மகாளய பட்ச பித்ரு மோக்ஷ சாதனை

எமது பாரம்பரியத்தில் முன்னோர்களை நினைப்பது என்பது முக்கியமான ஒரு கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொள்வதற்கு சில அடிப்படைகளை விளங்கி கொள்ள வேண்டும். ஆன்மா, உடல், பிராணன் ஆகிய மூன்றும் சேர்ந்து ஸ்தூல உடல் உருவாகிறது. இந்த ஸ்தூல உடலில் ஆன்மா இருக்கும் போது மட்டுமே உயிர் இருக்கிறது என்று கூறுகிறோம். ஸ்தூல உடல் அழிந்தவுடன் ஆன்மா வாசனா சரீரம் என்ற உடலுடன் தான் இந்த ஸ்தூல உடல் வாழ்க்கையால் பெற்ற அனுபவங்களை காவிக்கொண்டு வெளியேறுகிறது. இதுவே முதலாவது சூக்ஷ்ம தேகம். இந்த உடலினால் அவன் இறப்பிற்கு முன்னர் பெற்ற அனுபவங்களை அவனில் உறைந்து காணப்படும். இதையே நாம் ஆன்மா என்றும் ஆவி என்றும் கூறுகிறோம்.
ஒருவர் இறந்தபின்னரும் இந்த வாசனா சரீரத்தின் காரணமாக அவர்களுக்கும் எமக்கும் இருக்கும் தொடர்பு அறுவதில்லை. ஆகவே இறந்தபின்னரும் அவர்கள் இந்த வாசனா சரீரத்தின் துணைகொண்டு எமக்கு உதவியும் அதேவேளை நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றவும் அவர்கள் சந்ததியினரை தூண்டிய வண்ணம் இருப்பர். இதனால் அவர்கள் இந்த வாசனா சரீரத்தை இழக்க முடியாமல் உழன்று கொண்டிருப்பர். இந்த நிலையினால் அவர்கள் அடைந்த புண்ணியத்தை பெற்று மேலே செல்லவும் முடியாமல், வேறு மனித உடல் எடுக்கவும் முடியாமல் மிக நுண்மையாக தம்முடைய சந்ததியினரை தடைபடுத்தியவண்ணம் இருப்பார்கள்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் அவர்களுடைய வாசனா சரீரம் மிகுந்த எதிர்பார்ப்பினை தம்முடைய சந்ததியினரிடம் கொண்டிருப்பர். இந்த நிலையினை நிவர்த்தி செய்ய மானச, பிராண சக்திகளை கொண்டு ஸ்தூல உடலில் இருக்கும் மனிதர்கள் தமது முன்னோர்களுக்கு, நெருங்கியவர்களுக்கு உதவ முடியும்.
வெறும் மகாளய பட்சத்தில் கீழ்வரும் மந்திர சாதனையினை கடைப்படிப்பதன் மூலம் கீழ்வரும் நன்மைகளை அடைய முடியும்.
·         இந்த சாதனையினால் உங்கள் முன்னோர்களின் வாசனா சரீரம் கரைந்து முக்தி அடைவார்கள். அவர்களுடைய வாசனைகள் கரைந்து நல்ல பிறப்பினை அல்லது மேலான சூக்ஷ்ம நிலைகளை அடைவார்கள்.
·         சாதகன் தனது முன்னோர்களின் சூக்ஷ்ம வாசனைகளால் ஏதாவது த்டைபட்டிருந்தால் (இதையே பித்ரு தோஷம் என்பார்கள்) அந்த தடைகள் நீங்கி நன்மை அடைவார்கள்.
·         சாதகன் பித்ருக்களின் ஆசியினை பெறுவதால் வியாபாரம், பணம், செல்வம் போன்றவற்றில் முன்னேற்றத்தினை பெறுவான்.

தொடங்கவேண்டிய நேரம்:
சூரிய அஸ்தமனத்தில், சூரியோதயத்திலும் செய்யலாம்,
சூரிய அஸ்தமனம் மிக விசேஷமானது.
§  குளித்து, வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளை துணி ஆசனம், வடக்கு பார்த்து அமர்ந்து செய்ய வேண்டும்.
§  சிவலிங்கம் இருப்பின் நல்லது, இல்லாவிடில் மானசீகமாக மனதில் சிவலிங்கத்தை நினைத்து செய்யலாம்
§  ருத்திராக்ஷ மாலையில் ஜெபம் செய்ய வேண்டும். பழங்களும், பால் அன்னமும் நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
§  மகாலைய பட்சத்தில் வரும் ஒரு திங்கட்கிழமையில் செய்வது சிறப்பு.

சாதனை முறை

முதலில் கீழ்வரும் குரு நாமாவளியை ஒன்பது தடவை ஜெபிக்க வேண்டும்:

§  ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
§  ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
§  ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
§  ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
§  ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
§  ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
§  ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
§  ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ

பின் கீழ்வரும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஒரு மாலை (108) ஜெபம் செய்ய வேண்டும்.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹோ சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தநான் மிருத்யோர் முஷீய மாம்ருதாத்

அதன் பின்னர் கீழ்வரும் பித்ரு மோக்ஷ மந்திரத்தை இருபத்தியொரு மாலை செய்ய வேண்டும், இயலாதவர்கள் குறைந்தது ஐந்து மாலை செய்யவேண்டும்.

ஓம் ஜூம் ஹ்ரீம் க்லீம் பித்ரு மோக்ஷம் க்லீம் ஹ்ரீம் ஜும் நமஹ

இதன் பின்னர் மீண்டும் ஒருமாலை ம்ருத்யுஜெய மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

பின்பு மனதில் ஒளி வடிவான ம்ருத்யுஞ்ஜெய தேவனை மனதில் இருத்தி தனது பித்ருக்கள் வாசனா சரீரத்தின் பிடியில் இருந்து வெளியேறி முக்தியடைய வேண்டும் என்று பிரார்த்தித்து, பின்னர் தனது முன்னோர்களையும் பிரார்த்திக்க வேண்டும்.
பின்பு பசுவிற்கு பழங்களும், பாலன்னமும் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அவற்றை கடல், ஆறு, குளத்தில் கரைக்கவேண்டும். இந்த சாதனை முடிந்த பின்னர் பாவித்த மாலையினையும் கடலில் விசர்ஜனம் செய்யவேண்டும்.


Comments

  1. GS0038 அருள்முருகன்.
    எமது குருமண்டல குருவிற்கு சிரம்தாழ்த்தி வணக்கம்.பித்ரு மோக்ஷா சாதனை ஒருமுறை செய்தால் போதுமா.
    நன்றி
    பணிவுடன் அருள்முருகன்

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு