் மூச்சு காற்றை) இயக்கி அதில் ஆலகால விஷத்தை கக்க, சிவன் (ஆன்மா) ஏற்க சக்தி (பிராணன்) கண்டத்தில் (விசுத்தி) சக்கரத்தில் தடுக்க, பின்னர் அமிர்த்தத்துடன் தோன்றிய சங்கு, அமிர்தம் போன்ற அறிய பொருட்களுடன் அவற்றை பரிபாலிக்கும் தெய்வமாக தொன்றயவள் மகாலக்ஷ்மி.
இந்த கதையில் இருந்து விளங்கும் உண்மை மகாலட்சுமி என்பது ஒருவன்
௧. தனது கடின உழைப்பால் / யோக சாதனையினால் அடையும் ஆற்றல்களை காக்கும் தெய்வ பண்பினை குறிக்கும் தெய்வ சக்தி.
௨. மேலும் உயர்ந்த வெற்றிகள் நீண்ட, தொடர்ச்சியான, தளராத, கடும் உழைப்பின் பின்னர் கிடைப்பது.
௩. மகாலக்ஷ்மியை “கர்ம பிரபாவ பிரகாஷினி” என்று சாத்திரம் குறிப்பிடும். இதன் பொருள் எங்கு கடின உழைப்பு இருக்கிறதோ அங்கு பிரகாசிப்பவள் என்பதாகும்.
௪. தனது வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாதவர்கள், சோம்பித்திரிபவர்கள், வேலை செய்ய மறுப்பவர்கள், துர் பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மனவுறுதி அற்றவர்கள், குறை கூறுபவர்கள் இவர்களிடம் மகாலக்ஷ்மி பண்பு வாய்ப்பதில்லை.
௫. வலிமையற்ற மனம் உடையவர் வாழ்க்கையின் தடைகளை உடைத்து, தாண்டி முன்னேற கஷ்டப்படுவர்.
ஆகவே தீபாவளி என்பது தனது மனதில் இருக்கும் வலிமையற்ற இருளான எண்ணங்களை நீக்கி வளமான வாழ்க்கையினை பெறுவதற்குரிய சங்கல்பத்தை/உறுதியை ஏற்படுத்திக்கொள்வதற்கான நாளாகும். ஆகவே இந்த தீபாவளி நாளில் அனைவரும் கீழ்வரும் உறுதிமொழிகளை சங்கல்பித்துக்கொள்வோம்.
1. எனது வாழ்வினை உறுதியான பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்தும்படி மாற்றிக்கொள்வேன். எனது நேரத்தினை எக்காரணம் கொண்டும் வீணாக்க மாட்டேன். எனது தவறுகளை அனுபவங்களாக்க கற்றுக்கொள்வேன்.
2. எனது வாழ்வில் கஷ்டங்கள் ஏற்படும்போது மனதினை பலவீனமாக்கும் சிந்தைகளில் செலுத்தாமல், அந்த கஷ்டங்களை தீர்ப்பதற்குரிய வழிகள் என்ன என்பதை சிந்தித்து அவ்வழியில் செயற்படுவேன்.
3. வாழ்வு எத்தகைய இருளாக இருப்பினும் மனது ஒளியுடன் இருக்கும் படி உயர்ந்த உணர்வுடன் செயற்பட என்னை தயார்படுத்திக் கொள்வேன். இதற்கு என்னை விட உயர்ந்த தெய்வ சக்தியுடனும், குருவின் வழிகாட்டலையும் எப்போதும் பெற்றுக்கொள்வேன்.
4. எனது உடலை எப்போதும் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு விடாமல் காப்பாற்றிக் கொள்வேன். எனது ஆரோக்கியத்தை பாதுகாப்பேன். மற்றவர்களை சங்கடப்படுத்தும் தன்மையினை ஏற்படுத்த மாட்டேன்.
5. எனது வாழ்வின் அனைத்து முக்கிய முடிவுகளிலும் எனது குடும்பத்திடம் ஆலோசித்து நடப்பேன். எனது மனைவி/கணவன், பிள்ளைகளை மதித்து நடப்பேன். எப்போதும் குடும்ப ஒற்றுமையினை பாதுகாப்பேன்.
6. தினசரி எனது தாய், தந்தை, முன்னோர்கள், குருமார்கள், இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை ஆராதிப்பேன். எந்த முக்கிய காரியத்தை தொடங்குவதானாலும் அவர்களை மானசீகமாகவேனும் வணங்கியே தொடங்குவேன்.
7. இன்றைய, இந்த வருட தீபாவளி தினத்தில் எனது இச்சா சக்தி (will power) எனது வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் எனது இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு உறுதியுடன், உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க தொடங்குவேன்.
8. என்னில், எனது இல்லத்தில், மகாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். என்னிடம் உள்ள மகாலக்ஷ்மியின் ஆற்றலை எக்காரணம் கொண்டும் வீணாக தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.
மேற்குறித்த உறுதிமொழியுடன் தீபாவளியை கொண்டாடும் எந்த நபரும் வரும் வருடம் பூராகவும் உறுதியான, இன்பமான வாழ்க்கையினை பெறுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை!
இந்த உறுதிமொழிகளை மனதில் ஏற்படுத்திக்கொண்டு அதன் படி நடந்தால் நிச்சயம் உங்கள் வாழ்வினை அன்னையின் ஆற்றல் கொண்டு ;
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும்
பொருள் நலம் பொறுமை ஈகை வாழ்வில் பொருந்திட செய்து
ஆயுள், ஆரோக்கியம், வீரம், அசைந்திடா பக்தி அன்பு
தேயுறா செல்வம் கீர்த்தி என்பவற்றை அருள்வாள் என வாழ்த்துகிறோம்!a

3 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...